Published:Updated:

''அன்வரும் சமீராவும் இயக்குநரை மிரட்டினாங்க..!'' - 'பகல் நிலவு' சௌந்தர்யா

''அன்வரும் சமீராவும் இயக்குநரை மிரட்டினாங்க..!'' - 'பகல் நிலவு' சௌந்தர்யா
''அன்வரும் சமீராவும் இயக்குநரை மிரட்டினாங்க..!'' - 'பகல் நிலவு' சௌந்தர்யா

''அன்வரும் சமீராவும் இயக்குநரை மிரட்டினாங்க..!'' - 'பகல் நிலவு' சௌந்தர்யா

'பகல் நிலவு' பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது. 'ரியல் லவ் ஜோடி' அன்வர் - சமீரா தொடரிலிருந்து வெளியேறியபோது, சீரியல் யூனிட்டில் குரூப்  பாலிடிக்ஸ் நடப்பதாகச் சொல்லியிருந்தார்கள். உடனடியாக சௌந்தர்யா, ஷர்மிளா, சிந்து ஷ்யாம் மூவரும் 'அப்படியெல்லாம் இல்லை' என மறுத்தார்கள். சௌந்தர்யா ஒருபடி மேலே போய் அன்வர் - சமீரா மீதும் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். 'எனக்கும் அன்வருக்கும் இடையில் சில பெர்சனல் பிரச்னைகள்' என்றும் சொல்லியிருந்தார்.

சௌந்தர்யாவிடம் பேசினோம்.

''அன்வரும் கார்த்திக்கும் அண்ணன் தம்பிங்க, நானும் சமீராவும் அக்கா தங்கச்சிங்க'னு கதை தொடங்கின புதுசுலல்லாம் நல்லாதான் போயிட்டிருந்திச்சு. நாலு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். சரியா நாலு மாசமே அந்த ஒற்றுமை இருந்திருக்கும்னு நினைக்கேன். சோஷியல் மீடியாவுல இன்னிக்கு யார் வேணாலும் என்ன வேணாலும் பேசலாம். அதுல வர்ற தகவலை சீரியஸா எடுத்துக்கிட்டுப் பேசறது, பிரச்னைக்குதான் வழி வகுக்கும். இந்த ரூட்லதான் எங்களுக்குள்ளும் பிரச்னை ஆரம்பிச்சது. டீட்டெய்லா பேசி அந்தப் பழைய  குப்பையைக் கிளற நான் விரும்பலை. ஆனா, அன்வரும் சமீராவும் சரியாப் புரிஞ்சுக்கலைனு சொல்வேன். அவசரப்பட்டுட்டாங்க.

அவங்கதான் முதல்ல போய் 'எங்களுக்கு கார்த்திக் - சௌந்தர்யாகூட காம்பினேஷன் சீன் வைக்காதீங்க'னு டைரக்டர்கிட்ட சொன்னாங்க. யூனிட்ல அதுக்குக் காது கொடுக்கலை. உடனே கடைசி நேரத்துல ஷூட்டிங் வராம இருந்து எல்லாரையும் காக்க வைக்கறது மாதிரியான வேலைகளைப் பார்த்தாங்க. அவங்களும் ஒரு லீட் ஜோடிங்கிறதால, இயக்குநருக்கு வேற வழி இல்லாம கடைசியில அவங்க சொன்னதைக் கேட்க வேண்டி வந்தது. ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டத்தட்ட ரைட்டர், டைரக்டரை மிரட்டின மாதிரிதானே இது?

இப்படி ஒரே யூனிட்டுக்குள்ள ஒருத்தர் இன்னொருத்தரைப் புறக்கணிச்சா... பிறகு அவங்களோட எப்படி நட்பு பாராட்ட முடியும்? அதனால, எங்களுக்குள்ளே பேச்சு வார்த்தையே நின்னுடுச்சு. சமீரா வீட்டை எதிர்த்துக் கல்யாணம்  செய்துகொள்கிற மாதிரி சீன் இருக்கும். அதனால அவளுக்கு அழற சீன்கள் நிறைய. ஏற்கெனவே ரியல் லவ் ஜோடிங்கிறதால ரொமான்ஸ் சீன்களும் நல்லாவே இருந்தது. எனக்கு அழற சீன் அவ்வளவா இருக்காது. பொதுவா எமோஷனல் சீன்களை மக்கள் பார்க்கிறாங்கன்னு சொல்வாங்க. இதை நான் சும்மா ஜாலியா ஷூட்டிங் ஸ்பாட்டுல 'நீ அழுதே பார்க்க வைக்கிற'ன்னு சொல்லியிருக்கேன். சமீரா இதை என்ன ஆங்கிள்ல அன்வர்கிட்ட சொன்னாங்களோ தெரியலை, அவரும் சீரியஸா எடுத்துக்கிட்டார். அதோட ஏதோ அவங்க ரெண்டு பேரால மட்டுமே சீரியல் ஓடுற மாதிரியும் நினைக்கத் தொடங்கிட்டார். 

விடுங்க, இப்ப வெளியில போயிட்டாங்க. ஆனா, போன பிறகு சேற்றை வாரி இறைக்கலாமா... ஒரு சீரியல்ல ஐம்பது ஆர்ட்டிஸ்டுகளுக்கு மேல இருக்காங்கனு வெச்சுக்கோங்க. ரெண்டு பேர் வெளியேறி, மத்த மொத்தப் பேரையும் குற்றம் சொல்றாங்கன்னா யார் மேல தப்பு இருக்கும்னு நீங்களே முடிவு செய்துக்கோங்க.

சீரியல் புரொடியூசர் இவங்கமேல ரொம்பவே வருத்தத்தில இருக்காங்க. இவங்க பண்ண வேலையால இப்போ தேவையில்லாம கேரக்டர்கள்ல மாற்றம் செய்யவேண்டியிருக்கு. என்னைப் பொறுத்தவரை இனி இந்த விஷயம் குறித்து எதுவும் பேசக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். கார்த்திக்கும் டைரக்‌ஷன் வேலையில பிஸியா இருக்கிறதால, இதுவரைக்கும் கூட எதுவும் பேசலை. யார் என்ன பேசினாலும் பேசிட்டுப்  போகட்டும். நான் பாடுறதைக் கூடத்தான் கேலி பேசறாங்க. அதுக்காக நான் நிறுத்திட்டேனா. என் வேலையை நான் பார்த்துக்கிட்டு இருக்கப்போறேன்" என்கிறார், இவர். 

ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொருவரும் அவரவர் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தால், இந்த வம்பே வந்திருக்காது.

அடுத்த கட்டுரைக்கு