Published:Updated:

`நான் சின்னப் பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..!' - 'கல்யாணமாம் கல்யாணம்' ஶ்ரீத்து கிருஷ்ணன்

`நான் சின்னப் பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..!' - 'கல்யாணமாம் கல்யாணம்' ஶ்ரீத்து கிருஷ்ணன்

`நான் சின்னப் பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..!' - 'கல்யாணமாம் கல்யாணம்' ஶ்ரீத்து கிருஷ்ணன்

`நான் சின்னப் பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..!' - 'கல்யாணமாம் கல்யாணம்' ஶ்ரீத்து கிருஷ்ணன்

`நான் சின்னப் பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..!' - 'கல்யாணமாம் கல்யாணம்' ஶ்ரீத்து கிருஷ்ணன்

Published:Updated:
`நான் சின்னப் பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..!' - 'கல்யாணமாம் கல்யாணம்' ஶ்ரீத்து கிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில், கமலியாக நடிப்பில் கலக்குபவர், ஶ்ரீத்து கிருஷ்ணன். முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், நிஜத்தில் கல்லூரி மாணவி. குறும்புத்தனம் மாறாமல் நம்மிடையே பேசத் தொடங்கினார். 

''ஶ்ரீத்து பற்றி ஒரு குறுந்தகவல் சொல்லுங்க...'' 

''ஶ்ரீத்து பிறந்தது கேரள மாநிலம். மலையாளியா இருந்தாலும் படிச்சதெல்லாம் சென்னை மாநகரம். அதனால், தமிழ் சரளமாக வரும். அம்மாதான் நடிப்புக்கு ஃபுல் சப்போர்ட். இப்போ, எத்திராஜ் காலேஜ் பக்கம் வந்தால், இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவியாகச் சந்திக்கலாம். ஏழாவது படிக்கும்போது விஜய் டிவியின் '7c' சீரியல் வழியே ஃபர்ஸ்ட் என்ட்ரி. பத்தாவது படிக்கும்போது, ஜீ தமிழின் 'மெல்லத் திறந்தது கனவு'. கொஞ்சம் பிரேக் எடுத்து, 'கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில் இறங்கியிருக்கேன்.'' 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சீரியலில் அமைதியான பொண்ணாவே நடிக்கும் ஶ்ரீத்து நிஜத்தில் எப்படி?'' 

''எனக்கு இப்போ 18 வயசுதான் ஆகுது. ஆனா, நடிச்ச ரெண்டு சீரியலிலும் முதிர்ச்சியான கதாபாத்திரம். நான் சின்னப் பொண்ணுன்னு வெளியில் சொன்னால், யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க. நிஜத்தில், 'டோன்ட் கேர்' ஜாலி பொண்ணு நான். காலேஜ் நண்பர்களோடு சேர்ந்தால் அவ்வளவு லூட்டி அடிப்பேன்.'' 

'' 'கல்யாணமாம் கல்யாணம்' சீரியல் அனுபவம் பற்றி...'' 

''இந்த சீரியல் டைரக்டர்தான் '7c', 'மெல்லத் திறந்தது கனவு' சீரியல்களை டைரக்ட் பண்ணினவர். மூணாவது முறையா அவர் சீரியலில் நடிக்கிறேன். என் நடிப்புமீது அவருக்கு இருக்கும் நம்பிக்கைக்கு கிடைச்ச பரிசு இது. நடிப்பில் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறவர். தேங்க்யூ டைரக்டர் சார். இந்த சீரியலில் என் ஜோடியா நடிக்கும் தேஜஸ், பார்க்கிறதுக்கு தல அஜித் மாதிரியே இருப்பார். அவரின் நடவடிக்கையும் கொஞ்சம் அஜித் ஸ்டைலில் இருக்கும். தேஜஸோடு நடிக்கிறது ஹேப்பியா இருக்கு.'' 

''ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றது எப்படி இருக்கு?'' 

''எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கும்போதே, கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். பரதம், வெஸ்டர் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு வருவேன். குட்டிப் பொண்ணாக, கலைஞர் டிவியின் 'ஓடி விளையாடு பாப்பா' டான்ஸ் ஷோவில் ஆடியிருக்கேன். சமீபத்தில், ஜீ தமிழின் 'டான்ஸ் கில்லாடிஸ்' ஷோவில் பங்கேற்றேன். '10 எண்றதுக்குள்ள', 'ரங்கூன்' போன்ற படங்களிலும் நடிச்சிருக்கேன். தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும், படிப்பின் காரணமாக நோ சொல்லிட்டிருக்கேன். வித்தியாசமான கேரக்டர் வந்தால், மீண்டும் நடிப்பேன்.'' 

''மறக்கமுடியாத செல்ஃபி தருணம்...'' 

''நான் மாலுக்கு ஷாப்பிங் போயிருந்தேன். அங்கே என்னைவிட சீனியர்ஸ், 'மேடம் நாங்க உங்க ரசிகை. ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?'னு கேட்டு, எடுத்துக்கிட்டாங்க. சின்னப் பொண்ணாகிய என்னையும் மதிச்சு என்னோடு செல்ஃபி எடுக்கிறாங்களேனு நினைச்சப்போ வெரி வெரி ஹேப்பி.'' 

''உங்க ஃபேவரைட் ஹீரோ யார்?'' 

''சூர்யா என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். அவரை நேரில் பார்த்து ஒரே ஒரு செல்ஃபி எடுக்கணும். அந்தத் தருணத்துக்காக காத்திருக்கேன்.'' 

''ஃப்ரீ டைமில் என்ன பண்ணுவீங்க?'' 

''மியூசிகலில் நிறைய வீடியோஸ் பண்ணுவேன். அதுலேயும் குறிப்பா டப்ஸ்மாஷூம், டான்ஸூம் மட்டும்தான் பண்ணுவேன். அதையெல்லாம் இன்ஸ்டாகிராமில் அப்லோடு பண்ணுவேன். இதுதான் என் பொழுதுபோக்கு.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism