Published:Updated:

'சீரியலுக்குள்ள வந்தா காணாமப் போயிடுவ'ன்னாங்க! – 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா

'சீரியலுக்குள்ள வந்தா காணாமப் போயிடுவ'ன்னாங்க! –  'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா
'சீரியலுக்குள்ள வந்தா காணாமப் போயிடுவ'ன்னாங்க! – 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா

'சீரியலுக்குள்ள வந்தா காணாமப் போயிடுவ'ன்னாங்க! – 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா

''அமித் எனக்காக ரொம்பவே ஸ்பேஸ் கொடுக்கிறார்... தேங்க் யூ அமித்..'' - இன்னொரு ஹீரோயினான நிஷா அமித்தைக் கோபித்துக் கொள்வார் என்றுகூட நினைத்துப் பார்க்காமல், மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுகிறார், சரண்யா.

பரபரப்பான நியூஸ் ஆங்கராக, ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூருக்கும் ஒலிம்பிக் கவரேஜுக்காக ஐரோப்பாவுக்கும் பறந்து பறந்து லைவ் தந்து கொண்டிருந்தவரை 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் மூலம் சீரியலுக்குள் இழுத்துப்போட்டது விஜய் டிவி. இதோ நூறு எபிசோடுகளைக் கடந்துவிட்டது தொடர். 100-வது எபிசோடைக் கொண்டாடி ஒட்டப்பட்ட பிரமாண்ட போஸ்டர்களில், 'உங்கள் மனசாட்சியைப் பிரதிபலிக்கும் சரண்யாவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்' என எக்ஸ்ட்ரா முக்கியத்துவம் தரப்பட்டதில், பொண்ணு இப்போ செம ஹேப்பி.

வாழ்த்து சொல்லிப் பேசினோம்.

''பிரியா பவானி சங்கர் சீரியலுக்கு அறிமுகமான, 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் செமயா போச்சு. பிரியா மாதிரியே நியூஸ் ரீடரா, அதுவும் அவங்ககூடவே வொர்க் பண்ண எனக்கும் அதே சேனல்ல, அதே அமித் ஜோடியா சீரியல் என்ட்ரி அமைஞ்சது. 'சீரியலா... மாட்டேன்'னு சொல்லிட்டிருந்தவளை 'நெஞ்சம் மறப்பதில்லை' கேரக்டர் யோசிக்க வெச்சது. காரணம், என்னோட ரியல் கேரக்டரையே அந்த கேரக்டருக்கும் டிசைன் செய்திருந்தாங்க. நியாயத்துக்காகப் போராடுகிற கேரக்டர். நான் ஓ.கே. சொல்லிட்டதால, என்னோட ஒரிஜினல் பெயரையே கேரக்டருக்கும் வெச்சுட்டாங்க.

'கமிட் ஆகிட்டா நானே என் பேச்சைக் கேட்கமாட்டேன்'னு தைரியமா இருக்க முடியலை. உள்ளுக்குள்ளே ஒரே உதறல். 'சீரியல் நல்லா போகுமா'ங்கிற பயம். சிலர் அவங்க பங்குக்கு, "அரசியல், சமூகப் பிரச்னைகள்ல கருத்து சொல்லிக்கிட்டுப் பரபரப்பா திரிஞ்சுட்டு, சீரியல் ஏரியாவுல வந்து என்ன செய்யப்போற... காணாமப் போயிடுவ'ன்னு பேசிக் குழப்பிவிட்டாங்க.

இந்தா... நூறு நாள் போனதே தெரியலையே. ராமேஸ்வரம் மீனவர் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டக் களங்களுக்குப் போன நாள்கள்ல டென்ஷன்தான் மிஞ்சும். சிலநேரம் பாதிக்கப்பட்டவங்ககிட்ட ஆறுதலா நாலு வார்த்தை பேசணும்னு நினைப்பேன். நேரம் இருக்காது. நியூஸை முந்தித் தந்தாகணும்கிற டார்கெட். ஏக்கத்தோட திரும்புவேன். இங்கே அந்தமாதிரி எதுவும் இல்லை. செம இன்ட்ரஸ்டிங்கா போயிட்டிருக்கு. கொடைக்கானல்ல ஷூட்டிங் நடந்த ஆரம்ப நாள்கள்லேயே சீரியல் பிரியர்கள் மனசுல எனக்கு இடம் கிடைக்கும்கிறது தெரிஞ்சுடுச்சு. 'ப்பா... யாருடா இந்தப் பொண்ணு'னு கேக்கற அளவுக்கு இல்லாட்டியும், நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. 'சரண்யா நீ சமாளிச்சிடுவ'னு எனக்கு தைரியம் வந்திடுச்சு. அனுராதா அம்மா,  பானுமதிம்மா ரெண்டுபேரும் எவ்ளோ சீனியர். அவங்களோட எல்லாம் வொர்க் பண்றதே பெரிய விஷயமில்லையா... நிஷா, அமித் ரெண்டு பேருமே சீரியல் ஏரியாவுல டிகிரி வாங்கினவங்கன்னா, நானோ எல்.கே.ஜி ஸ்டூடன்ட். ஆனா அவங்க ரெண்டுபேருமே எனக்கு அவ்வளவு சப்போர்ட்டா இருக்காங்க. குறிப்பா, அமித் எனக்கு ரொம்பவே ஸ்பேஸ் கொடுத்துட்டு வர்றார்னே சொல்லலாம். ஒரு ஹீரோ ரெண்டு ஹீரோயின் இருக்கற போஸ்டர்ல முன்னிலைப் படுத்துறதெல்லாம் சாதாரண விஷயமா?

ஷூட்டிங் ஸ்பாட்ல நூறாவது எபிசோடைக் கொண்டாடின அன்னைக்கு, சீரியலுக்கு ஓ.கே சொன்ன நிமிடத்தை நினைச்சுப் பார்த்தேன், சந்தோஷத்துல கண்ணீரே வந்திடுச்சு. என்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளை முகநூல்ல 'கண்மணீஸ்'னு கூப்பிடறது என் வழக்கம். என்னோட ரசிகக் கண்மணீஸ், என்னை நம்பி ரிஸ்க் எடுத்ததில்லாம, இப்போ ரொம்பவே அங்கீகாரம் தர்ற சேனல், அமித், நிஷா உள்ளிட்ட கோ ஸ்டார்ஸ், டைரக்டர் உள்ளிட்ட என்னோட யூனிட் அத்தனை பேருக்கும் இந்த நேரத்துல 'நன்றி'ங்கிற ஒரு வார்த்தையில முடிச்சிட விரும்பலை. ஹோம் வொர்க்கை அதிகப்படுத்தி, ரேட்டிங்ல என்னோட சீரியலுக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்துக்குப் போட்டியாளர்களே இல்லைங்கிற நிலைமை உருவாக உழைக்கணும்னு முடிவு செய்திருக்கேன்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு