Published:Updated:

"நடிகர் சங்கத்துக்கு 30 லட்சம்; சின்னத்திரை சங்கத்திற்கு அழைப்பே இல்லையா?!" - 'கலர்ஸ் டிவி' வெர்சஸ் சின்னத்திரை கலைஞர்கள் பஞ்சாயத்து.

"நடிகர் சங்கத்துக்கு 30 லட்சம்; சின்னத்திரை சங்கத்திற்கு அழைப்பே இல்லையா?!" - 'கலர்ஸ் டிவி' வெர்சஸ் சின்னத்திரை கலைஞர்கள் பஞ்சாயத்து.
"நடிகர் சங்கத்துக்கு 30 லட்சம்; சின்னத்திரை சங்கத்திற்கு அழைப்பே இல்லையா?!" - 'கலர்ஸ் டிவி' வெர்சஸ் சின்னத்திரை கலைஞர்கள் பஞ்சாயத்து.

"நடிகர் சங்கத்துக்கு 30 லட்சம்; சின்னத்திரை சங்கத்திற்கு அழைப்பே இல்லையா?!" - 'கலர்ஸ் டிவி' வெர்சஸ் சின்னத்திரை கலைஞர்கள் பஞ்சாயத்து.

தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் புதுவரவாக சமீபத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியது, 'கலர்ஸ் தமிழ்' சேனல். ரியாலிட்டி ஷோக்கள் பிரமாண்டப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சீரியல்களைப் பொறுத்தவரை தரமான கதைக்கு முக்கியத்துவம் தரப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் ஆர்யாவின் திருமண நிகழ்ச்சி பேசுபொருளாகி விட்டதென்றே சொல்லலாம். நடிகர் சங்கத் தலைவர் விஷால் சேனலின் தொடக்க விழாவில் கலந்துகொண்டபோது, சேனல் தரப்பிலிருந்து நலிந்த சினிமாக் கலைஞர்களுக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சார்பாக 30 லட்சம் ரூபாய் நன்கொடை தரப்பட்டது.

'எல்லாம் சரி, ஆனா, டிவியுடன் நெருக்கமான தொடர்புடைய எங்களை சேனல் 'லாஞ்ச்'க்கு அழைத்தார்களா?' எனக் குமுறிக்கொண்டிருக்கிறார்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள்.

''சினிமாவையும் டிவியையும் பிரிக்கமுடியாது. அதனால, நடிகர் சங்கத்துக்கு நன்கொடை தந்ததை நாங்க வரவேற்கிறோம். அதேநேரம், டிவியில இன்னைக்கு சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் தவிர்க்க முடியாத இடத்துல இருக்கு. பொழுதுபோக்கு சேனல்கள்ல ஒளிபரப்பாகிற சீரியல்கள், மக்களோட வாழ்க்கையில ஓரு அங்கமாகிவிட்டதுனே சொல்லலாம். சீரியல் நடிகர்களை ரசிகர்கள் அவர்களோட கேரக்டர் பெயரைச் சொல்லியே கூப்பிடுற அளவுக்கு ரீச் இருக்கு. 'கலர்ஸ் தமிழ்' லாஞ்ச்லகூட தமிழக மக்களின் சீரியல் ஆர்வம் குறித்து சேனல் நிர்வாக ஆட்கள் சிலாகித்ததா கேள்விப்பட்டோம்.

சீரியல்களுக்கு இப்படி வரவேற்பு இருக்கிறபோது, அதில் நடிக்கிற நடிகர்கள் எந்த நிலைமையில இருக்கோம்? புது சேனல் ஒண்ணு வந்தா, நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகும்; நமக்கெல்லாம் வேலை வரும்னு நாங்க நினைக்கிறோம். அதேநேரம், எங்களை மட்டுமே கூப்பிடணும்; புது ஆட்களை நடிக்க வைக்கக்கூடாதுனும் நாங்க சொல்லலை. ஆனா, சினிமா நடிகர்களுக்கு இருக்கிறது போலவே, சின்னத்திரை நடிகர்கள், இயக்குநர்களுக்கும் சங்கங்கள் இருக்குங்கிறதையே பலபேர் மறந்துடுறாங்க. அதனாலதான், நாங்க ஒரு பொருட்டா தெரியாம போயிடுறோம். யார் மறந்தாலும், புதுசா வர்ற ஒரு சேனல் மறக்கலாமாங்கிறதே எங்க ஆதங்கம்.

'கலர்ஸ் தமிழ்' பிரமாண்டமா இங்க வருதுங்கிறபோது, அந்த அறிமுக விழா மேடையில ஒரு ஓரத்துல எங்களையும் அங்கீகரிச்சிருக்கலாம். ஆனா, சங்கத்துக்கு இன்விடேஷனேயே அவங்க வெச்சமாதிரி தெரியலை'' என்கிறார், சங்கப் பொறுப்பிலிருக்கும் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த நடிகர்.

'கலர்ஸ் தமிழ்' இவர்களுக்கு முக்கியத்துவம் தராததற்கு பழைய நிகழ்வு ஒன்றைக் காரணமாகச் சொல்கிறார்கள் சிலர்.

'நாகினி' தொடர் தமிழுக்கு வந்து வரவேற்பு பெற்றபோது, இதே சின்னத்திரை நடிகர் சங்கம், டிவி நடிகர்களுக்கு வேலை போவதாகச் சொல்லி அதை எதிர்த்தது. டப்பிங் சீரியல்களை எதிர்த்த இவர்களை, நிறைய டப்பிங் சீரியல்களை கைவசம் வைத்திருக்கிற சேனல் எப்படி மேடை ஏற்றும்' என்கிற இவர்கள், 'ஒரு சேனல் இப்படிப் புறக்கணிக்குதுனா, ஏன் எதுக்குன்னு கேட்கிறதுக்குக்கூட சங்கத்துக்குத் துணிச்சல் இல்லாம போனதுதான் கொடுமை' என்கிறார்கள்.

'சேனல்கிட்ட இப்படிப்பட்ட பஞ்சாயத்துக்குப் போய், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் சீரியல்கள்ல இருந்து கட்டம் கட்டப்பட்டது கடந்த காலத்துல நடந்திருக்கு. அதனால, ஒருத்தரும் இது குறித்துப் பேச வாய்ப்பே இல்லை. தொடர்ந்து மூணு வருடமா என்னோட வாய்ப்பு இப்படிப் பறிபோயிருக்கு. ஒரு சேனல் ஆபீஸ்ல, 'அவரை உள்ளேயே வரவிடாதீங்க'னு சொல்லி வெச்சிருந்தாங்க' என்கிறார் டிவி நடிகர் சங்கத்தின் முன்னால் தலைவர் ராஜேந்திரன்.

சங்கத்தின் இப்போதைய செயலாளர் போஸ் வெங்கட் பேசியபோது, " 'கலர்ஸ் தமிழ்' தொடக்க விழாவுக்குக் கூப்பிட்டிருந்தாங்க. ஆனா, என்னால கலந்துக்க முடியாம போயிடுச்சு. தலைவர் போயிருப்பார்னு நினைக்கிறேன்' என்றார்.

'கலர்ஸ் தமிழ்' சேனல் தரப்பில் பேசியபோது, "டப்பிங் சீரியல்களை டிவி நடிகர்கள் சங்கம் எதிர்த்திருக்கலாம். ஆனா, பெரும்பாலான டிவி நடிகர்கள் உறுப்பினர்களா இருக்கிற டப்பிங் யூனியன்ல இருந்து வந்தவர்கள், எங்களை வாழ்த்திட்டுப் போனாங்க. சேனல் தொடக்க விழாவிலேயும் டிவி நடிகர்கள் கலந்துக்கிட்டாங்களே! 'கலர்ஸ் தமிழ்' யாரோட வாழ்வாதாரமும் பாதிக்கப்படுற மாதிரி செயல்படாதுங்கிற உறுதியை இந்த இடத்துல தர்றோம். நேரடி தமிழ் சீரியல்களும் நிறைய வரவிருக்கு. சின்னத்திரை நடிகளுக்கு அங்கே வாய்ப்பு நிறையவே இருக்கு'' என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு