Published:Updated:

"என் வருங்கால கணவர் பற்றி மட்டும் கேட்காதீங்க!" - 'பொன்மகள் வந்தாள்' ஆயிஷா

"என் வருங்கால கணவர் பற்றி மட்டும் கேட்காதீங்க!" - 'பொன்மகள் வந்தாள்' ஆயிஷா
"என் வருங்கால கணவர் பற்றி மட்டும் கேட்காதீங்க!" - 'பொன்மகள் வந்தாள்' ஆயிஷா

"என் வருங்கால கணவர் பற்றி மட்டும் கேட்காதீங்க!" - 'பொன்மகள் வந்தாள்' ஆயிஷா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பொன்மகள் வந்தாள்' சீரியலுக்கு, மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் ரசிக்கும் அளவுக்குக் குடும்பக் கதைக்களம்கொண்ட இந்த சீரியலில், புதுமுக நாயகியாக ஆயிஷா நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், சென்னைத் தமிழில் வெளுத்து வாங்குகிறார். அவரோடு ஒரு ஜாலி மீட்! 

"கேரளா டு சென்னை எப்படி?" 

''நான் பிறந்து வளர்ந்தது கேரளாவிலுள்ள காசர்கோட்லதான். என் ஃபேமிலி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான ஃபேமிலி. நடிப்பது என்பதெல்லாம் பிடிக்காது. எனக்கும் நடிக்கும் ஐடியா இருந்ததில்லை. டிகிரி முடிச்சதும் மேற்படிப்பு படிக்கிறதுக்காக சென்னைக்கு வந்தேன். இங்கே படிக்கலாம்னு யோசனையில் இருந்தப்போ, என் ஃப்ரெண்ட் 'ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சியில் கலந்துக்க கூப்பிட்டா. 'அதெல்லாம் எதுக்கு? வந்த வேலையைப் பார்ப்போம்'னு மறுத்தேன். விடாமல், 'ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாரு'னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. அரை மனசோடுதான் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். ஆனால், அங்கே நான்தான் செமையா பர்ஃபார்ம் பண்ணினேன்னு எல்லோரும் பாராட்டினாங்க. அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு 'பொன்மகள் வந்தாள்' சீரியல் சான்ஸ் வந்துச்சு.'' 

"இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே எப்படி?" 

''ஒரு வருஷமா சென்னையில்தான் இருக்கேன். இங்கே எல்லோர்கிட்டேயும் தமிழில்தான் பேசுவேன். அதனால், ஓரளவு சரளமா பேச முடியுது. இப்பவும் ஒரு சில வார்த்தைகள் வாயில் நுழையாது. இன்னும் கத்துக்கணும்ப்பா.'' 

"திடீரென நடிக்க வந்த அனுபவம்..." 

''அது ரொம்பவே சவால்தான். ஆரம்பத்தில் நடிக்கவே வரலை. நமக்கு இதெல்லாம் சரிப்படாதுனு சொல்லிட்டேன். என் வருங்கால கணவர் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கேன். அவர்தான் 'உன்னால் முடியும். முயற்சி பண்ணிட்டே இரு'னு உற்சாகப்படுத்துவார். அவர் பக்கத்தில் இருந்தாலே தைரியமா நடிச்சிருவேன். நான் மாடலிங் பண்ணியிருக்கேன். ஆனா, புரொஃபஷனல் மாடல் கிடையாது. தோணும்போது பண்ணுவேன்.'' 

"யார் அந்த அவர்? கொஞ்சம் சொல்லுங்களேன்..." 

''அது சீக்ரெட்.. அவரும் மீடியா ஃபீல்டுலதான் இருக்கார். எனக்கு எல்லாமே அவர்தான். ரெண்டு பேருக்கும் நிறைய கனவுகள் இருக்கு. எங்க கனவுகளை அடைஞ்சதுக்கு அப்புறம்தான் திருமணம் செய்துக்கணும்னு இருக்கோம்.''

"ஷூட்டிங்கில் ஏற்பட்ட சுவாரஸ்யமான விஷயம்...'' 

''பொது இடத்தில் ஒருத்தன் ஹேண்ட்பேக்கை திருடும் சீன். அப்போ, நிஜமாவே ஏதோ ஒரு திருடன் பையைத் திருடிட்டுப் போறான்னு நினைச்சு ஒருத்தர் வேகமா ஆட்டோவில் அவனை பிடிக்கப் போயிட்டார். அப்படி போகும் வேகத்தில் என்னை இடிச்சுட்டுப் போயிட்டார். கீழே விழுந்து, வலி தாங்க முடியாமல் அழுதேன். அந்த வலியுடனே அந்த சீனை நடிச்சு முடிச்சேன்.'' 

"உங்க பிளஸ் & மைனஸ்...'' 

''நான் சிம்பிளா இருக்கிறதையே விரும்பறேன். யாரையும் காயப்படுத்த நினைச்சதில்லை. மேக்கப், காஸ்ட்யூமுக்காக ரொம்ப மெனக்கிட மாட்டேன். இதுதான் என் பிளஸ். எல்லோரையும் ஈஸியா நம்பிடுவேன். யார்கிட்ட எப்படிப் பேசணும்னுலாம் தெரியாது. அது, மைனஸ்.'' 

"உங்களுடைய ஃபேவரைட் காஸ்ட்யூம்...'' 

''எனக்கு மார்டன், டிரெடிஷனல் ரெண்டுமே பிடிக்கும். தமிழ்நாட்டு சேலைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். 'பொன்மகள் வந்தாள்' சீரியலில் ஏழ்மையான குடும்பம் என்பதால், சாதாரண காஸ்ட்யூம் போடறேன். இப்போ, எனக்கு நடிப்பு பிடிச்சுப்போச்சு. அதனால் நல்ல கதாபாத்திரமா வந்தால் சினிமாவிலும் தூள் பண்ண ரெடி!''

அடுத்த கட்டுரைக்கு