Published:Updated:

'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்

'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்

'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்

'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்

'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்

Published:Updated:
'ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப் பட்டேன்..'' - 'வேட்டையன்' கவின்

''மீனாட்சிகூட வயக்காடு, கிணத்தோரத்தைச் சுத்தி ரொமான்ஸ் பண்ணினப்ப ஒரு லிமிட் இருந்தது. 'தம்பி சீரியல்ங்கிறது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிறது; 'ரொமான்ஸ்'னதும் வேற என்னத்தையாவது நினைச்சுக்காத'னு முதல்நாளே சொல்லிட்டாங்க. அதனால, 'ரொமான்ஸ்'னா சீரியலை வெச்சு 'இதுதுதான் எல்லை'னு நினைச்சிருந்தேன். சினிமாவுல அது தப்பாப் போச்சு. அதனால, ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப்பட்டுப் போனேன் ப்ரோ'' -  'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் ஹீரோவாகக் களமிறங்கும் கவின், தன்னுடைய முதல் சினிமா ரொமான்ஸ் அனுபவம் குறித்து இப்படிச் சொன்னார்.

அதிலிருந்தே ஆரம்பித்தோம் பேட்டியை.

"அப்படி என்ன நடந்திடுச்சு?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஒரு மான்டேஜ் பாடல் காட்சி. ரம்யா ரம்பீசன் ஊஞ்சல்ல உட்கார்ந்தபடி என்னை எதிர்நோக்கிக் காத்திருப்பாங்க. ரொமான்டிக் லுக்ல ஊஞ்சலைச் சுத்தி வந்து அவங்க பக்கத்துல உட்கார்ந்து காதல் மொழி பேசணும். நடந்து போறப்போ கரெக்டா போயிட்டேன். போய் பக்கத்துல உட்கார்ந்து, 'ம்ம்.. அப்புறம், சாப்பிட்டீங்களா.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்கபோல...' இப்படி என்னென்னவோ பேசுறேன். திடீர்னு 'கட்..கட்'னு சத்தம். 'கவின், ரொமான்ஸ் பண்ணணும், ஆங்கரிங் இல்ல'ங்கிறார் டைரக்டர். எப்படி இருக்கும் சொல்லுங்க... ரம்யா சத்தமா சிரிச்சுட்டாங்க. ஆனா, அந்தச் சிரிப்பு என்னை அவமானப்படுத்துற சிரிப்பு இல்லை. அடக்க முடியாத சிரிப்பு. பிறகு அவங்களே 'கூல்.. கவின்.. ஃபீல் கம்ஃபர்ட்'னு சொல்லி, சில டிப்ஸ் தந்தாங்க. அது வொர்க் அவுட் ஆக, சீனும் ஓகே ஆச்சு."

"ரஜினியின் டயலாக் படத்தின் பெயர். சிம்பு பாடியிருக்கிறார், முன்னணி நடிகை ஹீரோயின்.. என்ட்ரியே கலக்கலா இருக்கே, படம் கன்ஃபார்ம் ஆன அந்த நிமிடம் என்ன தோணுச்சு?"

"காலேஜ் முடிச்சு வெளியில வந்த நேரம். முடிச்சிட்டேனதும், டிகிரி முடிச்சிருக்கான்னு நினைச்சிடாதீங்க. இப்பவும் அரியர் இருக்கு. டிவியில முகம் வரணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, சினிமாவுல ஹீரோ அல்லது ஹீரோயினுக்குத் தம்பியா வந்தாலே போதும்னு நினைச்சேன். சம்பளம் மாதம் 25,000 ரூபாய் கிடைச்சா போதும்னு நினைச்சேன். ஆனா, 'கனா காணும் காலங்கள்'ல லீட் ரோல் கிடைச்சது. அதேபோல, 'சரவணன்-மீனாட்சி' சீரியல்ல 'இவருக்குப் பதில் இவர்'னு மூணாவது சரவணனா வந்தேன். அப்போகூட 'சீரியல்லேயே சரவணன்னுதானே இருக்கு, புதுசா வேட்டையன்'னு எதுக்குப் பேரு சார்'னு கேட்டேன். ஆனா, அந்தக் கேரக்டர்தான் ரீச் ஆச்சு. ஒரு ஆங்கரா சேனல் லைக் பண்ற அளவுக்கு வேலை பார்த்துட்டேன். இது எல்லாமே தானா நடந்தது. அதேபோலத்தான் சினிமா என்ட்ரியையும் பார்க்குறேன். நம்ம கையில எதுவும் இல்ல பிரதர்."

"டிவி டூ மூவிக்கு வந்து திரும்பி ஓடினவங்க நிறைய. அந்தப் பயம் உள்ளுக்குள் இருக்கா?"

"பயம் இல்லை. சினிமா ஹீரோங்கிறதே நான் நினைச்சுப் பார்க்காதது. அதனால, இதுக்குமேல என்ன நடந்தாலும் ஏத்துக்கலாம். 'லட்சியம்'னு எதையாச்சும் நினைச்சா, அதுக்கு நாம எந்தளவு உழைக்கிறோம்னு ஒண்ணு இருக்கில்லையா? சேனல்ல இருந்து வெளியில கிளம்பினப்போ, 'இதுதான் எனக்கு ரிஸ்க் எடுக்கிற நேரம். அதனால, கொஞ்ச நாளைக்குக் கூப்பிடாதீங்க. இங்க இருந்து போய் ஜெயிச்சா 'எங்க வீட்டுப் பிள்ளை'னு கொண்டாடுறீங்க இல்லையா... ஒருவேளை நாலஞ்சு வருடத்துல நான் திரும்பி வந்துட்டா, அப்போவும் உங்க வீட்டுப் பிள்ளையா என்னை ஏத்துக்க மாட்டீங்களா'னு கேட்டேன். 'நல்லா பேசுறடா'னு வாழ்த்தி அனுப்பினாங்க. அதனால, தொடர்ந்து சினிமாவா, சின்னத்திரையாங்கிறதை காலம்தான் தீர்மானிக்கும்."

"முதல் நாள் சினிமா ஷூட்டிங் அனுபவம்?"

"ஸ்கூல் முடிச்சு காலேஜ் போறப்போ படபடன்னு இதயம் அடிக்கும் பாருங்க, அந்த ஃபீலிங். முதல் நாள் முதல் காட்சி. பெரிய பங்களா முன்னாடி போய் நின்னேன். செட்டைப் பார்த்ததுமே, 'நம்ம படத்தோட ஷூட்டிங்தானா'னு சந்தேகம். டைரக்டர்கிட்ட அதைக் வாய்விட்டுக் கேட்டுப்புட்டேன். கதைப்படி அது ஹீரோயின் வீடு. 'இவ்ளோ பெரிய வீட்டுக்கு நான் மாப்பிள்ளையாகப் போறேனா'னு மைண்ட் வாய்ஸ் வரணும். 'ஷாட் ரெடி'னு சொன்னதும் நெர்வஸ் ஆகிட்டேன். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷுட்டிங் ஸ்பாட் பத்தி என்ன சொன்னீங்க, அதே ஃபீல்தான். கேஷுவலா வாங்க'னு சொன்னார், டைரக்டர். எப்படியோ அந்த நிமிடத்தைக் கடந்து, சினிமாவுக்குள்ளே குதிச்சிட்டேன்."

" 'வேட்டையன்'ங்கிற கேரக்டர் உங்களை டிவியோட தொடர்புபடுத்திக்கிட்டே இருக்குதே?"

"என்னோட ஒரிஜினல் பேரு கவின்னு இன்னும் பல பேருக்குத் தெரியாது. எனக்கு புகழ் தந்த பெயர், வேட்டையன். அதை எதுக்கு வேட்டையாடணும்? இருந்துட்டுப் போகட்டுமே!"

கவினின் இன்னும் பல சுவாரஸ்யமான பகிர்வுகளை, இந்த வீடியோவில் பார்க்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism