Published:Updated:

''சீரியல்ல அழுதா கேட்டது கிடைக்கும்... வீட்ல அப்படியே பண்ணினா அடி பின்றாங்க'' - பேபி ஷெரின்

வெ.வித்யா காயத்ரி
''சீரியல்ல அழுதா கேட்டது கிடைக்கும்... வீட்ல அப்படியே பண்ணினா அடி பின்றாங்க'' - பேபி ஷெரின்
''சீரியல்ல அழுதா கேட்டது கிடைக்கும்... வீட்ல அப்படியே பண்ணினா அடி பின்றாங்க'' - பேபி ஷெரின்

'மெளன ராகம்' சீரியல் மூலம் எல்லோரையும் ஈர்த்திருப்பவர், ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும், பேபி ஷெரின். ஆரம்பத்தில் கோபமான சிறுமியாகவும், பிறகு பாசமான தங்கையாகவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்தக் குறும்புக்கார ஷெரின் பற்றி உற்சாகத்துடன் பேசுகிறார் அம்மா சுமையா. 

''ஷெரினின் மீடியா என்ட்ரி பற்றி சொல்லுங்க...'' 

''ஷெரின் யூகேஜி படிச்சுட்டிருக்கும்போதே தெரிஞ்சவங்க மூலமா, 'சத்யா' படத்தின் ஆடிசனில் கலந்துக்கிட்டு செலக்ட் ஆனாள். அந்தச் சமயத்தில், சன் டிவியின் 'பாசமலர்' சீரியலில் நடிக்க கூப்பிட்டாங்க. இந்த ரெண்டு கமிட்மெண்ட்டையும் ஐந்து வயசிலேயே சூப்பரா பண்ணி அசத்தினாள்.'' 

''ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் ஷெரினுக்கு எப்படி இருந்துச்சு?'' 

''ஷெரின் எபப்வும் வீட்டில் பயங்கர சேட்டை பண்ணுவாள். ஷூட்டிங் போனதுக்கு அப்புறம் ரொம்பவே அமைதியா மாறிட்டாள். கேமராவை ஆன் பண்ணினதும், 'இவ்வளவு நேரம் அமைதியா இருந்த பொண்ணா இப்படி நடிக்கிறா'னு ஆச்சரியப்பம் அளவுக்கு நடிப்பில் கலக்குவாள். அவளுடைய நடிப்பை முதன்முதலில் டிவியில் பார்த்ததுமே பயங்கர குஷி ஆகிட்டாள். நல்லா நடிச்சாதான் டிவியில் போடுவாங்கன்னு அவளுக்குப் புரியுது. அதனால், நடிப்பில் எப்பவும் பெஸ்ட்டை கொடுப்பாள். 'மெளனராகம்' சீரியலின் டைரக்டரும், அசிஸ்டெண்ட் டைரக்டரும்தான் ஷெரின் நடிப்பை அழகா வளர்த்தெடுக்கிறவங்க. அவளிடம் ஃப்ரெண்டா பேசி பேசி நடிக்கவெச்சுடுவாங்க.'' 

'' 'மெளன ராகம்' சீரியலில் நெகட்டிவ் ரோல் செய்றது பற்றி எப்படி ஃபீல் பண்றாங்க?'' 

''கதையில் அவளுக்கு ஓர் அக்கா. அக்காவும் தங்கச்சியும் பயங்கரமா சண்டை போடுவாங்க. நிஜத்தில் அவள் அக்காகிட்ட பண்றதைதான் காட்சியிலும் செய்கிறாள். ஏன்னா, வீட்டுல அக்காவோடு அடிக்கடி மல்லு கட்டிட்டே இருப்பாள். அதே அளவுக்கு பாசமாவும் இருப்பாள். அவள் அக்காவை யாராச்சும் ஏதாவது சொன்னால் சண்டைக்குப் போயிடுவாள்.'' 

''சினிமா வாய்ப்பு கிடைச்சிருக்கா?'' 

''நிறைய வாய்ப்பு வருது. 'மெளன ராகம்' ஷூட்டுக்காக கேரளாவில் இருக்கிறதால், எந்த ஆடிஷனிலும் கலந்துக்க முடியறதில்லே. இப்போ, 'டிராபிக் ராமசாமி' என்ற படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருக்குப் பேத்தியா நடிக்கிறாங்க. அவருக்கு ஷெரினின் நடிப்பு ரொம்பவே பிடிச்சிருந்தது. 'சூப்பரா நடிக்கிறே. உன்கிட்ட நிறைய திறமை இருக்கு'னு பாராட்டினார். ஷெரினுக்கு விஜய் மற்றும் தனுஷோடு நடிக்க ரொம்ப ஆசை. விஜய் சாரின் அப்பாவிடமிருந்து ஒரு பாராட்டு கிடைச்சதில் ஃபேமிலியே ஹேப்பி. விஜய் சாரை மீட் பண்றதுக்காக வெயிட்டிங்.'' 

''ஸ்கூலில் ஷெரின் எப்படி?'' 

''நல்லா படிக்கும் பொண்ணு. ஸ்கூல் பிரின்சிபல் ரொம்பவே சப்போர்ட். அவங்க ஒத்துழைப்பினால்தான் எங்களால் இந்த அளவுக்கு கொண்டுவர முடியுது. ஷெரினின் ஃப்ரெண்ட்ஸ், 'ஆன்ட்டி, நாங்க ஷெரினை டிவியில் பார்க்கிறோம். எல்லோரும் ஏன் ஸ்ருதின்னு கூப்பிடறாங்க"னு க்யூட்டா கேள்வி கேட்பாங்க. ஸ்கூலில் பயங்கர ஃபேமஸ் ஆகிட்டாள்.'' 

''சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஷெரினிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்ன?'' 

''முன்னாடியெல்லாம் ஷெரினுக்கு அழுகைன்னா என்னனே தெரியாது. டைரக்டர் 'ஏங்க உங்க பொண்ணுக்கு அழவே தெரியாதா?'னு கேட்டு சொல்லிக்கொடுத்துட்டார். சீரியலில் அவள் அழுதால் எல்லாமே கிடைக்கும். அதனால், நிஜத்திலும் ஏதாவது கேட்டு வாங்கித்தரலைன்னா, அழ ஆரம்பிச்சுடறாள். அந்தப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்துட்டிருக்கோம். நடிப்பு காரணமா, படிப்பை விட்டுடக் கூடாதுன்னு தெளிவா இருக்கோம். 'மெளன ராகம்' முடிகிறவரை வேற சீரியலில் கமிட் வேண்டாம்னு இருக்கோம். சீரியலைவிட, சினிமா ஷூட்டிங் கொஞ்ச நாளில் முடிஞ்சிரும் என்பதால், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவுப் பண்ணியிருக்கோம்