Published:Updated:

"யூடியூப்ல வர்றது என் பயோ இல்லைங்க..!" - 'நெஞ்சம் மறப்பதில்லை' ஶ்ரீதுர்கா

"யூடியூப்ல வர்றது என் பயோ இல்லைங்க..!" - 'நெஞ்சம் மறப்பதில்லை' ஶ்ரீதுர்கா

"யூடியூப்ல வர்றது என் பயோ இல்லைங்க..!" - 'நெஞ்சம் மறப்பதில்லை' ஶ்ரீதுர்கா

"யூடியூப்ல வர்றது என் பயோ இல்லைங்க..!" - 'நெஞ்சம் மறப்பதில்லை' ஶ்ரீதுர்கா

"யூடியூப்ல வர்றது என் பயோ இல்லைங்க..!" - 'நெஞ்சம் மறப்பதில்லை' ஶ்ரீதுர்கா

Published:Updated:
"யூடியூப்ல வர்றது என் பயோ இல்லைங்க..!" - 'நெஞ்சம் மறப்பதில்லை' ஶ்ரீதுர்கா

சின்னத்திரையில் 25 வருடங்களுக்கும் மேலாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் ஶ்ரீதுர்கா, தனக்கென தனி அடையாளத்தை ரசிகர்களிடம் உருவாக்கிவைத்திருப்பவர். தற்போது, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில், பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மாறாத புத்துணர்ச்சியுடன் பேசத் தொடங்கினார். 

''ஶ்ரீ துர்கா வீட்டில் எப்படி?'' 

''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். திருமணமாகி ரெண்டு வருஷமாச்சு. நான் எப்பவுமே பாசிட்டிவா திங்க் பண்ற பொண்ணு. எந்தவொரு மோசமான சந்தர்ப்பமாக இருந்தாலும் சோர்ந்துடறது பிடிக்காது. ஹேப்பியா இருந்தா எந்தக் கவலையையும் உடைச்சிடலாம்னு நம்பறேன். சின்ன வயசிலிருந்தே மாடலிங் பண்ணிட்டிருந்தேன். நிறைய விளம்பரப் படங்களில் என் முகம் பிரபலமாச்சு. அதைப் பார்த்துட்டு, 'பாசமலர்கள்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படம் மூலமா கே.பாலச்சந்தரின் 'பிரேமி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அங்கே ஆரம்பிச்ச பயணம், 25 வருஷமா தொடருது.'' 

''இத்தனை வருஷங்களாக மீடியாவில் வாய்ப்பை எப்படித் தக்கவெச்சிக்கீங்க?'' 

''எந்தக் கதாப்பாத்திரமா இருந்தாலும், அதை திருப்தியா பெஸ்ட்டா கொடுக்க விரும்புவேன். கதாநாயகியாகத்தான் நடிப்பேன். பெரிய ரோலா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். அதேநேரம், நிறைய சீரியல்களை கமிட் பண்ணிட்டு, கடமைக்கு நடிக்க மாட்டேன். இது, என் தனிப்பட்ட ஸ்டைல். அதனால்தான் இப்போவரை வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு. நான் குறைந்த அளவில்தான் சினிமாவில் நடிச்சிருக்கேன். 'ஆதலால் காதல் செய்வீர் படம், நல்ல பெயரை கொடுத்துச்சு. 'மாவீரன் கிட்டு', 'கதாநாயகன்' போன்ற படங்களிலும் நடிச்சிருக்கேன்.'' 

'' 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் அனுபவம் சொல்லுங்க...'' 

''2015-ல் எனக்குத் திருமணம் நடந்துச்சு. கொஞ்ச நாள் நடிப்புக்கு பிரேக் விட்டு, இந்த சீரியல் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கேன். ரொம்ப உற்சாகமாக இருக்கு. அந்த சீரியலில் என் கதாப்பாத்திரத்தை விரும்பி நடிக்குறேன். ஷூட்டிங் இல்லாத போது, எங்க செட்ல எப்பவும் செம்ம என்டெர்டெயின்மென்ட் இருக்கும்.'' 

''நடிக்கிறது தவிர வேற என்ன பண்றீங்க?'' 

''கல்யாணத்துக்கு முன்னாடி பொட்டிக் வெச்சிருந்தேன். திருமண வேலைகளினால் பிரேக் எடுத்திருந்தேன். என் கஸ்டமர்ஸ் 'மறுபடியும் எப்போ பொட்டிக் ஓப்பன் பண்ணுவீங்க?'னு கேட்டுட்டே இருக்காங்க. அவங்களுக்காகவே சீக்கிரம் ஓப்பன் பண்ணப் போறேன். என்கிட்ட எல்லா டிரெஸ்ஸூமே யூனிக்கா இருக்கும். அப்புறம்... எனக்கு மியூசிக்னா உயிர். சின்ன வயசிலிருந்தே அளவு கடந்த காதல். ஒரு மியூசிக் ஸ்கூல் ஆரம்பிச்சு நிறைய குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கணும்னு பிளான் இருக்கு.'' 

'''யூடியூப்ல உங்க பயோ செம்மையா இருக்கே...'' 

''அட. நீங்களும் அதை நம்பிட்டீங்களா. அது வேற ஒரு பெண் பற்றிய தகவல்கள். என் புகைப்படங்களை தவறா போட்டிருக்காங்க. இதை நான் பலரிடம் பலமுறை சொல்லியாச்சு. அதில், என் அப்பா, அம்மா பெயர்களே தவறா இருக்கு. ஒருமுறை என் ஃப்ரண்ட்ஸ் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணியிருக்காங்க. எனக்காக ஒரு வீடியோ பிளே பண்ணினாங்க. எல்லாமே தவறா இருந்துச்சு. 'எதைப் பார்த்து பண்ணீங்க?'னு கேட்டதுக்கு, அந்த யூடியூப் பயோவை சொன்னாங்க. அந்த அளவுக்குப் பெரிய காமெடி எல்லாம் அந்த யூடியூப் விஷயத்தில் நடந்திருக்கு.''