Published:Updated:

" 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்'னு அவங்க சொல்றப்ப... பக்கத்துல வொஃய்ப் !" திகிலான ஆனந்த கண்ணன்

" 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்'னு அவங்க சொல்றப்ப... பக்கத்துல வொஃய்ப் !" திகிலான ஆனந்த கண்ணன்

" 'நீ பேட்டி எடுக்கும் சினிமா பிரபலத்தைவிட, நீ அதிக பிரபலமாகிட்டே போறே'னு நண்பர்கள் அடிக்கடி பெருமையா சொல்லுவாங்க. அதெல்லாம் ஒரு காலம்".

" 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்'னு அவங்க சொல்றப்ப... பக்கத்துல வொஃய்ப் !" திகிலான ஆனந்த கண்ணன்

" 'நீ பேட்டி எடுக்கும் சினிமா பிரபலத்தைவிட, நீ அதிக பிரபலமாகிட்டே போறே'னு நண்பர்கள் அடிக்கடி பெருமையா சொல்லுவாங்க. அதெல்லாம் ஒரு காலம்".

Published:Updated:
" 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்'னு அவங்க சொல்றப்ப... பக்கத்துல வொஃய்ப் !" திகிலான ஆனந்த கண்ணன்

"தமிழ் மீடியாவில் வொர்க் பண்ணி பல ஆண்டுகள் ஆகுது. ஆனாலும், தமிழ் மக்கள் என்னிடம் இன்னமும் அளவில்லாத அன்பு காட்டுறாங்க. அவங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்'' என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், ஆனந்த கண்ணன். சன் டிவியின் முன்னாள் நட்சத்திர தொகுப்பாளர். தற்போது, சிங்கப்பூரில் வசிப்பவருடன் வீடியோ காலில் பேசியதிலிருந்து...

"சிங்கப்பூர் டு தமிழ் மீடியா டிரான்ஸ்ஃபர்மேஷன் எப்படி நடந்துச்சு?"

"நாங்க சிங்கப்பூர் வாழ் தமிழர்கள். நானும் என் மனைவி ராணியும் இங்கிருக்கும் சேனலில் தொகுப்பாளர்களா வொர்க் பண்ணிகிட்டிருந்தோம். மனைவியின் படிப்பு விஷயமா, 2001-ம் வருஷம் சென்னைக்கு வந்திருந்தோம். அப்போ, விஜய் டிவியில் ரெண்டு மாசம் வொர்க் பண்ணினேன். சிங்கப்பூரைச் சேர்ந்த தோழி ஹேமமாலினி, சன் மியூசிக் தொகுப்பாளரா இருந்தாங்க. அவங்க மூலம் சன் மியூசிக்ல சேர்ந்தேன். பிறகு, சன் டிவியில் மூணு வருஷம். ரேடியோ சிட்டி பண்பலையில் ஆர்.ஜேவா ரெண்டு வருஷம். இப்படி தமிழ் ஊடகங்களில் வொர்க் பண்ணின காலங்கள், என் வாழ்க்கையின் மறக்கமுடியாத பொக்கிஷ நாள்கள்."

"அப்போதைய பணியில் மறக்கமுடியாத நினைவுகள் பற்றி..."

"ஒண்ணா... ரெண்டா. நிறைய இருக்கு. சன் மியூசிக்ல 'ஹாய் குட்டீஸ்' நிகழ்ச்சியின் மூலமா எக்கச்சக்க குழந்தைகளின் அன்பு கிடைச்சது. சன் டிவிக்கு வந்ததும் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுப்பேன். வெறும் பேட்டியோடு நிற்காமல், அவங்களை ஆடல் மற்றும் பாடல்னு கலகலப்பாக்குவேன். சன் டிவியின் செல்லப் பிள்ளையா இருந்தேன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்கான கேள்விகளைத் தயாரிக்க பல மணி நேரம் செலவிடுவேன். அடுத்தடுத்து புதுப் புது பொறுப்புகள் கொடுத்தாங்க. 'ஃபிலிம் ஃபேர்' உள்ளிட்ட விருது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். நான் கலங்கின ஒரு தருணம் இருக்கு. ஒருநாள் லைவ் ஷோவில் பேசின ஓர் அம்மா, 'தினமும் உங்க நிகழ்ச்சியைப் பார்க்கும் ஒரு மணி நேரம்தான் எங்களுக்குச் சந்தோஷத் தருணம்'னு சொன்னாங்க. பொதுவா, நேயர்கள் இப்படி சொல்றது வழக்கம்தான் என நினைச்சேன். ஆனால், 'மனவளர்ச்சிக் குன்றிய என் ரெண்டு குழந்தைகளும் உங்களைப் பார்த்தும் தங்களை அறியாம சிரிப்பாங்க. அதனால், எங்க குடும்பமே உங்களுக்குக் கடமைபட்டிருக்கு'னு அந்த அம்மா சொன்னதும், என்னால் பதில் பேசவே முடியலை. இப்படி, நம்மில் ஒருத்தன் என்கிற உணர்வோடு பழகினவங்க பலர்.''

"உங்களுக்கு நிறையப் பெண் ரசிகைகள் இருந்தாங்களே..."

(சிரிப்பவர்) "எஸ்... லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றேன். என் பிறந்த நாளின்போது வாழ்த்து கடிதம், பரிசுகளை அனுப்புவாங்க. அப்போ ஆபீஸூக்கு ஸ்கூட்டியில்தான் போவேன். ரோட்டில் பார்க்கும்  ரசிகைகள் பின்தொடர்ந்து வந்து பேசுவாங்க. எங்கே போனாலும், பெண் ரசிகைகள் சூழ்ந்து போட்டோஸ் எடுத்துப்பாங்க. நான் சிங்கப்பூரில் செட்டில் ஆகிட்ட பிறகு, ஒருநாள் தன் குழந்தையோடு சிங்கப்பூருக்கு வந்திருந்த ஒரு பெண், என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடிச்சுகிட்டாங்க. என் மனைவியும் பக்கத்தில் இருந்தாங்க. 'என் காலேஜ் லைஃப்ல உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். உங்களின் பெரிய ஃபேன்'னு சொன்னாங்க.''

"உங்க மனைவியின் சப்போர்ட் பற்றி..."

"சன் டிவியில் வொர்க் பண்ணின தருணம். மனைவியோடு சினிமாவுக்குப் போறதை தவிர, பெரும்பாலும் வேற எங்கும் போகமாட்டேன். தியேட்டரில் என்னோடு பெண்கள் போட்டோஸ் எடுத்துக்க ஆசைப்படுவாங்க. அப்போ என் மனைவி ராணிதான் போட்டோஸ் எடுப்பாங்க. மீடியாவைப் பற்றி முழுமையா தெரிஞ்சதால அவங்க எப்போதுமே எனக்கு சப்போர்டிவ். என் எல்லா நிகழ்ச்சிகளையும் ரெக்கார்டு பண்ணிவெச்சு, ரிவ்யூ கொடுப்பாங்க. நல்லா இல்லைன்னா திட்டுவாங்க. என் தவறுகளை சரிசெய்துப்பேன். ராணி என்னுடைய பெரிய பலம்."

"தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவீங்களா?"

"பொண்ணு படிப்பு விஷயமா 2011-ம் வருஷம் சிங்கப்பூருக்கு வந்துட்டோம். சொந்தங்களையும் நண்பர்களையும் மிஸ் பண்ணும் உணர்வு இப்போவரை இருக்கு. தமிழ் மக்களிடம் பேசும், பழகும் வாய்ப்பு குறைஞ்சுடுச்சு. மக்களைச் சிரிக்கவைக்கிறது சவாலான வேலை. அதை ஓரளவு செஞ்சேன். மக்களின் கோமாளியா என்னை நினைச்சு சந்தோஷப்படுவேன். என் வேலை விஷயமா சில மாசங்களுக்கு ஒருமுறை தமிழகம் வருவேன். அப்போ நிறைய மக்களைச் சந்திப்பேன்."

"சிங்கப்பூர் வாழ்க்கை எப்படிப் போகுது?"

"ரொம்ப சிறப்பா போகுது. இங்கிருக்கும் மீடியாவில் பார்ட் டைம் வொர்க் பண்றேன். 'ஊர்க்குருவி', 'சவால் சிங்கப்பூர்' எனத் தமிழ் நிகழ்ச்சிகள் நல்லா போயிட்டிருக்கு. தமிழ்ப் பயிற்சி மற்றும் தமிழ் மரபுக் கலைப் பயிற்சி வகுப்புகள் என நானும் மனைவியும் சேர்ந்து செய்யறோம் ரொம்பவே நேசிச்சு செய்துட்டிருக்கோம்."

ஆனந்த கண்ணன் மற்றும் மனைவி ராணியின் விரிவான பேட்டியை நாளை வெளியாகும் அவள் விகடன் இதழில் படிக்கலாம்.