Published:Updated:

` `சாட்டர் டே செளந்தர்யா’னு என்னை ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா?' - `பகல் நிலவு’ செளந்தர்யா

` `சாட்டர் டே செளந்தர்யா’னு என்னை ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா?' - `பகல் நிலவு’ செளந்தர்யா
` `சாட்டர் டே செளந்தர்யா’னு என்னை ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா?' - `பகல் நிலவு’ செளந்தர்யா

சத்தியமா சொல்றேன் நான் இன்னும் சிங்கிள்தான் பாஸ்.

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் போட்டியாளராகப் பங்கேற்று டாப் 10 இடத்துக்குள் வந்தவர் செளந்தர்யா. தற்போது 'பகல் நிலவு' தொடரில் தன் நடிப்பின் மூலம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.

உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்?

``நான் மதுரைப் பொண்ணு. எங்க அம்மா இசை நாடகத்துறைப் பேராசிரியர். அதனால சின்ன வயசுலயிருந்தே பாட்டு, நடிப்பெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். ஃபைனான்ஸில் முதுகலைப் பட்டம் முடிச்சு இருக்கேன். பாட்டுதான் எனக்கு எல்லாமே. மற்றபடி எல்லாரும் சொல்ற மாதிரி நான் கொஞ்சம் துறுதுறு வாயாடின்னும் சொல்லலாம்.''

விஜய் டிவி வாய்ப்பு எப்படி வந்தது?

''சென்னையில் ஒரு வங்கியில் மேலாளராக வேலைபார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போ ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஆடிஷன் சென்னையில் நடந்தது. நண்பர்கள் எல்லாரும் 'நீ நல்லா பாட்டு பாடுற... போய் போட்டியில் கலந்துக்கோ'ன்னு சொன்னாங்க. 2011-ல் நடந்த ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆனா, சிலகட்டங்களில் மட்டுமே முன்னேற முடிஞ்சது. மீண்டும் 2012-ல் நடந்த ஆடிஷனுக்கு என்னைக் கூடுதலாகத்  தயார் செய்துகொண்டு பங்கேற்று, முதல் 10 போட்டியாளர்களுள் ஒருவரா வந்தேன். போட்டியில் டைட்டில் வின் பண்ண முடியலையேன்னு சின்ன வருத்தம் இருந்தாலும், `சூப்பர் சிங்கர்' என் வாழ்க்கையில் நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு. வாழ்க்கையில் ஜெயிக்க தொடங்கிட்டேன்.''

சிங்கர் டு ஆக்டிங் அனுபவம் எப்படி இருக்கு?

''சூப்பர் சிங்கர் செட்டில் என்னைப் பார்த்த பகல்-நிலவு தயாரிப்பாளர் 'ப்பா யாருடா இந்தப் பொண்னு... இவ்வளவு வாய் பேசுது'ன்னு கேட்டிருக்காங்க. அதன்பிறகு, 'நாங்க எடுக்கப்போற தொடரில் நடிக்க முடியுமா. உங்களோட இந்த ரியல் கேரக்டர்தான் சீரியலில் கதாபாத்திரமா வருது'னு சொன்னார். கொஞ்சம் யோசிச்சுட்டு, டபுள் ஓ.கே சொல்லி களத்தில் குதிச்சுட்டேன். நிஜமாவே சீரியல்ல பார்க்கிற கேரக்டர்தான் நான். அதனால் நடிக்கப் பெரிய அளவில் நான் கஷ்டப்படவில்லை. என்னோட நடிப்பைப் பார்த்துட்டு மற்ற சேனல்களில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் வருது. கூடிய விரைவில் என்னை ட்ரையின் பண்ணிட்டு அடுத்தகட்டத்துக்கு நகர்வேன்.''

உங்களோட முகநூல் சனிக்கிழமையானா என்கேஜ்டா இருக்குதே?

 '' பொதுவாவே நான் ஃபேஸ்புக்கில் ஆக்டிவா இருப்பேன். சூப்பர் சிங்கருக்குப் பிறகு, நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்க. அவர்களை எல்லாம் தக்க வைச்சுக்க நினைச்சேன். அப்போதான் என் நண்பர், 'சனிக்கிழமை விடுமுறைங்கிறதுனால அன்னைக்கு நீ பாடினா உன் ரசிகர்களைத் தக்க வைச்சுக்கலாம்'னு ஐடியா கொடுத்தார். அது நல்ல ஐடியாவா பட்டது. சூப்பர் சிங்கரில் நான் பாடத்தவறிய பாடல்களைத் தேர்வு செய்து என் முகநூல் பக்கத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பாடி வெளியிட ஆரம்பித்தேன். அந்த ஃபார்முலா சக்சஸ் ஆயிருச்சு. இப்ப நிறைய பேர் என்னை `சாட்டர் டே செளந்தர்யா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.''

அன்வர் சமீரா விஷயத்துல போல்டா பேசினீங்களே?

''நான் ஏன் பயப்படணும்... அந்தப் பிரச்னையில நடக்காததை ஒண்ணும் நான் சொல்லலியே. பொதுவாவே எனக்கு யாரையும் சட்டுனு காயப்படுத்துறது பிடிக்காது. அதே நேரம் எது சரி, எது தப்புங்கிறதை வெளிப்படையா சம்பந்தப்பட்ட ஆட்களிடம் சொல்லிடுவேன். அப்படித்தான் அன்வர் - சமீரா பற்றி நான் சொன்ன விஷயமும்.''

உங்களைப் பற்றிய சந்தோஷ செய்தி ஒண்ணும் சீக்ரெட் ஒண்ணும் சொல்லுங்க?

''இப்போ ரஹ்மான் சார் குரூப்பில் பின்னணிப் பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கிறேன். அதையே என்னோட வெற்றியாதான் பார்க்கிறேன். சீக்ரெட்டா... சத்தியமா சொல்றேன் நான் இன்னும் சிங்கிள்தான் பாஸ்.''

அடுத்த கட்டுரைக்கு