Published:Updated:

’’விஜய் கூட கபடி ஆடுன யுவராணிகிட்ட வச்சுக்க மாட்டோம்..!’’ - 'பூவே பூச்சூடவா’ ஷூட்டிங்ல மீட்டிங் – 3

’’விஜய் கூட கபடி ஆடுன யுவராணிகிட்ட வச்சுக்க மாட்டோம்..!’’ - 'பூவே பூச்சூடவா’ ஷூட்டிங்ல மீட்டிங் – 3

பூவே பூச்சூடவா சீரியலின் படப்பிடிப்புத்தளத்தில் நடந்த அரட்டைகள்...

Published:Updated:

’’விஜய் கூட கபடி ஆடுன யுவராணிகிட்ட வச்சுக்க மாட்டோம்..!’’ - 'பூவே பூச்சூடவா’ ஷூட்டிங்ல மீட்டிங் – 3

பூவே பூச்சூடவா சீரியலின் படப்பிடிப்புத்தளத்தில் நடந்த அரட்டைகள்...

’’விஜய் கூட கபடி ஆடுன யுவராணிகிட்ட வச்சுக்க மாட்டோம்..!’’ - 'பூவே பூச்சூடவா’ ஷூட்டிங்ல மீட்டிங் – 3

எக்கச்சக்கமான ட்விஸ்டுகளுக்கு நடுவே ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம் நடந்து முடிந்திருக்கிற வீடு அது. 'பூவே பூச்சூடவா' தொடரில் சுபத்ராவின் (யுவராணி) வீடு. நாம் சென்ற போது யூனிட்டே ஜாலி மூடில் இருந்தது.

'கல்யாணக் களை இன்னும் மிச்சமிருக்கிறதா' என இயக்குநர் மணிகண்ட குமாரைக் கேட்டோம்.

''அந்த சீன்லாம் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு. இப்ப அதுக்கு அடுத்த கட்டத்துக்குப் போகணுமில்லையா? ஹனிமூன், சாந்தி முகூர்த்த ஏற்பாடுன்னு போயிட்டிருக்கு. எதுக்கு இங்க ஜாலின்னா, மத்த நேரத்துல எல்லாரையும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டற சுந்தர், அதாங்க.. மதன் பாண்டியன் ரொமான்ஸ் சீனுக்கு ரெடியாகச் சொன்னா அப்படி மிரள்றாப்ல. அதான் அவரை மததவங்க எல்லாருமா சேர்ந்து வச்சு செஞ்சிட்டிருக்காங்க'’ என்றார்.

முதல் தளத்தில் சின்ன ரெஸ்டில் இருந்த சுந்தரிடமிருந்தே 'ஷூட்டிங்ல மீட்டிங்'கை ஆரம்பித்தோம்..

''லவ் பண்ற சீன் எடுத்தப்பெல்லாம் பிரிச்சு மேஞ்சிட்ட எனக்கு இப்ப என்னன்னே தெரியல ப்ரோ, கை கால்லாம் உதறுது. முன்னாடிக்கு இப்ப கொஞ்சம் நெருக்கமான காட்சிகள்ங்கிறது தெரியுது. ஆனா நடிக்கன்னு வந்த பிறகு இப்படி உதறல் எடுத்தா என்ன நினைப்பாங்க?. நானும் என்னென்னவோ செஞ்சு பார்க்கறேன். அந்த கூச்சம் போய்த் தொலைய மாட்டேங்குது. அந்த மீனாட்சிப் (கிருத்திகா) பொண்ணு வேற ஏதோ பதினைஞ்சு விஜய், அஜித் கூட ஹீரோயினா நடிச்சு முடிச்சுட்டு இங்க வந்திருக்கிற மாதிரி எனக்கு டிப்ஸ் தர்றேன்னு ஏதாவது சொல்லுதா, அது இன்னும் வெட்கப் பட வைக்குது. ரெண்டு நாள்ல இதைச் சரி செய்யணும்னு முடிவு செய்திருக்கேன். நிச்சயம் பண்ணிடுவேன்’' என்றவரிடம் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டைகள் குறித்துக் கேட்டோம்.

''இங்க எல்லாத்தையும் ஓட்டறதென்னவோ நான் தான். வேணும்னு பண்றதில்லை. டைமிங்கா எதுனாச்சும் வரும். இயக்குநரும் 'செட்'டை கலகலப்பா வச்சிருக்கேன்னு, எனக்குத் தடை போடறதில்லை. ஒரு ஆளை விட மாட்டேனே! சிவா (தினேஷ்) அண்ணன் என்னை விட படு சீனியர். அவர்ட்ட ஆரம்பத்துல பயந்தேன். ஆனா அவரே, 'என்ன டவுட்னாலும் எங்கிட்ட கேளு'ன்னாரா, அந்த நிமிஷத்துல இருந்து பிடிச்சுகிட்டேன். ஒரு நாள் 'உங்களோட ரியல் மனைவியும் (சரவணன் மீனாட்சி ரக்சிதா) மீனாட்சிங்கிற கேரக்டர்ல பிரபலமானாங்க. என்னோட சீரியல் மனைவிக்கும் இதுல பேரு மீனாட்சி . நமக்குள்ள என்ன ஒரு ஒற்றுமை பாருங்க'ன்னேன். சில நேரம் 'உன்னோட பெரிய இம்சையா இருக்கே'ம்பார்.

அடுத்து, நம்ம ஹீரோயின் சக்தி (ரேஷ்மா). ஜோடியில ஆடிட்டிருந்த பொண்ணு. ஓவர் நைட்ல ஹீரோயினாகிட்டாங்க. வந்தபுதுசுல திருதிருன்னு முழிச்சிட்டிருப்பாங்க. இருபது டேக்லாம் வாங்கியிருக்காங்க. இப்ப போய் அதைக் கேட்டுப் பாருங்க, 'அப்படியா, நீங்க கேள்விப்பட்டது வேற யாரையாவது இருக்கும்'னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க. சீரியல்ல மாதிரியே ஜாலியான அதே நேரம் கொஞ்சம் கோபக்காரப் பொண்ணும் கூட. திடீர்னு மூக்கு மேல கோபம் வந்திடும். அதனால இவங்களைக் கொஞ்சம் பார்த்துதான் டீல் பண்ணிட்டிருக்கேன்.

அடுத்ததா சீரியலோட வில்லி யுவராணி மேடம். இவங்ககிட்ட இன்னைக்கு வரைக்கும் அடக்கி வாசிட்டே வர்றேன். 'தளபதி ' கூடவே கபடி ஆடுனவங்களாச்சே. நான் மட்டுமல்ல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாருக்குமே இவங்க பக்கத்துல போறதுக்குப் பயம்தான். இவங்க ஏரியாவுக்குப் போக மாட்டேன்னே வச்சுக்கோங்களேன். ஆனா வந்த புதுசுல இருந்ததுக்கு இப்ப ஒரு சின்ன முன்னேற்றம் தெரியுது. எல்லாரும் இருக்கற ஏரியாவுல ஒரு டைமிங் ஜோக் எடுத்து விட்டா, மெல்லமா என் பக்கம் திரும்பி சின்னதா ஸ்மைல் பண்ணுவாங்க. இது போதாதா ப்ரோ. சீரியல் முடியறதுக்குள்ள அவங்களையும் எல்லாரையும் வச்சு செய்ற ஆளா மாத்திடணும்னு நினைச்சிருக்கேன். முடியுதா பார்க்கலாம்.

அப்புறம் என் ஆளு (அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க) மீனாட்சி. பொண்ணு பயங்கர டேலன்ட். பாடியிருக்காங்க. ஆங்கரா இருந்திருக்காங்க. ரேடியோவுல வேலை பார்த்திருக்காங்க. கம்பெனி ஹெச்.ஆர்., சினிமா, இப்ப சீரியல்னு வயசுக்கு மீறி பல அவதாரம். ஏதோ என்னோட ஜோடிங்கிறதால புகழ்ந்து தள்ளுறேன்னு நினைக்காதீங்க. எல்லாமே உண்மை. இவங்களை நான் ஓட்டினது போய் இப்ப இந்த க்ளோஸ்-அப் சீன்களால அவங்க என்னை ஓட்டிட்டிருக்காங்க.

இன்னொருத்தரையும் இந்த லிஸ்ட்ல தவிர்க்க முடியாது. அது கௌசல்யா பாட்டி. பழைய வில்லன் நடிகர் செந்தாமரையோட மனைவி. சரியான லொள்ளு பாட்டி. இப்ப லந்து பண்றதுல எனக்கே போட்டியா வளர்ந்திட்டிருக்காங்க'' என்றவர்,

’'ப்ரோ, இந்தத் தொடர்ல சின்ன வில்லியா நடிக்கிறாங்களே, ஷாம்லி.. அவங்ககிட்ட 'கௌசல்யா பாட்டி யாருன்னு மட்டும் கேளுங்களேன்' ’’ என்றபடி பூடகமாகச் சிரித்து விட்டு நகர முற்பட, '’இப்ப என்னைப் பத்திதானே பேசினான்’' என அங்கு வந்து சேர்ந்தார் ஷாம்லி.

''அந்தப் பாட்டி பழைய நடிகைன்னு தெரியும் . அவங்க கணவர் கூட வில்லன் நடிகராம். அவங்க நடிச்ச காலத்துல நான் என்ன, இவனும் பிறந்திருக்கவே மாட்டான். ஒருநாள் 'பாட்டி யாரு'ன்னு தெரியாத்தனமா கேட்டுட்டேன். அந்த நாள்ல இருந்து பிடிச்சுக்கிட்டான். அப்பப்ப மிரட்டிட்டே இருக்கான், 'பாட்டி கிட்டப் போய் உங்களை இவளுக்குத் தெரியாதாம்'னு சொல்லப் போறானாம். நானே பாட்டிகிட்டப் போய் பேசிடப் போறேன்’' என்றவர், ’’இவனுக்குத்தான் ஒரு சிவகார்த்திகேயன்னு நினைப்பு’' என்றார்.

'சிவகார்த்திகேயனை எதுக்கு இழுக்கிறீங்க' என்றோம்.

''நானும் என்ஜினியரிங் முடிச்சவன், ஆரம்பத்துல சிவகார்த்திகேயன் மாதிரியே மிமிக்ரி பண்ணிட்டிருந்தேன். அதை வச்சுச் சொல்றாங்க'’ என்ற சுந்தர் ஷாட்டுக்குக் கிளம்ப, தொடர்ந்தார் ஷாம்லி..

’'இப்ப வரைக்கும் தொடர்ந்து வில்லியாகவே வாய்ப்பு வந்திட்டிருக்கு. காரணம் புரியலை. இந்தத் தொடரைப் பொறுத்தவரை மெயின் வில்லி, யுவராணி மேடம்தான். அவங்க கிட்ட டிப்ஸ் கேட்டே நான் நடிச்சிட்டிருக்கேன்’' என்றவரிடம், 'போட்டி சேனல்கள்ல தொடங்கப்பட்ட புது சீரியல்களைப் பார்த்தே, ஓவர் நைட்ல யுவராணியை வில்லியாக்கினாங்கன்னு சொல்றாங்களே' எனக் கேட்டோம்.

’'வில்லங்கமான கேள்வியாத் தெரியுதே இது’' என்றவர், '’யுவராணி மேடத்தைப் பார்த்து தேவையில்லாம இங்க சிலர் பயப்படறாங்க. நெருங்கிப் பழகிட்டா அவங்க ச்சோ ஸ்வீட். 'விஜய் ஜோடியா அவங்க நடிச்ச நாட்களை, அந்தக் கபடி ஆடுன மேட்டர்லாம் பத்திக் கேட்டாக்கூட, வெட்கப்பட்டாலும் பிறகு ஒண்ணு விடாமச் சொல்லிடுவாங்க’' என அழகாக ட்ராக் மாற்றி விட்டு எஸ்கேப் ஆனார்.

மதிய உணவு இடைவேளை. சக்தியும் மீனாட்சியும் தனியே கொஞ்சம் சோகமாக அமந்திருந்தார்கள். மீனாட்சியிடம் காரணம் கேட்ட போது, ’’'பிறந்த வீட்டை விட்டுப் பிரிஞ்சு வந்திருக்கோமில்லையா' என்றார்

'இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா' என்ற நமது மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்டுவிட்டதோ என்னவோ, குறுக்கிட்டார் சக்தி.

''போன வாரம் வரைக்கும் எங்க அப்பா, அம்மா தங்கச்சிகள் கூட நடிச்சிட்டிருந்தோம். அந்த லொகேஷன் வேற. திடீர்னு எங்க ரெண்டு பேரை மட்டும் கல்யாணம் முடிச்சு புகுந்த வீட்டுக்குப் போங்கன்னு இங்க அனுப்பி விட்டுட்டாங்க. தினமும் பார்த்துப் பேசிட்டிருந்தவங்களை விட்டுப் பிரிஞ்சு வந்தா அந்த சோகம் இருக்காதா? நான் பரவால்ல, வந்த நாலு நாள்லயே இங்க உள்ளவங்களோட செட்டில் ஆகிட்டேன். மீனாட்சிக்கு இன்னும் செட் ஆக மாட்டேங்குது. டைரக்டர் மனசு வச்சா பழையபடி எங்களை எங்க வீட்டுக்கே அனுப்பலாம். லேசா கதையில சேஞ்ச் பண்ணணும். எங்க ரெண்டு கணவர்களையும் வீட்டோட மாப்பிள்ளைகளாக்கிடணும்’' என்கிறார்.

'உங்களுக்குப் பல முகங்கள் இருக்காமே' - மீனாட்சியைக் கேட்டதும் பொண்ணு முகத்தில் வெட்கச் சிரிப்புடன் தொடர்ந்தார்..

'' ‘தேனிலவு' என்னோட முதல் சீரியல். அதுக்குப் பிறகு தொடர்ந்து நடிச்சிட்டு வந்தாலும், இந்த மீனாட்சி கேரக்டர் நல்ல புகழைத் தந்திருக்கு. அதுவும் சுந்தர் செல்லமா கூப்பிடுற 'மீனுக் குட்டி'க்குதான் இப்ப மவுசு. வெளியில என்னைப் பார்க்கற எல்லாருமே அப்படியே கூப்பிடுறாங்க. நண்டு ஜெகன் முன்னாடி எனக்கு 'லட்டு' னு பேர் வச்சிருந்தார். அந்தப் பேரையே இது ஓவர் டேக் பண்ணிடுச்சுன்னா பாருங்க’' என மீனாட்சி நிறுத்த, சரியாக ரீ என்ட்ரி தந்தார் சுந்தர்.

’'ஆமா முதல்ல நண்டு ஜெகன் வச்சார். பிறகு நான் வச்சேன். நாளைக்கு இன்னொருத்தரா? 'கரகாட்டக்காரன் கார்' மேட்டரே தோத்துடும் போல உன் பேரு மேட்டர்ல...’’ என்ற சுந்தரை மீனாட்சி அடிக்கப் பாய, அந்த இடம் முழுக்க ஜாலி ரகளை.

ரகளையை அமைதியாக்கியது, யுவராணி, எஸ்.பிரியா, கௌசல்யா மூவரின் வருகை.

’'படவா... ஹீரோயினோட ரொமான்ஸ் பண்றான்னா நெளியறான், வாயைக் கேளு’' என சுந்தரின் தலையில் கொட்டிய கௌசல்யாவிடம் பேசினோம்.

''புள்ளைக ஜாலியா இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுடுவோம். கிட்டத்தட்ட இருபத்தைஞ்சு வருஷம் நடிக்காமலேயே இருந்துட்டு சீரியல் பக்கமா வந்து இவ்ளோ வயசுக்குப் பிறகும் நான் ஆக்டிவா இருக்கேன்னா, அதுக்குக் காரணம், என் மனசை நான் உற்சாகமா வச்சிருக்கறதுதான்’' என்ற இவரது கருத்தை அப்படியே ஆமோதித்தார் எஸ்.பிரியா.

தொடரின் ஹீரோ தினேஷிடம் பேசினோம்.

''இருநூறு எபிசோடைக் கடந்து போயிட்டிருக்கு சீரியல். நல்ல ரேட்டிங். சீரியலுக்குக் கொஞ்சம் பிரேக் விட்டிருந்த எனக்கு மறுபடியும் ஹீரோ கேரக்டர். கேரக்டர் மனசுக்குப் பிடிச்சுப் பண்ணிட்டிருக்கேன். உடனே, 'பொண்ணுங்கன்னா உங்களுக்குப் பிடிக்காதா'னு கிளப்பிவிட்டு, குடும்பஸ்தனான என் வாழ்க்கையில கும்மி அடிக்கப் பார்க்காதீங்க ப்ரோ'’ என எச்சரிக்கையாகவே பேசுகிறார்.

நிறைவாக, '’திறமையான யூனிட். நல்ல ஒத்துழைப்பு. சீனியர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு இங்க யார்கிட்டயும் எந்த ஈகோவும் கிடையாது அதனால சீரியல ரீச் ஆகியிருக்கு'’ என்ற இயக்குநர் மணிகண்ட குமார், தொடரில் நிகழ இருக்கும் அடுத்த முக்கியத் திருப்பம் குறித்து சொல்கிறார்.

’’சிவாவும் சக்தியும் ஒரு ஜோடி. சிவா தம்பி சுந்தரும் சக்தியோட அக்கா மீனாட்சியும் இன்னொரு ஜோடி. பெண் வாசனையே பிடிக்காது சிவாவுக்கு. மீனாட்சி காதலித்த சுந்தரையே கைப்பிடித்திருக்கிறார். மருமகள்கள் ரெண்டு பேரையுமே மாமியார் சுபத்ராவுக்குப் பிடிக்கலை. பிடிக்காத மருமகள் வீட்டுக்குள்ள வந்தாலே தினமும் திருப்பத்துக்குப் பஞ்சமிருக்காதே. ஸ்பெஷலாச் சொல்லணும்னா, சுந்தரை ஒருதலைப் பட்சமாக் காதலிச்ச ஷாம்லியும் அதே வீட்டுக்கு வரப் போறாங்க. அதுக்குப் பிறகு என்னெல்லாம் நடக்கப் போகுதோங்கிறதை என்னாலேயே இதுக்கு மேல சொல்ல முடியாது’’ என்றவரிடம், சீரியலில் யுவராணி ஓவர் நைட்டில் வில்லியானது குறித்துக் கேட்டதற்கு, ‘’குறிப்பிட்ட எபிசோடுக்குப் பிறகு அந்த கேரக்டர மாறும்கிறது ஆரம்பத்துலயே ப்ளான் பண்ணினதே’’ என்றார் இயக்குநர்.