Published:Updated:

``அவந்திகாவுக்கு அடிபட்டிருக்கு... ஸோ சீதாவுக்கு காஸ்ட்யூம்ஸ் வேணும்!" - `அழகிய தமிழ்மகள்' சிவரஞ்சனி

``அவந்திகாவுக்கு அடிபட்டிருக்கு... ஸோ சீதாவுக்கு காஸ்ட்யூம்ஸ் வேணும்!" - `அழகிய தமிழ்மகள்' சிவரஞ்சனி
``அவந்திகாவுக்கு அடிபட்டிருக்கு... ஸோ சீதாவுக்கு காஸ்ட்யூம்ஸ் வேணும்!" - `அழகிய தமிழ்மகள்' சிவரஞ்சனி

பிரியமானவள் `அவந்திகா'வாக மக்கள் மனத்தில் இடம் பிடித்தவர் சிவரஞ்சனி. அதே சமயம், வில்லி சீதாவாக `அழகிய தமிழ்மகள்' சீரியலில் அசத்திக்கொண்டிருப்பவர். `ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலவென சிரிச்சு விளையாடிட்டு இருப்பேன், ஆனா என் முன்னால கேமராவை வெச்சதும் டெரர் லுக்குக்கு மாறிடுவேன்' எனத் தன்னுடைய சீரியல் அனுபவம் குறித்து நம்மிடையே பேசினார்.

`நியூஸ் ரீடர் டு சின்னத்திரை..?'

`` சின்ன வயசுலேயே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நடிக்கப் போனா ஸ்கூல் கட் அடிக்கலாங்குறதுனால நடிகையாகணும்னு ரொம்பவே ஆசையா இருந்துச்சு. ஆனா, நடிக்கப் போனா படிப்பு பாதிக்கப்படும்னு வீட்ல நடிப்புக்கு நோ சொல்லிட்டாங்க. பிளஸ் டூ முடிச்சதும் தமிழன் டிவியில் நியூஸ் ரீடர் வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் ஒரு சில சேனலில் நியூஸ் ரீடரா வேலை பார்த்தேன். கடைசியா ஜெயா டிவியில் தொகுப்பாளினியா இருந்தேன். அப்போதான் சன் டிவியிலிருந்து சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. முதல் சீரியல் `தேன் நிலவு'. அங்க ஆரம்பிச்ச பயணம் இப்போ இதுவரைக்கும் தொடருது.''

`தொடர்ந்து நெகட்டிவ் ரோலிலேயே நடிக்குறீங்களே..?'

``எனக்கு நெகட்டிவ்தான் செட்டாகுதுன்னு நினைக்குறேன். இந்தக் கேரக்டர்தான் பண்ணுவேனுலாம் எந்த ஐடியாவும் இல்ல. என்னைத் தேடி நெகட்டிவ் ரோல்தான் வருது. ஆனா, இப்போ பாசிட்டிவ் ரோல்ல நடிக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.''

`அழகிய தமிழ்மகள்' வில்லி சீதா எப்படி?'

``ரொம்ப டெரர் (சிரிப்பவர்) சீரியல் ஆரம்பிசப்ப என் வில்லி கேரக்டர் அவ்வளவா பரபரப்பாகலை. இப்போ சமீபமாதான் இந்தக் கதாபாத்திரம் பயங்கர ரீச் கொடுத்திருக்கு. வெளியில போறப்ப என்னை அவந்திகாவாகவும், சீதாவாகவும் பார்க்கிறவங்க இருக்காங்க. ஐ ம் சோ ஹேப்பி..!''

`டப்ஸ்மாஷ்ல கலக்குறீங்களே..?'

``அழகிய தமிழ்மகள்' ஷூட் முடிஞ்சு செட்டுல எல்லோரும் ஜாலியா பேசிட்டு இருப்போம். நாங்க எல்லாருமே அடிக்கடி தனித்தனியா டப்ஸ்மாஷ் பண்ணி அப்லோடு பண்ணுவோம். திடீர்னு ஒருநாள் ஏன் நாம எல்லாரும் சேர்ந்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. அதுல இருந்து செட்டுல யாரெல்லாம் ஃப்ரீயா இருக்காங்களோ அவங்களெல்லாம் சேர்ந்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.'' 

 

A post shared by sivaranjani (@ranjani.s) on

`காஸ்டியூம்ஸெல்லாம் சூப்பரா இருக்கே..?'

``ரெண்டு சீரியலிலும் நெகட்டிவ் ரோலில் நடிக்குறதுனால ஒரு சீரியலுக்கும், இன்னொரு சீரியலுக்கும் வெரைட்டி காட்ட வேண்டிய அவசியம் இருக்கு. இப்போ `பிரியமானவள்' சீரியலில் எனக்கு (அவந்திகா) தலையில் அடி பட்டிருக்குற மாதிரி சீன் போய்ட்டு இருக்குறதுனால... அழகிய தமிழ்மகள் சீதாவுக்கு வெரைட்டியா காஸ்ட்யூம்ஸ் தேடிட்டு இருக்கேன். ஒரு சீரியலில் பயன்படுத்துற காஸ்ட்யூமை இன்னொரு சீரியலில் பயன்படுத்த மாட்டேன்.''

`செட்டுல விதவிதமா சமைச்சு கொண்டுவருவீங்களாமே..?'

``அழகிய தமிழ் மகள் செட்டுல என்கூட நடிக்குற எல்லா கோ - ஆர்ட்டிஸ்டும் எனக்கு முன்னாடியே பரீட்சயமானவங்கதான். அதனால அவங்ககூட ஈஸியா மிங்கிள் ஆகிட்டேன். எங்களுக்குள்ள ஒரு டீல்... என்னனா, செட்டுல மாற்றி, மாற்றி ஒவ்வொருத்தரா வித்தியாச வித்தியாசமா சமைச்சு சாப்பாடு கொண்டுவரணுங்குறதுதான். ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வித்தியாசமா சமைச்சுக் கொண்டு வருவோம். நான் செட்டுல `சாதனா' அம்மாகூட பயங்கர குளோஸ். அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். குறிப்பா மேக்கப் அந்த காஸ்டியூமிற்கு ஏற்ற மாதிரி அவங்களைத் தவிர யாராலேயும் மெயிண்டெயின் பண்ண முடியாது.''

பின் செல்ல