Published:Updated:

''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..!' - சீரியல் பேஃம் மஞ்சரி

''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..!' - சீரியல் பேஃம் மஞ்சரி

''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..!' - சீரியல் பேஃம் மஞ்சரி

''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..!' - சீரியல் பேஃம் மஞ்சரி

''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..!' - சீரியல் பேஃம் மஞ்சரி

Published:Updated:
''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..!' - சீரியல் பேஃம் மஞ்சரி

'என்னா கொடுமை பண்ணுது இந்தப் பொண்ணு... இவளெல்லாம் ஒரு பொண்ணா...ச்சே'' என்று தாய்மார்களின் வயிற்றெறிச்சலை வாங்கிக்கொண்டவர் சீரியல் நடிகை மஞ்சரி. தற்போது என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்பது பற்றி தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். அதற்கு முன், அவரைப் பற்றி ஒரு குட்டி பயோடேட்டா.

முதல் சீரியல்  - உறவுகள்

நடித்த கதாபாத்திரம் : பாஸிட்டிவ் & நெகட்டிவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வசிக்கும் இடம்: சிங்கப்பூர்

பிரபலமான சீரியல் : அண்ணாமலை

மாற்றம்  : முன்னாடி குண்டா இருந்தேன். இப்போ, கொஞ்சம் ஒல்லியாகி, ஹேர் கட் பண்ணிருக்கேன்

ரீ- என்ட்ரி சீரியல் : கோலங்கள்

பிடித்த ரோல் : நெகட்டிவ்

குழந்தைகள்  : ஒரே பொண்ணு. இப்போ அவங்களுக்கு பத்து வயசாகுது. ஸ்கூல் போய்ட்டு இருக்காங்க.

நெக்ஸ்ட் பிளான் : தமிழ் சீரியலில் நடிக்க வெயிட்டிங்..!

''நடிகை குட்டி பத்மினி மூலமா 'உறவுகள்' சீரியலில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர்தான். இந்த சீரியலுடைய ஷூட்டிங் 50% சிங்கப்பூர்லயும், 50% இந்தியாவிலும் நடந்துச்சு. அதுதான் தமிழில் என்னுடைய முதல் சீரியல். அதுக்கப்புறம் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி சீரியலிலும் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியலில் நடிச்சிருப்பேன்'' என்றவர் தான் நடித்ததில் தனக்குப் பிடித்தமான கதாபாத்திரம் பற்றிச் சொன்னார்.

''எனக்கு பாஸிட்டிவ், நெகட்டிவ்ன்னு ரெண்டு ரோலில் நடிக்கிறதுக்கும் வாய்ப்பு கிடைச்சது. பிளஸ்ஸோ, மைனஸோ எனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை திருப்தியா நடிக்கணும்னு விரும்புவேன். ஆனா, எனக்கு ரொம்ப பொருத்தமான ரோல்னா அது 'நெகட்டிவ்' ரோல் தான். ஏன்னா, அந்த ரோல் மூலமாதான் நம்முடைய திறமையை வெளிக்காட்ட முடியும். சில சமயம், ஹீரோயின்களைவிட வில்லி கேரக்டர்ல நடிக்கிறவங்க பாப்புலர் ஆகிடுவாங்க. அந்த கதாபாத்திரத்துக்குதான் மக்கள்கிட்ட வரவேற்பு அதிகமா கிடைக்கும். அவங்க திட்டுறதுதான் எங்க பலம். வயித்துல என் குழந்தையை சுமந்துட்டு இருந்த நேரத்துல கோலங்கள் சீரியல்ல இருந்து விலக வேண்டியதா இருந்தது. ஆனா, என் நடிப்புக்காக டைரக்டர் காத்திருந்தார். நான் குழந்தையைப் பெத்துக்கொடுத்துட்டு வந்தப்புறம் எனக்காக சீன் வைச்சிருந்தார். அதையெல்லாம் இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது'' என்று பிளாஷ் பேக் நினைவிலிருந்து மீண்டவர்

இப்போ குடும்பத்தோட சிங்கப்பூர்ல வாழ்ந்துட்டு இருந்தாலும், இன்னமும் என் கேரியரை விடல. இங்கே சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். அதே மாதிரி ஒரு டேலண்ட் ஷோவுக்கு ஜட்ஜாவும் இருக்கேன். தமிழ் சீரியலில் நடிக்கிறதுக்கு ஆர்வமா தான் இருக்கேன். ஆனா, இப்போவரைக்கும்  வாய்ப்புகள் வரல.  

என் கூட நடிச்சவங்களில் சிலர், இப்போ அம்மா ரோலில் நடிச்சிட்டு இருக்காங்க. எங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் வந்ததாலோ என்னவோ சீரியலுக்கு பிரேக் விட்டவங்களுக்கு மறுபடி சுலபமா வாய்ப்பு அமையுறது இல்ல. ஆனா. அதுவும் ஹெல்தியான வளர்ச்சிதான். இந்தத் தலைமுறைக்கு ஏற்ற மாதிரி மக்களை கவர்வதற்கு டி.ஆர்.பி அவசியம். இதைத் தவிர வேறு வழியில்ல'' என்றவரிடம் மகள் பற்றி கேட்டால் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

''என் பொண்ணுக்கு இப்போ பத்து வயசாகுது. ஒரே பொண்ணு. செம செல்லம். பார்த்துப் பார்த்து அவளுக்காக ஒவ்வொரு விஷயமும் செய்துட்டு இருக்கேன். 'ஏன்மா இவ்வளவு கோபமா நடிக்கிறீங்க.. கொஞ்சம் சிரிச்சு நடிங்கம்மா'ன்னு பல தடவை சொல்லுவா. நடிப்புன்னா இதுதான் செல்லம்.. இயக்குநர் நம்மகிட்ட எந்த விஷயத்தை எதிர் பார்க்கிறாரோ அதை கரெக்டா நடிச்சிடணும் அம்முன்னு சொல்லுவேன். இப்போ, ஸ்கூல்ல நடக்குற டிராமாவில் கலந்துகிட்டு இருக்காங்க. எதிர்காலத்துல அவங்க இஷ்டப்பட்ட துறையை தேர்வு செய்யணும்ங்கிறதுதான் என் விருப்பம்.

பொதுவாக, எனக்கு 'அழுற' மாதிரியான சீன்களெல்லாம் வேண்டாம்னு ஃபீல் பண்ணுவேன். நார்மலா அழுறதை நான் விரும்ப மாட்டேன். கொஞ்சம் தைரியமான பொண்ணு. எப்பவும் பாஸிட்டிவாதான் யோசிப்பேன்'' என்றவர் தன் சீரியல் அனுபவங்களைப் பகிரத் தொடங்கினார்.

''அது, 'அண்ணாமலை' சீரியல் நடிச்சுட்டு இருந்த நேரம். ஒரு நிகழ்ச்சிக்கு என்னைச் சிறப்பு அழைப்பாளரா கூப்டாங்க. நானும் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சி நடந்த இடத்துல முதல் இருக்கையில் உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு என் முன்னாடி ஒரு சேர் பறந்து வந்து விழுந்துச்சு.  என்னவோ, ஏதோன்னு பதறி வேகமா எழுந்து திரும்பிப் பார்த்தா, ஒரு அம்மா என்னை அந்த சீரியல் கதாபாத்திரத்தைச் சொல்லி என்னைத் திட்டிட்டு இருந்தாங்க. அந்த இடத்துல எனக்குக் கொஞ்சம்கூட கோபம் வரலங்க.. சிரிப்புதான் வந்துச்சு. என் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்படணும்னு நினைச்சேனோ அந்த அளவுக்கு ரீச் ஆகிருக்குன்னு சந்தோஷப்பட்டேன்'' என்கிறவர் முன்பைவிட ஸ்டைலிஷாக இருக்கிறார். 

''ஹேர்கட் பண்ணிருக்கேன். நீங்க பார்த்த மஞ்சரிக்கும், இப்போ பார்க்கிற மஞ்சரிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. முன்னாடி கொஞ்சம் குண்டா இருந்தேன். இப்போ கொஞ்சம் ஒல்லியாயிருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, என் அம்மாகூட கோயிலுக்குப் போய்ருந்தேன். அங்க என்னைப் பார்த்துட்டு ஒருத்தங்க 'பழைய சீரியல் நடிகை மஞ்சரி மாதிரியே இருக்கீங்க ; நீங்க மஞ்சரி பொண்ணான்னு' என்கிட்ட கேட்டாங்க. 'நான் மஞ்சரி பொண்ணு இல்ல; மஞ்சரி தான்'னு சொன்னேன். அடடா... அந்த அளவுக்கா தோற்றத்தில் மாறிட்டோம்னு நினைச்சு எனக்குள்ளேயே சிரிச்சுகிட்டேன்.  இவ்வளவு பேர் புகழ் வாங்கிக் கொடுத்த தமிழ் சீரியல்ல ரீ என்ட்ரி ஆகணும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism