Published:Updated:

''கிராமத்தில் இருந்து சீரியல்ல நுழையிறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுக்கிட்டேன்!'' - 'வந்தாள் ஶ்ரீதேவி' அனன்யா

''கிராமத்தில் இருந்து சீரியல்ல நுழையிறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுக்கிட்டேன்!'' -  'வந்தாள் ஶ்ரீதேவி' அனன்யா
''கிராமத்தில் இருந்து சீரியல்ல நுழையிறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுக்கிட்டேன்!'' - 'வந்தாள் ஶ்ரீதேவி' அனன்யா

''கிராமத்தில் இருந்து சீரியல்ல நுழையிறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுக்கிட்டேன்!'' - 'வந்தாள் ஶ்ரீதேவி' அனன்யா

லர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், 'வந்தாள் ஶ்ரீதேவி'. கிராமத்து மண்வாசனை மிக்க இத்தொடரில், புதுமுக கதாநாயகியாக, துறுதுறுப்பான கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார், அனன்யா. சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் கூட்டத்தைச் சேகரித்துக்கொண்டிருப்பவர்.  யார் இந்த கிராமத்து தேவதை? வாங்க அவங்ககிட்டயே கேட்கலாம்..!

''அனன்யா யார்?''

''என் சொந்த ஊர், ஊட்டிக்கு அருகே மசினகுடி. என் ஃபேமிலி அங்கேதான் இருக்காங்க. அப்பா, டிராவல் கைடன்ஸில் ஒர்க் பண்றாங்க. அம்மா, குடும்பத் தலைவி. ஓர் அண்ணன், ஒரு தம்பி இருக்காங்க. நான் பி.காம் படிச்சிருக்கேன். இதுதான் அனன்யாவின் சிம்பிள் பயோடேட்டா.''

''சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்திருக்கீங்களாமே...''

''ஆமாம்! படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், அந்த வேலையில் ஈடுபாடே வரலை. எனக்கு பிடிச்ச மீடியாவில் நுழையும் ஆர்வம் அதிகமாச்சு. சாருஹாசன் சார் நடிக்கும் 'தா தா 87' படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். சரி, சீரியலும் டிரை பண்ணலாமேன்னு ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. இரண்டு வருஷ போராட்டத்துக்குத் தீர்வாக இப்போ என் முகம் மக்களுக்குத் தெரிய ஆரம்பிச்சிருக்கு. செம ஹேப்பியா இருக்கு.''

''எந்தப் பின்னணியும் இல்லாமல் மீடியாவுக்குள் வர்றது பெரிய சவாலா இருந்திருக்குமே?'' 

''நான் கிராமத்து பின்னணியிலிருந்து வந்ததாலே, மீடியாவுக்கு ஏற்ப என் லுக்கை மாத்திக்க ஆரம்பிச்சேன். எனக்கு நீளமான முடி இருந்துச்சு. அதை கட் பண்ணி, மார்டன் டிரஸ் போட்டு ஃபோட்டோ ஷூட் பண்ணினேன். நிறைய ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். பலமுறை ஏன் செலக்ட் ஆகலைன்னு ரீசன் தெரியாமல் குழம்பியிருக்கேன்.''

'' 'வந்தாள் ஶ்ரீதேவி' சீரியல் அனுபவம் பற்றி...''

''இந்தக் கதைக் களம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் செம்மையா வாய் பேசுவேன். ஆனால், சீரியலில் அமைதியான பொண்ணா நடிக்கணும். நான் கிராமத்துப் பொண்ணுங்கிறதால் இந்தக் கதாபாத்திரம் இயல்பாக செட் ஆகிடுச்சு. சீரியலின் ஒரு சீன்ல, என் சித்தி எனக்குச் சூடு வைப்பாங்க. உண்மையாவே சூடுபட்ட மாதிரி உள்வாங்கி நடிச்சேன். டைரக்டர் ரொம்ப பாராட்டினார். அந்த சீரியலில் மற்றவங்க அதிர்ஷ்டகாரப் பொண்ணுன்னு சொல்வாங்க. நிஜத்திலும் நான் லக்கியான பொண்ணுதான்.''

''உங்க ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு?''

''மீடியாவுக்குள் போக ஆரம்பத்தில் மறுத்தாங்க. என் முடிவில் தீவிரமா இருக்கவே சம்மதிச்சாங்க. முதன்முதலில் சீரியல் டெலிகாஸ்ட் ஆகும்போது ஃபேமிலியின் ரியாக்‌ஷனைப் பார்க்கணும்னு ஆவலுடன் வீட்டுக்கு வந்துட்டேன். ஸ்கீரினில் என்னைப் பார்த்து எமோஷனல் ஆகிட்டாங்க. ஊரில் உள்ள பால்ரும் அம்மாகிட்ட 'அந்த சீரியலில் உங்க பொண்ணு பிரமாதமா நடிக்குது'னு சொன்னதைக் கேட்டு பூரிச்சுப் போய்ட்டாங்க.''

''மறக்கமுடியாத பாராட்டு...''

''என் ஸ்கூல் தலைமை ஆசிரியர் சீரியலைப் பார்த்துட்டு, வீட்டுக்கு வந்து பாராட்டினாங்க. அதோடு, அடுத்த வருஷம் ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினரா வரச் சொல்லியிருக்காங்க. அனன்யா செம்ம ஹாப்பி அண்ணாச்சி.''

''எதிர்கால லட்சியம்...''

''நல்ல நடிகைன்னு மக்களிடம் பேர் வாங்கணும். தொடர்ந்து படங்களில் என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தணும்.''

அடுத்த கட்டுரைக்கு