Published:Updated:

``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்?"

``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்?"

விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கான காரணம் என்ன?

``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்?"

விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கான காரணம் என்ன?

Published:Updated:
``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த `பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்?"

ஒளிபரப்பாகிற சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து ‘விஜய் டெலி அவார்ட்ஸ்’ என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் விருதுகளை வழங்கி வருகிறது விஜய் டிவி. கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இரு தினங்களுக்கு முன் சென்னை புறநகரில் `பிக்பாஸ்' வீடு அமைந்திருந்த அதே இடத்தில் நடைபெற்றது.

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என லக்ஷ்மி ராமகிருஷ்ணனைக் கலாய்த்துப் புகழ் பெற்ற ராமர் இந்த விழாவில் ஆர்யா கல்யாண ஷோவைக் கையிலெடுத்தார். `சீதையைத் தவிர யாரையும் நிமிந்து பார்க்காதவர் பேரை வெச்சிருக்கிறவன் முன்னாடி பதினாறு பொண்ணுகளைக் கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே, என்னய்யா இப்படிப் பண்றீங்களேய்யா!’ என்ற அவரது பெர்ஃபாமன்ஸ் அனைவரின் வயிறையும் புண்ணாக்கியது.

`சரவணன் மீனாட்சி’ ரியோ, `ராஜா ராணி’ சஞ்சீவ் இருவரும் சேர்ந்து நடனமாட, போட்டியாக ஆல்யா மானஸா, ரேமா ஆகியோர் `கிங் ஆஃப் டான்ஸ்’ குழுவினருடன் சேர்ந்து டஃப் கொடுத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நட்சத்திரங்களின் நடனம், காமெடிக்கு இடையே ஒவ்வொரு பிரிவாக விருதுகள் வழங்கப்பட்டன.

ஆல்யா மானஸாவும் சஞ்சீவும் சிறந்த ஹீரோயின், ஹீரோவாகத் தேர்வாக, சிறந்த தொடருக்கான விருதைத் தட்டி விருதுகளை அள்ளியது ‘ராஜா ராணி’ சீரியல்.

சிறந்த வில்லி – டாக்டர் ஷர்மிளா (பகல் நிலவு)

சிறந்த ஜோடி – ப்ரஜின் - பாவினி (சின்னத்தம்பி)

சிறந்த புதுமுகம் – சரண்யா சுந்தர்ராஜன் (நெஞ்சம் மறப்பதில்லை)

சிறந்த டீம் – சின்னத்தம்பி

சிறந்த ஆங்கர் (ஆண்) – மா.கா.பா.ஆனந்த்

சிறந்த ஆங்கர் (பெண்) – ப்ரியங்கா

இவர்களுடன் ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதாவுக்கு நீண்ட நாள்களாக சேனலில் நடித்து வருவதற்காக சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

விஜய் டி.வி வரலாற்றில் கடந்தாண்டு ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ ஒரு மைல்கல் என்பதால், ’ப்ரைட் ஆஃப் விஜய் டிவி’ என அந்த ஷோவில் கலந்துகொண்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் ஏனோ, ஓவியா, காயத்ரி ரகுராம், கஞ்சா கருப்பு, சினேகன், சக்தி, ரைஸா, ஜூலி, சுஜா என முக்கியமான ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. பரணி, ஆர்த்தி, கணேஷ் வெங்கட்ராம், அனுயா, ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி, வையாபுரி, காஜல் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.

``எப்படி இருக்கும்னு தெரியாமலேயே அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறோம்னு தைரியமா போனோமில்லையா... அதுக்காகப் பாராட்டினாங்கண்ணே. ஷோ மூலமா வாய்ப்புகள் வந்ததை நான் மறக்கமாட்டேன். இப்போகூட ‘நாடோடிகள் 2’ பண்ணிக்கிட்டு இருக்கேன். கடந்தாண்டு புதுவரவா வந்து ’செம’யா வரவேற்பும் கிடைச்ச ஷோ அப்டீங்கிறதால, ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் அத்தனை பேருமே விழா மேடையில இருக்கணும்னு சேனல் விரும்பினதா சொல்றாங்க. ஆனா, ஷோ மூலம் அதிகமா ரீச் ஆனவங்களே ஏன் வரலைனு புரியலைண்ணே!’ என்கிறார் நடிகர் பரணி.

சிலருக்கு சேனலிலிருந்து அழைப்பு போனபோது, ‘பிஸியா இருக்கேனே’, 'அந்தத் தேதியில் வேற பிளான் இருக்கே!' என்ற ரீதியில் பதில்கள் வர, கடுப்பான சேனல் மறுபடியும் அவர்களை அழைக்க வேண்டாம் என விட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் வருகிறது. 

‘அந்தத் தேதியில கேரளாவுல சில நிகழ்ச்சிகள்ல கமிட் ஆகியிருந்ததால், விழாவுல கலந்துக்க முடியலை'  என்கிறார்கள், ஓவியா தரப்பில்.

மற்ற சிலரைத் தொடர்புகொண்டபோது கிடைத்த பதில்... 'பிஸியா இருக்கேன், பிறகு பேசுறேனே!'தான்.

ஒரேயொரு ஷோ... பலரையும் ஓவர் பிஸியில வெச்சிருக்கு.