Published:Updated:

``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

Published:Updated:
``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..!’’ - அத்தியாயம் 13

சில ஷோ கன்ட்டென்டிற்காக ஹிட்டாகும்; சில ஷோ ஆங்கருக்காக ஹிட்டாகும். அப்படி சிவகார்த்திகேயனால் ஹிட்டான ஷோதான் ’அது இது எது’. ’எதிர்நீச்சல்’ படம் ரிலீஸாகுற வரைக்கும் சிவா `அது இது எது’ நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தார். அதுக்கப்பறம் அவரால பண்ண முடியாத ஒரு சூழ்நிலை வந்தது. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியலை. சிவா கிரியேட் பண்ணி வச்ச அந்த ஒரு இடத்துக்கு அடுத்து யாரை அழைச்சிட்டு வரதுன்னு எங்களுக்குள்ள பெரிய குழப்பம். அப்போதான் விஜய் டிவி பிரதீப் சார், ‘மா.கா.பா.வை வச்சு பண்ணலாம்’னு சொன்னார். அந்த டைம் மா.கா.பா ’சூப்பர் சிங்கர்’ல ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தார். சரி, மா.கா.பா.வை வச்சே போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். 

`அது இது எது’ ஷோவை இனிமேல் மா.கா.பா.தான் பண்ணுவார்னு சிவகார்த்திகேயனை வச்சே ஷோல சொல்ல வச்சோம். அந்த எபிசோடு முடிஞ்சதும் ரொம்ப வருத்தமாகத்தான் சிவா வெளியே போனார். சிவா போனதுக்கு அப்பறம் மா.கா.பா அந்த ஷோவை பண்ணும்போது, நிறைய பேர் அதை ஏத்துக்கவே இல்லை. ’என்ன காமெடி நல்லா இல்லை’, ‘சிரிப்பே வரலை’, ‘சிவகார்த்திகேயன் அளவுக்கு இல்லை’னு நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்துச்சு. பல நெகட்டிவ்களுக்கு மத்தியில ’அது இது எது’ ஷோவோட ரேட்டிங் பாஸிட்டிவ்வா வந்துச்சு. அந்த வாரம் எங்களுக்கு நல்ல ரேட்டிங் வந்ததால நாங்க எல்லாரும் ஹேப்பியா இருந்தோம். 

160-வது எபிசோடுல இருந்து இப்போ இரண்டாவது சீசன் வரைக்கும் கிட்டத்தட்ட 280 எபிசோடுகளா `அது இது எது’ ஷோவை சிறப்பா கொண்டு போயிட்டு இருக்கார் மா.கா.பா. அதுக்கு சாட்சியா சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸ்ல சிறந்த தொகுப்பாளர் விருது மா.கா.பா.வுக்கு கிடைச்சிருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் மா.கா.பாவுக்கு ’சூப்பர் சிங்கர்’ ஒரு கண்ணுனா, `அது இது எது’ இன்னொரு கண்ணு. இந்த ரெண்டு ஷோவையும் ரொம்ப முக்கியம்னு நினைப்பார். அதே மாதிரி ஆங்கரிங் பண்றதுக்கு அதிக மெனக்கெடல் எதுவும் பண்ண மாட்டார். இண்ட்ரொ இப்படி கொடுக்கணும்; இப்படித்தான் முடிக்கணும்னு எதுவும் ப்ளான் பண்ண மாட்டார். ரொம்ப யதார்த்தமா, கூலா ஆங்கரிங் பண்ணுவார். அவர் இயல்பா எப்படிப் பேசுவாரோ அதே மாதிரிதான் ஸ்டேஜ்லேயும் பேசுவார். எந்த ஷோவை தொகுத்து வழங்கினாலும், அந்த ஷோ மெட்டீரியலா மாறிடுவார். அதுதான் மா.கா.பா.வோட மிகப்பெரிய ப்ளஸ்.

சிவகார்த்திகேயனுக்குப் பிறகு ’அது இது எது’ ஷோவை மா.கா.பா பண்ண ஆரம்பிச்சதும், ஷோவை ஸ்டார்ட் பண்ணும்போதே ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்பார். அந்தத் தத்துவங்கள் எல்லாத்தையும் அவரேதான் யோசிச்சு சொல்லுவார். அது ரொம்ப நல்லா ரீச்சாச்சு. உதாரணத்துக்கு,’ஒருத்தன் காரு வச்சிருக்கிறான்; வீடு வச்சிருக்கிறான்னு அவனைப் பார்த்து பொறாமைப்படாதீங்க. அவன்கிட்டப் போய் கேட்டாத்தான் எத்தனை இ.எம்.ஐ வச்சிருக்கான்னு தெரியும்’, ‘நாமளா பார்த்து கடவுளுக்கு கொடுத்த மொட்டை; அவரா பார்த்து எடுத்துக்கிட்டா சொட்டை’னு இப்படி வாராவாரம் ஒரு தத்துவத்தோடு ஷோ ஆரம்பிப்பார். அப்பறம் ’சிரிச்சா போச்சு’ டீம் பசங்களுக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார். அதுவும் ரொம்பவே நல்லாயிருக்கும். ’ஊருக்குள் ஒரே ஒரு உத்தமன் எங்கள் திருட்டு கோட் திவாகர்’, ’இடம் வாங்க, விற்க அணுகவும் பழனி பட்டாளம்’, ’கிளாமர் குயின் நாஞ்சில் விஜயன்’, ’சிங்கப்பூரே செல்லாத சிங்கப்பூர் தீபன்’, ’என்னமா ராமர்’னு இப்படி நிறைய பெயர் வைப்பார்.

எனக்கும் எங்க டீமிற்கும் மா.கா.பா ரொம்ப பெட். பொதுவா தொகுப்பாளர்கள் ரொம்ப இறங்கி வந்து பழகமாட்டாங்க; மேலோட்டமாத்தான் இருப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனால், மா.கா.பா அப்படி கிடையாது. ’சிரிச்சா போச்சு’ டீமோடு ரொம்ப க்ளோஸா இருப்பார். சிவகார்த்திகேயனுக்கும் மா.கா.பா.வுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்தான். சிவகார்த்திகேயனை கலாய்ச்சா பதிலுக்கு அவர் பங்கமா கலாய்ச்சு விட்டுடுவார். ஆனால், மா.கா.பா.வை கலாய்ச்சா அவர் அதை வாங்கிப்பார். ’சிரிச்சா போச்சு’ டீம் லிப்ட்ல இருந்து வெளிய வரும்போதே, கோவில்மணி மாதிரி மா.கா.பாவை அடிச்சுட்டுத்தான் வருவாங்க. தன்னை கலாய்க்கிறதுக்கு அவரே இடம் கொடுப்பார். எப்போதாவது திரும்ப கலாய்ப்பார். 

மா.கா.பா நிறைய படங்கள் நடிச்சுட்டு இருந்தாலும் `அது இது எது’ ஷோவுக்காக டைம் கேட்டா உடனே கொடுத்திருவார். அவரால என்னைக்கும் ஷூட் தள்ளிப் போனது இல்ல. அந்தளவுக்கு ரொம்ப ஈடுபாட்டோட இருப்பார். எதிர்காலத்துக்கான திட்டத்தைப் பற்றி யோசிக்காம வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவார். இது அவர்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச குவாலிட்டி.