Published:Updated:

``சிங்கம் படத்துல நடிக்கும்போதுதான் அவருக்கு என் மேல காதல் வந்திருக்கு..!' - வனஜா

``சிங்கம் படத்துல நடிக்கும்போதுதான் அவருக்கு என் மேல காதல் வந்திருக்கு..!' - வனஜா
``சிங்கம் படத்துல நடிக்கும்போதுதான் அவருக்கு என் மேல காதல் வந்திருக்கு..!' - வனஜா

``சிங்கம் படத்துல நடிக்கும்போதுதான் அவருக்கு என் மேல காதல் வந்திருக்கு..!' - வனஜா

சின்னத்திரை சீரியலில் பொறுமையான பெண்ணாக யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், வனஜா. விஜய் தொலைக்காட்சியின் மூலமாக சின்னத்திரையில் நுழைந்தவர். சன் டிவியில் தொடர்ச்சியாகப் பல சீரியல்களில் நடித்தவர். தற்போது, நடிப்புக்கு பிரேக் எடுத்திருப்பவரிடம் பழைய அனுபவங்களை ரீவைண்ட் செய்யச் சொன்னோம். அதற்குமுன் அவரைப் பற்றிய ஒரு குட்டி பயோ...

பெயர்: வனஜா

சொந்த ஊர்: சென்னை

பிடித்த ரோல்: பாஸிட்டிவ்

குழந்தைகள்: பொண்ணுக்கு 5 வயசு. பையன் பிறந்து 11 மாசம் ஆகுது

தற்போது: முழுநேர குடும்பத் தலைவி

நெக்ஸ்ட் பிளான்: சீக்கிரமே மீடியாவில் ரீ-என்ட்ரி

``என் சொந்த ஊர் சென்னை. பிஸிஏ படிச்சிருக்கேன். ஒரு பரதநாட்டிய டான்ஸர். காலேஜ்ல நிறைய ஈவண்ட்ல கலந்துகிட்டிருக்கேன். என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தப்போ, அவள் அப்பாவிடம் சொல்லி, என்னை போட்டோ எடுத்தாங்க. அந்த போட்டோவைப் பார்த்துட்டு, உயரமா, கலையா இருக்கே. மீடியாவில் ட்ரை பண்ணலாமேனு பலரும் சொன்னாங்க. அந்தப் புகைப்படம் எப்படி பிஆர்ஓ-வுக்குக் கிடைச்சதுன்னு தெரியலே. விஜய் டிவியிலிருந்து கூப்பிட்டாங்க. அப்படித்தான் முதல் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள். சன் டிவியில்தான் நிறைய சீரியல்கள் பண்ணினேன். சாயங்காலம் 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வரிசையாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு சீரியல் தவிர மற்ற எல்லாத்திலும் என்னைப் பார்க்கலாம் என்கிற அளவுக்கு பிஸியா நடிச்சேன். சீரியலில் எப்படிப் பாசமும் பொறுமையும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பேனோ, நிஜத்திலும் அப்படித்தான். எந்த விஷயத்திலும் ஓவர் எமோஷனல் ஆகாமல் யோசிச்சு முடிவுப் பண்ணுவேன்'' என்று புன்னகையுடன் தொடர்கிறார் வனஜா.

`` `சிங்கம் (1)' படத்துக்காக டைரக்டர் ஹரி ஆடிஷனுக்கு வரச் சொல்லியிருந்தார். முதலில் என் ரோல் பற்றி சொல்லலை. நடிக்க ஆரம்பிக்கும்போதுதான் நெகட்டிவ் ரோல்னு தெரிஞ்சது. கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. `யோசிக்காதீங்க. நீங்க நடிச்சாதான் சரியா இருக்கும்'னு சொன்னாங்க. ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட் எந்தக் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிக்கணும். நானும் நடிச்சேன். ஹரி சாரின் அசிஸ்டென்ட்தான் என் கணவர். அந்தப் படத்தில் நடிச்சப்போ எங்க சந்திப்பு நடந்துச்சு. கல்யாணம் பண்ணிக்க விரும்பி வீட்டுக்கு வந்து பெண் கேட்டார். இப்போ எங்களுக்கு ரெண்டு பசங்க. கல்யாணத்துக்கு அப்புறம் `பொன்னூஞ்சல்' சீரியலில் மூன்று வருஷம் நடிச்சேன். கர்ப்பமானதும் சீரியலுக்கு பிரேக் எடுத்துக்கிட்டேன்'' என்றவர். ஓர் அம்மாவாக தன் குழந்தைகள் பக்கம் பயணிக்கிறார்.

``என் பொண்ணுக்கு 5 வயசாகுது. பையன் பிறந்து 11 மாசம் ஆகுது. ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்கவே டைம் சரியா இருக்கு. பையன் பிறந்த சமயத்தில் தனியா சமாளிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். என் பொண்ணு இந்த சின்ன வயசிலும் அவளால் முடிஞ்ச உதவியை செய்தப்போ பூரிச்சுப்போயிட்டேன். வீட்டைத் துடைக்கிறது, தட்டுகளை எடுத்து வைக்கிறதுன்னு பரவசப்படுத்திட்டா. அவளுக்குத் தம்பி மேலே உயிர். அவ்வளவு அன்பா பார்த்துப்பா. என் குழந்தைகளுக்கு அன்பையும் ஒழுக்கத்தையும் கத்துக்கொடுக்கிறேன். நான் சின்ன வயசில் விளையாடின பல பாரம்பர்ய விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுக்கிறேன். என் கணவர் `சாமி 2' ஷூட்டிங்கில் பிஸியா இருக்கார். எனக்கு இப்பவும் நல்ல ஆஃபர்ஸ் வருது. பையனுக்கு ஒரு வயசு ஆகட்டும்னு வெயிட் பண்றேன். அப்புறம், மீடியாவில் ரீ-என்ட்ரி கொடுப்பேன். என் வீட்டுல இருக்கும் ரெண்டு பீரோ சேலைகளை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஆல்டர் பண்ண ஆரம்பிச்சுட்டேன். பக்கா தாயாரிப்போடு ரீ-என்ட்ரி கொடுப்பேன். சினிமாவிலும் வாய்ப்பு கிடைச்சா என்னைப் பார்க்கலாம். ரசிகர்களின் கைதட்டலுக்குக் காத்திருக்கேன்'' என்கிறார் முகம் நிறையச் சிரிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு