Published:Updated:

"ஆர்யாவோட முடிவு எனக்கு பயங்கர ஷாக்"- 'சிவகாமி' மீனு கார்த்திகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"ஆர்யாவோட முடிவு எனக்கு பயங்கர ஷாக்"- 'சிவகாமி' மீனு கார்த்திகா
"ஆர்யாவோட முடிவு எனக்கு பயங்கர ஷாக்"- 'சிவகாமி' மீனு கார்த்திகா

"ஆர்யாவோட முடிவு எனக்கு பயங்கர ஷாக்"- 'சிவகாமி' மீனு கார்த்திகா

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிவகாமி' சீரியல் சற்று வித்தியாசமானது. சீரியல் என்றாலே, வீட்டின் நான்குச் சுவருக்குள்ளேயே சுற்றிவரும் என்கிற கான்செப்ட்டை உடைத்து, கிராமத்தின் வீதி, வயல்வெளி எனப் பல இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது 'சிவகாமி'. அதேபோல, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கதையின் போக்கில் அலசுகிறது. இத்தொடரின் நாயகி, மகேஸ்வரியாக இயல்பான நடிப்பில் மிளிரும், மீனு கார்த்திகாவிடம் பேசினோம்.

"உங்கள் பெயர் மீனு கார்த்திகா... நீனு கார்த்திகா?"

"மீனு கார்த்திகாதான். சில இடங்களில், நீனு கார்த்திகா எனச் சொல்லிடறாங்க"

"உங்களைப் பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேன்...''

"எனக்கு கேரளா. மாடலிங் பண்ணிட்டிருந்தேன். சில விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன். தெலுங்கு, தமிழ்ப் படங்களிலும் நடிச்சுட்டிருந்தேன். ஜெயா டி.வியின் 'வைதேகி' சீரியல், நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு. அப்புறம், 'முத்தாரம்' சீரியலில் தேவயானிக்குப் பதிலாக நடிச்சது, பரவலாக என்னைக் கவனிச்சது. இந்நிலையில், குடும்பத்தோடு இருக்கவேண்டிய ஒரு சூழல் உருவாக, நடிப்புக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருந்தேன்.''

" 'சிவகாமி' சீரியலுக்குள் வந்தது எப்படி?"

" 'முத்தாரம்' சீரியலில் வொர்க் பண்ணின நண்பர் ஒருவர், இந்த சீரியல் பற்றிச் சொன்னார். ஆரம்பத்தில், ஓகே சொல்ல முடியாத சூழல். கொஞ்ச நாள் கழிச்சு, மறுபடியும் கால் பண்ணினார். நமக்கான வாய்ப்பு நம்மை விட்டுப்போகாது என்பதை நம்புகிறவள் நான். அதனால்தான் இந்த வாய்ப்பு நமக்கு திரும்பவும் வந்திருக்குனு உள்மனசு சொல்லிச்சு. என் கேரக்டர் பற்றியும் சொன்னாங்க. வித்தியாசமான, துணிச்சலான மகேஸ்வரி கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இந்த வாய்ப்பு கொடுத்த எங்க டைரக்டருக்கு ரொம்ப தேங்க்ஸ்."

"சீரியலில் பெரும்பாலும் புதுமுகங்களாக இருக்காங்க. அவர்களோடு நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?"

"நிறைய ஆடிசன் வெச்சுதான் செலக்ட் பண்ணியிருக்காங்க. புதுமுகங்களாக இருந்தாலும், பல சீன்களில் ஒரே டேக்ல நடிச்சு அசத்தறாங்க. நாங்க எல்லோருமே கதையின் தன்மையைப் புரிஞ்சு உள்வாங்கி நடிக்கிறோம். ஏன்னா, இது டைம் பாஸ் பண்ற சீரியல் இல்லே. சமூக அக்கறையோடு எடுக்கப்படும் சீரியல்."

"ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்...''

"தேனி பக்கத்து கிராமத்தில்தான் ஷூட்டிங். போன வருஷம் டிசம்பரில் இங்கே வந்தப்போ, கேரளாவில் இருக்குற மாதிரி அப்டி ஒரு பசுமை, குளுமை. இப்போ, பார்த்தால் அதுக்கு நேர் மாதிரியா இருக்கு. ஆனாலும், இந்த ஊர் பிடிச்சிருக்கு. தேனிப் பொண்ணு மாதிரியே ஆகிட்டேன். ஒருநாள் டூர் வந்த ஒரு குரூப், 'ஹேய்... நீங்க மகேஸ்தானே!'னு அடையாளம் கண்டுபிடிச்சு பேசினாங்க. அதிலும் குட்டிப் பசங்க  'மகேஸ் அக்கா'னு கூப்பிட்டப்போ மேகத்தில் மிதந்த சந்தோஷம்.''

"உங்க நடிப்புக்குக் கிடைச்ச ஸ்பெஷல் பாராட்டு எது?"

"கலர்ஸ் டிவி பங்‌ஷனுக்கு 'மெட்ராஸ்' கலையரசன் சார் வந்திருந்தார். அவர்கிட்ட என்னை அறிமுகப்படுத்தும்போது, 'சிவகாமி சீரியல்ல'னு ஆரம்பிச்சதும், 'மகேஸ்வரிதானே... நல்லா தெரியுமே'னு சொன்னார் . அந்த அளவுக்கு நாம கவனிக்கப்பட்டிருக்கோம்னு தெரிஞ்சதும் செம ஹேப்பி."

"'எங்க வீட்டு மாப்பிள்ளை' ஃபைனல் நிகழ்ச்சிக்குப் போயிருந்தீங்களே... அதுபற்றி...''

" 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புரோகிராம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங்ல பிஸியா இருந்தாலும் எப்படியாவது பார்த்திருவேன். என் சாய்ஸ் சுசானா. ஆர்யா நிச்சயம் அவரைத்தான் கல்யாணம் செய்துக்குவார்னு நினைச்சேன். சுசானா இல்லைன்னாலும் போட்டியாளர்களில் ஒருவரைக் கல்யாணம் பண்ணுவார்னு எதிர்பார்த்தேன். ஆனால், யாரையும் செலக்ட் பண்ணாமல், இன்னும் கொஞ்சம் டைம் வேணும்னு சொன்னது பயங்கர ஷாக். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு