Published:Updated:

"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்!" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்!" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்!" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்!" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்!" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

Published:Updated:
"திடீர் கல்யாணம்லாம் பண்ணலீங்க... பிளான் பண்ணியே பண்ணினோம்!" - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

'ராஜா ராணி' சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருப்பவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப். செல்லப் பிராணிகளின் காதலியான ஶ்ரீதேவிக்கு, அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவருடன் 'டும் டும்' நடந்துள்ளது. திருமண நிலவில் காலடி எடுத்துவைத்திருக்கும் ஶ்ரீதேவியிடம் ஒரு ஸ்வீட் சாட்!

''என் கணவர் அசோக் சிந்தாலா, பெங்களூரில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைபார்க்கிறார். அவருக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். குறிப்பாக, பெட் Pet போட்டோகிராஃபி கைவந்த கலை. அவ்வளவு அழகாக எடுப்பார். நம்மூரில் பெட் போட்டோகிராஃபர்கள் குறைந்த அளவே இருக்காங்க. இவருடைய புகைப்படங்களைப் பார்த்து, என் பெட்ஸை போட்டோ எடுக்கணும்னு பேசினேன். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பிச்சது. என்னைவிட பல மடங்கு அவர் செல்லப் பிராணிகள்மீது காதல்கொண்டவர். என் செல்லப் பிராணிகளை நான் குழந்தைகள் மாதிரிதான் பார்ப்பேன். அதேமாதிரிதான் என் கணவரும். அவர் வீட்டுல ஜாஸ், லூஃபீ என  ரெண்டு குழந்தைகள் (நாய்கள்) இருக்காங்க. என் வீட்டுல, டாம், டஃப்பி என ரெண்டு குழந்தைகள். ஆக, எங்களுக்கு நாலு பசங்க. இன்னும் நாலு பேரும் சந்திச்சுக்கலை. என்னை மாதிரியே எண்ணங்களுடைய கணவர் கிடைச்சது அதிர்ஷ்டம்'' எனச் சிலிர்க்கும் ஶ்ரீதேவி, தன் திருமண பிளான்களைப் பற்றிப் பகிர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் என்கிட்ட நேரடியா காதலைச் சொல்லாமல் குடும்பத்தினரிடம் சொல்லி, எங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்டாங்க. ரெண்டு பேரின் குடும்பத்துக்கும் பிடிச்சிருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் தெலுங்கு. அதனால், தெலுங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடக்கணும்னு ஆசை. 'ராஜா ராணி' சீரியல் ஷூட்டிங்கில் நான் பிஸியா இருந்ததால், கல்யாண வேலைகள் எல்லாத்தையும் அவரும்  குடும்பத்தினரும் பார்த்துக்கிட்டாங்க. திருமணப் புடவைகள், நகைகள் என எல்லாமே அவர்தான் தேர்ந்தெடுத்தார். எனக்கு ஏப்ரல் 28 பிறந்தநாள். அன்னைக்குத்தான் எங்க கல்யாணமும் நடந்துச்சு. என் பிறந்தநாளுக்கு கிடைச்ச மிகச்சிறந்த பரிசு, என் கணவர்தான்'' எனப் புன்னகைக்கிறார் ஶ்ரீதேவி.

சரி, ஹனிமூன் பிளான்..?

''இப்போதைக்கு ஹனிமூன் பற்றி எந்த பிளானும் இல்லே. எனக்கும் ஷூட் இருக்கு; அவருக்கும் ஆபீஸ் இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சுத்தான் பிளான் பண்ணணும். எங்க கல்யாணம், ராஜமுந்திரியில் நடந்துச்சு. அதனால்தான், நண்பர்களால் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்க முடியலை. அதுக்குள்ளே நாங்க ரகசிய திருமணம் செஞ்சுகிட்டதா யூடியூபில் வதந்தி பரவ ஆரம்பிச்சிருச்சு. சென்னையில் ரிசப்ஷனுக்கு பிளான் பண்ணிட்டிருக்கோம். அந்த ரிசப்ஷனில் நிறைய நண்பர்கள் கலந்துப்பாங்க'' என்றவர், கணவரின் குடும்பம் பற்றி பகிரத் தொடங்கினார்.

''என் மாமியார் ரொம்ப ஸ்வீட். என்னுடைய விருப்பம்தான் அவங்களுக்கு முக்கியம். திருமணமாகி பிறந்த வீட்டைவிட்டு பெங்களூருக்குப் போகும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனால், அங்கே போனதுக்கு அப்புறம் என் அம்மா, அப்பாவை மனசு தேடவே இல்லை. அந்த அளவுக்கு கணவர் குடும்பத்தினர் என்னை அன்பாகப் பார்த்துக்கிறாங்க. 'உனக்குப் பிடிச்சிருந்தா தொடர்ந்து நடிச்சுட்டே இரு'னு சொல்லியிருக்காங்க. தொடர்ந்து சீரியலில் நடிப்பேன். அப்புறம்... ஒரு விஷயம் சொல்லணும். அவரை பெட் ஃபோட்டோ எடுக்கத்தான் முதலில் தொடர்புகொண்டதா சொன்னேன் இல்லியா? ஆனால், இப்போவரை அந்த பெட் ஃபோட்டோஸை எடுக்கவே இல்லை'' என முத்துச் சிரிப்பை உதிர்க்கிறார் மணப்பெண், ஶ்ரீதேவி.

பட உதவி : Aa photography 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism