''சேனல் ஏரியாவுல இள வட்டங்கள்தான் உன் கண்ணுக்குத் தெரியுமா..? பல வருஷமா கலக்கிட்டு இருக்குற சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை எல்லாம் பார்க்க மாட்டியா..?''

- சமீபத்துல ஒரு ஃபங்ஷன்ல என்னைப் பார்த்த ஒரு அக்கா, வாசகிகளோட வாய்ஸா என்கிட்ட கேட்க, சீனியர்களைத் தேடி ஸ்கூட்டியை விட்டேன்!

''அப்போ 'வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் எப்படிப் பார்த்தேனோ... அப்படியே இருக்கீங்க!''னு சொன்னதும், ஒரே சந்தோஷம் உமா பத்மநாபனுக்கு!

''ஒண்ணு தெரியுமா ரீட்டா... நான் நிகழ்ச்சித் தொகுப்பாளரா என் கேரியரைத் தொடங்கினப்போ, என் பொண்ணு சரண்யாவுக்கு 10 வயசு. ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்க வந்த ஒரு அம்மா, 'என்னோட பையனுக்குப் பெண் பார்த்துட்டு இருக்கோம். உங்க பேரன்ட்ஸ்கிட்ட வந்து பேசட்டுமா?’னு கேட்டாங்க. 'என் ஹஸ்பண்ட்கிட்டதான் பேசணும்!’னு நான் சொல்ல, மொத்த யூனிட்டும் விழுந்து விழுந்து சிரிச்சோம். எதையும் பாஸிட்டிவ்வா எடுத்துக்கிட்டா... வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்; நாம இளமையா இருப்போம்!''னு சிரிச்ச உமா,

''சன் சேனல் ஆரம்பிச்ச காலகட்டம்... சின்னதா விளம்பரம் வந்த பேப்பர் கட்டிங் பார்த்துட்டு, அப்ளை செய்தேன். இன்டர்வியூல செலெக்ட் ஆகி, ஸ்கிரீன்ல வந்துட்டேன். சன் டி.வி-யோட முதல் லைவ் ஆங்கர், முதல் நியூஸ் ரீடர், ஆயிரம் எபிசோட் மேல 'வணக்கம் தமிழகம்’ புரோகிராம்னு இந்த வேலையில் நிறைய சந்தோஷங்களைப் பார்த்துட்டேன். 17 வருஷம் ஓடிடுச்சு. திரும்பிப் பார்த்தா, மனசுக்கு நிறைவா இருக்கு!''னு பரவசமாகுற உமாவுக்கு, 'சிவாஜி’, 'வெடி’யைத் தொடர்ந்து... இப்போ 'ஒரு கல் ஒரு கண்ணாடி’, 'கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல்’னு சினிமா வாய்ப்புகளும் காலிங் பெல் அடிச்சுட்டிருக்கு.

இளமைக்குக் கிடைத்த பரிசு!

''வாம்மா ரீட்டா! லஞ்ச் பிரேக்ல வந்திருக்கே... கண்டிப்பா சாப்பிட்டுத்தான் ஆகணும்!''னு பாசத்தோட வரவேற்றாங்க, 'செல்லமே’ சீரியல்ல நீலிமாராணிக்கு மாமியாரா மிரட்டிட்டு இருக்குற ஸ்ரீலேகா!

''இப்படி மேக்கப்பே இல்லாம, பழைய சேலையில இருக்கேன்னு பார்க்குறியா..? நீதான் பார்த்திருப்பியே... 'செல்லமே’ சீரியல்ல என் கேரக்டர் அப்படி. கொடுக்குற கேரக்டரை முழுமையா வெளிப்படுத்துறதாலதான், 35 வருஷமா கேமரா முன்னால நிக்க முடியுது!''னு ஃப்ளாஷ் பேக் ஓட்டத் தயா ரானாங்க ஸ்ரீலேகா.

''ஆரம்பத்துல சினிமாதான் நம்ம ஏரியா. சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில்னு நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியா நடிச்சுட்டு இருந்தேன். 'தாலியா சலங்கையா’ படத்துல முக்கிய ரோல் பண்ணினதுதான் முதல் வாய்ப்பு. அப்படியே சினிமா வாய்ப்புகள் தொடர, இப்போ 'செல்லமே’, 'மருதாணி’னு சேனல் ஏரியாவில் செட்டில் ஆகியிருக்கேன்'' சொன்ன ஸ்ரீலேகாவோட கணவரும், பிரபலம்.

''கணவர் ராஜேந்திரன், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரா இருக்கார். 'சாமி’ படத்துல வில்லன் கோட்டா சீனிவாசராவ், 'கில்லி' படத்துல ஆசிஷ் வித்யார்த்தி இவங்களுக்கெல்லாம் 'கணீர்’ குரல் கொடுத்தது, அவர்தான். டப்பிங், ஆக்டிங், சங்கத்தோட வேலைகள்னு எப்பவும் பிஸியா இருப்பார். என் ஒரே பையன் சரவணன், விஸ்காம் முடிச்சுட்டு கூத்துப்பட்டறையில நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கான். இன்னும் கொஞ்ச நாள்ல அவனையும் நீ பேட்டி எடுக்கணும்!''னு சந்தோஷமாச் சொன்னாங்க ஸ்ரீலேகா!

கலைக் குடும்பம்!

வாசகிகள் விமர்சனம்

சகிக்கவில்லை... சமையல்!

''மெகா டி.வி-யில் 'அதிரடி சமையல்’ என்கிற நிகழ்ச்சியை நடத்தும் ஷிஹான்

ஹுசைனி படுத்தும்பாடு தாங்க முடியவில்லை. விலைவாசி இருக்கும் நிலையில்... காய்கறிகளையும், சமையல் சாமான்களையும் சமையல் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி சிதறடித்து வீணாக்குகிறார். கேஸ் அடுப்பை வீணாக எரிய விடுகிறார், சமையல் பாத்திரங்களை விசிறியடிக்கிறார். சமைத்த உணவை ருசி பார்க்கிறேன் என்று கரண்டியை வாயில் வைத்து எச்சில் செய்கிறார்... அந்த கரண்டியை அப்படியே சமைத்த உணவில் போடுகிறார்... சகிக்கவில்லை!

சமையல் என்பதே ஒரு கலை. அதுமட்டுமல்ல, சமையல் கூடத்தை சுவாமி அறைக்கு நிகராகவே பலரும் பார்க்கின்றனர். இந்த நிலையில் அவர் அடிக்கும் கூத்து... ஆத்திரத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

குறுகிய நேரத்தில் விரைவாக செய்வதே அதிரடி சமையல் என்பதை யாராவது அவருக்கு சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என ஆதங்கப்படுகிறார் கோச்சடையில் இருந்து வெ.காளீஸ்வரி.

வெறுப்பேத்தறீங்களே கேப்டன்!

''கேப்டன் டி.வி. வழங்கும் 'கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ நிகழ்ச்சி... தெருவில் செல்பவர்களை கலாய்த்து அவர்களுடைய ரியாக்ஷனை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி. சமீபத்தில் பார்த்த நிகழ்ச்சியில்... ஒரு பெண், பார்வையற்றவர் போல நடித்து ரோட்டை கிராஸ் செய்கிறார். பரிதாபப்பட்டு அவருக்கு உதவுகிறார் ஒரு பொதுஜனம். அவருடைய பேக் மற்றும் அந்தப் பெண்ணின் பேக் இரண்டையுமே டி.வி. ஏற்பாடு செய்திருக்கும் ஒருவர் திருடிக் கொண்டு ஓடுகிறார். அதிர்ச்சியில் உறைகிறார் பொதுஜனம். இந்த நிகழ்ச்சி வேடிக்கைதான் என்றாலும், இதைப் பார்ப்பவர்கள், ரோட்டில் யாராவது உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்கூட ஏமாற்று வேலையோ என்று நினைக்கும் ஆபத்து இருப்பதை உணர்வார்களா... நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்'' என்று கொந்தளிக்கிறார் மதுரையில் இருந்து லஷ்மி.