Published:Updated:

சொர்ணமால்யா முதல் கஸ்தூரி வரை... பிக் பாஸ் சீசன் 2-வில் இவங்களைச் சேருங்க ப்ளீஸ்! - #BiggBossSurveyResult

சொர்ணமால்யா முதல் கஸ்தூரி வரை... பிக் பாஸ் சீசன் 2-வில் இவங்களைச் சேருங்க ப்ளீஸ்! - #BiggBossSurveyResult
சொர்ணமால்யா முதல் கஸ்தூரி வரை... பிக் பாஸ் சீசன் 2-வில் இவங்களைச் சேருங்க ப்ளீஸ்! - #BiggBossSurveyResult

பிக் பாஸ் தமிழ் சீசன் 1, 2017 ம் ஆண்டு ஜூன் 25 ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி  தொடங்குவதற்கு முன், `இது எப்படி இருக்கும்’, `நம்ம கலாசாரத்தைக் கெடுத்து விடுமா’ என்பது போல பல பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியோ எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வருகிற ஜூன் மாதம் 17 ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். அதற்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் சீசனில் கலந்துகொண்ட பிரபலங்களைவிட இந்த சீசனில் பெரிய நட்சத்திரங்களை அழைத்து வர வேண்டும் என வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. 

நடிகர்கள் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். 30 நபர்கள் கொண்ட பட்டியலை வாசகர்களின் முன் வைத்தோம். ஒரு வாரமாக நடத்தப்பட்ட இந்த சர்வேயில் ஆயிரக்கணக்கான வாசகர்கள்  கலந்துகொண்டனர். வாசகர்களின் வாக்குகளை அதிகம் பெற்ற அந்த 15 நபர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம். 

15: யூகி சேது:

விஜய் டிவிக்கும் கமல்ஹாசனுக்கும் நெருக்கமானவர் யூகி சேது. வாசகர்கள் இவருக்கு அதிக வாக்குகள் அளிக்க, 15 பேர் கொண்ட பட்டியலில் 15-வது இடம் பிடித்திருக்கிறார். மொத்தமாக இவர் 3.3 சதவிகிதம் வாக்குகளை வாங்கியிருக்கிறார். 

14: ஜனனி ஐயர்:

`அவன் இவன்’ படம் மூலம் அறிமுகமான ஜனனி ஐயர், `தெகிடி’, `அதே கண்கள்’, `பலூன்’ எனப் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் ரொம்ப பிஸியாக இல்லை என்றாலும், பெரிய இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸுக்குச் சென்று வந்தால் பிஸியாகி விடுவார் என வாக்களித்திருப்பார்கள் போல. 3.4 சதவிகிதம் வாக்குகள் வாங்கியுள்ளார். 

13:பூனம் பாஜ்வா:

`சேவல்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான பூனம் பாஜ்வா, `தெனாவட்டு’, `கச்சேரி ஆரம்பம்’, `ரோமியோ ஜூலியட்’, `அரண்மனை - 2’ போன்ற படங்கள் மூலம் மக்களுக்குப் பரிச்சயமானவர். இவர் வாசகர்களிடமிருந்து 3.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

12: `பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்:

பவர் ஸ்டாருக்கு அறிமுகம் தேவையில்லை. இவரை பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து அழகு பார்க்க பல வாசகர்கள் ஆசைப்படுகிறார்கள். 3.8 சதவிகித வாக்குகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.

11: பரத்:

பரத், மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் படங்களில் நடித்த கதாபாத்திரத்தைத் தாண்டி பரத்தைப் பற்றி பல விஷயங்கள் மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள 3.8 சதவிகித வாக்குகளை அளித்து, பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள் வாசகர்கள்.

10.சாந்தனு:

பிரபலத்தின் மகன் என்றாலும் சினிமாவில் தனக்கென ஓர் இடம் கிடைக்காமல் போராடி வருபவர் சாந்தனு. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தால் ஒரு நல்ல மாற்றம் வரும் என நினைத்த வாசகர்கள் இவருக்கு 4 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர். 

9.`ஜித்தன்’ ரமேஷ்:

நடிகர், சூப்பர் குட் ஃபிலிம்ஸின் இணை தயாரிப்பாளருமான `ஜித்தன்’ ரமேஷ், தற்போது அதிக படங்கள் நடிக்காமல் இருந்தாலும், மக்கள் இவரை மறக்கவில்லை. 4.2 சதவிகித வாக்குகளை இவருக்கு அளித்துள்ளனர்.

8.ராய்லட்சுமி:

பிக் பாஸின் முதல் சீசனுக்கே ராய்லட்சுமியை அழைத்திருந்தார்கள் என ஒரு தகவல் வந்தது. அப்போது `ஜூலி -2’ படத்தில் பிஸியாக இருந்த ராய்லட்சுமி, இந்த சீசனில் கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டு 4.2 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர்.

7.பிளாக் பாண்டி:

விஜய் டிவியின் கண்டுபிடிப்பான பிளாக் பாண்டி, `கனா காணும் காலங்கள்’ சீரியலுக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் தங்களை என்டர்டெயின் பண்ணுவார் என எதிர்பார்த்து  4.3 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர் வாசகர்கள். 

6.படவா கோபி:

விஜய் டிவியால் மக்கள் நன்கு அறியப்பட்டவர்களில் படவா கோபியும் ஒருவர். மிமிக்ரி, காமெடி, சமையல் என விஜய் டிவியின் பல ஷோக்களில் இவரை நாம் பார்த்திருப்போம். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என நினைத்து 4.6 வாக்குகளை அளித்திருக்கிறார்கள்.

5.ஷாம்:

`12B’ படத்தின் மூலம் ஹீரோவாக பரிச்சயமான ஷாம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். நல்ல படங்கள் மூலம் மக்களை கவர்ந்த ஷாம், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அவருக்கு 4.6 வாக்குகளை அளித்துள்ளனர்.

4.இனியா:

`வாகை சூட வா’ படம் மூலம் விருதுகளையும் மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றவர் நடிகை இனியா. படவா கோபி, ஷாம், இனியா என மூவருக்கும் 4.6 சதவிகித வாக்குகளை வாசகர்கள் வழங்கியிருக்கிறார்கள். 

3.கஸ்தூரி:

கஸ்தூரி தற்போது அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும், அரசியல், சமூகப் பிரச்னை எனப் பல விஷயங்களை தொலைக்காட்சியிலும், ட்விட்டரிலும் பேசி வருகிறார். இவரையும் முதல் சீசனுக்கு அழைத்ததாக ஒரு தகவல் இருக்கிறது. இந்த சீசனில் இவர் கலந்து கொள்ள வேண்டும் என 4.7 சதவிகித வாக்குகளை அளித்து டாப் 3 லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள் வாசகர்கள். 

2.சொர்ணமால்யா:

`இளமை புதுமை’ நிகழ்ச்சி மூலம் பல இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருந்த சொர்ணமால்யா, பல படங்களில் நடித்து, தற்போது பரதநாட்டிய கலைஞராக இருக்கிறார். இவரை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என நினைத்த நாஸ்டால்ஜிக் விரும்பிகள் 4.8 சதவிகித வாக்குகள் அளித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேற வைத்திருக்கிறார்கள்.

1.`தாடி’ பாலாஜி:

நடிகர், நகைச்சுவை கலைஞர்கள் என்பதையெல்லாம் தாண்டி பல பிரச்னைகள் மூலமா சமீபத்தில் வைரலானவர் பாலாஜி. இந்த 15 நபர்களில் இவருக்கே அதிக வாக்குகளாக 5 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இவரால் பல சர்ச்சைகள் வரும் என மக்கள் நினைத்திருப்பார்கள் போல. 

இந்த டாப் 15 லிஸ்டில் தேர்வான நபர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாசகர்கள் அளித்திருக்கும் வாக்குகள்: ரக்‌ஷிதா - 3.1, ஜான் விஜய் - 3.1, அமித் பார்கவ் - 2.9, பிரேம்ஜி - 2.7, நந்திதா - 2.7, நாஞ்சில் சம்பத் - 2.7, ஆலியா மானசா - 2.6, ப்ரியா ஆனந்த் - 2.5, பால சரவணன் - 2.4, அசோக் செல்வன் - 2.4, விஜய் வசந்த் - 2.3, சாரு நிவேதிதா - 2.2, லட்சுமிமேனன் - 2, கீர்த்தி சாந்தனு - 2, டேனியல் ஆனி போப் - 1.4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் யார் யார் பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் வருகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்...

அடுத்த கட்டுரைக்கு