Published:Updated:

`` `வொய்ஃப் கைல லைஃப்’ ஷோவுல ரியோவை வெச்சு செஞ்சுட்டேன்..!’’ - `டாடி கேடி’ சத்யராஜ்

வெ.அன்பரசி
`` `வொய்ஃப் கைல லைஃப்’ ஷோவுல ரியோவை வெச்சு செஞ்சுட்டேன்..!’’ - `டாடி கேடி’ சத்யராஜ்
`` `வொய்ஃப் கைல லைஃப்’ ஷோவுல ரியோவை வெச்சு செஞ்சுட்டேன்..!’’ - `டாடி கேடி’ சத்யராஜ்

``ஜோக்ஸ் சொல்றதைவிட மொக்க ஜோக்ஸ் சொல்றதைத்தான் எல்லாரும் ரசிக்கிறாங்க. இதை நீங்க மறுக்கவே முடியாது’’ என கோயம்புத்தூர் ஸ்லாங்கில் பேச ஆரம்பிக்கிறார் டாடி கேடி சத்யராஜ். `டாடி கேடி’ என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் மூலம் ஆயிரக்கணக்கான நபர்களை தனது மொக்க ஜோக் வீடியோவால் என்டர்டெயின் செய்துவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். 

அதென்னங்க `டாடி கேடி’... பேரே வித்தியாசமா இருக்கே..?

``என் சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போ ஜெய்பூர்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன். நான் பேசிக்கா ஒரு பைக் ரைடர். `டாடி கேடி’ பேர் எப்படி வந்துச்சுன்னா, எனக்கு ஒரு ஃப்ரெண்டு இருக்கான்; அவனும் நானும்தான் மொதல்ல இந்த பேஜ்ஜை ஸ்டார்ட் பண்ணோம். அவன் கொஞ்சம் தடியா இருப்பான். ஆனா என்னைவிட ரெண்டு வயசு சின்னப் பையன். பார்க்க எனக்கு அப்பன்மாதிரி இருப்பான். அதனால அவனை நாங்க டாடினு கூப்பிடுவோம். அவன் என்னைக் கேடினு கூப்பிடுவான். ஏன்னா நான் கொஞ்சம் திருட்டு வேலை பார்ப்பேன். திருட்டு வேலைனா சன்னமா ரௌசு விட்டுக்கிட்டு எதாச்சும் கலாட்டா பண்ணிட்டேயிருப்பேன். அதனால கேடினு கூப்டுவாங்க. `நாம ஆரம்பிக்கப் போற பேஜ்ஜுக்கு என்னடா பேர்வைக்கலாம் டாடி’னு கேட்டதுக்கு, அவன் `தெரியலேயே கேடி’னு சொன்னான். ஹேய் இதுவே நல்லா இருக்குடானு வெச்சதுதான் `டாடி கேடி’.‘’

டாடிங்கிறது உங்க  ஃப்ரெண்டு, கேடிங்கிறது நீங்க. ஆனா உங்க மனைவியும் உங்க வீடியோஸ்ல நடிக்கிறாங்களே..?

``ஆமா. என் மனைவி சௌமியாவை 6 வருஷமா லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டேன். நிறைய ஜோக் சொல்றமாதிரி, நிறைய சண்டையும் வரும். அப்போலாம் இந்த கடி ஜோக்ஸ் சொல்லி அதை முடிச்சிப்போம். நான்தான் இப்படினு பார்த்தா என் மனைவியும் என்கூட சேர்ந்து கடிபோட ஆரம்பிச்சிட்டா. நாங்க பண்றது ஒரு டீம் வொர்க்தான். என் மனைவி சௌமியா, ஃப்ரெண்ட்ஸ் சிபி கணேசன், ஸ்ரீமன், விஜய் சாரதி (டாடி ) இவங்கயெல்லாம் சேர்ந்ததுதான் எங்க டீம்.’’

இந்த ஜோக்கெல்லாம் எங்கேயிருந்து கலெக்ட் பண்ணுறீங்க..?

``இதெல்லாமே நாங்களே சொந்தமா க்ரியேட்பண்றதுதாங்க. அப்படியே டீமா உட்கார்ந்து யோசிக்க வேண்டியதுதான். சின்ன வயசுலயிருந்தே கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடுதான் பேசுவேன். என்னுடைய இன்ஸ்டா ப்ரொபைல்ல சும்மா ஒரு நாள் ஸ்டோரி போட்டேன். எல்லாரும் பாத்துட்டு சூப்பரா இருக்குனு சொன்னாங்க. நிறையபேர் ரெஸ்பான்ஸ் பண்ணாங்க. இந்த ஜோக்ஸ்லாம் எங்க இருந்து புடிக்கிறீங்கனு கேட்டாங்க. அப்படியே எல்லாரும் நீங்க ஒரு பேஜ் ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சஜெஸ்ட்  பண்ணாங்க. நான் பைக் ரைடர்கிறதுனால என் ஃப்ரெண்ட்ஸ்லாம், `எதுக்குடா இதெல்லாம் பண்ற’னு கேட்டாங்க. நான் அதுக்கு ரெகுலரா பாருங்கன்னு சொன்னேன். ஃப்ரெண்ட்ஸ்லாம் பாத்துட்டு, `மச்சா நீ இதுவே பண்ணுடா’னு சொல்லிட்டாங்க.’’

எல்லாரும் ம்யூசிக்கலி, டப்ஸ்மாஷ்லாம் பண்ணும்போது நீங்க ஏன் இதை செலக்ட் பண்ணுனீங்க..?

``என்னுடைய  குரல் எனக்கு ரொம்பவே  பிடிக்கும். அதை முன்னிலைப்படுத்தி பண்ணணும்னு எனக்கு ஆசை. அதனாலதான் இந்த ஜானர் செலக்ட் பண்ணோம். நாங்க ஸ்டார்ட் பண்ணும்போது ஒரு 1000 பாலோயர்ஸ் இருந்துருப்பாங்க. அப்புறம் ஒரு நாளைக்கு சும்மாவே 5 வீடியோ போட ஆரம்பிச்சோம். இப்போ இந்த பேஜ் ஆரம்பிச்சு 150 நாள்ல 65 ஆயிரம் பாலோயர்ஸ் இருக்காங்க. எங்க ஜோக்ஸை எடுத்து சிலர் அவங்க பேஜ்ல ரீஷேர் பண்ணாங்க, அப்புறம் நாங்க மூஞ்சிக்குமேலவே வாட்டர்மார்க் போட்டோம். அதனால சரியா வியூஸ் வரல. அப்புறம் கொஞ்சம் கீழ இறக்கிப் போட்டோம். அதையும் எடுத்து யூ டியூப்ல போட்டுட்டாங்க. சரி எங்கயாவது போடுங்க என் மூஞ்சிதானே தெரியப்போகுதுனு விட்டுட்டேன்.’’

உங்களுக்கு கமென்ட்ஸ்லாம் எப்படி வரும்..? 

``மொதல்ல கமென்ட்ஸ்லாம் கொஞ்சம் மோசமாதான் இருந்துச்சு. ஆனாலும் , நெறைய பேர் எங்களுக்கு இது ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்குனு சொல்றாங்க. இதைவிட வேற என்னங்க வேணும். இதுவே எங்களுக்குப் பெரிய வெற்றிதான். ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு சொல்லும்போது என்னடா வாழ்க்கையில யாருமே சந்தோஷமா இல்லையானு தோணும். எங்களுடைய நோக்கமே மத்தவங்களைச் சிரிக்கவைக்கிறதுதாங்க.’’ 

இதுமூலமா உங்களுக்கு ஆஃபர்ஸ் ஏதாவது வந்துச்சா..?

``இதுமூலமா எங்களுக்கு ரெண்டு, மூணு ஆஃபர்ஸ் வந்துச்சு. ரீசென்ட்டா `வொய்ஃப் கைல லைஃப்’ னு விஜய் டிவில வர ஷோவுல கலந்துக்கிட்டோம். அதுல ரியோவவே வெச்சி செஞ்சிட்டேன். ஒரு செக்மென்ட்ல, `என்னடா இப்படி டான்ஸ் போடுற’னு ரியோ கேட்டார். அதுக்கு நான், `மூன் வாக் போடவா’னு கேட்டதுக்கு ரியோவும் ஓகே சொன்னார். அதுக்கு நான், `நைட்ல வா அப்போதான் மூன் வரும். இப்போ தெரியாது’னு சொல்லி பங்கமா கடிபோட்டுட்டேன்’’ என்றவர் நம்மிடம், ``சென்னையில ஒரு ரூட்ல மட்டும் டிராபிக்கே இருக்காது. அது எந்த ரூட்னு தெரியுமா?’ என்று கேட்க, `நீங்களே பெட்டரா ஒண்ணு யோசிச்சு வெச்சிருப்பீங்க. அதையே சொல்லுங்க’ என்றதும் ``பீட்ரூட் தான்’’ என்று சொல்லிவிட்டு அவருடைய ஸ்டைலிலேயே சிரித்து வழியனுப்பினார்.