Published:Updated:

`` `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் டிடி-ஐ கவனிச்சிருக்கீங்களா?!" - `வம்சம்' ஜெயஶ்ரீ

``நடிப்புக்குச் சின்ன பிரேக் கொடுத்திருந்தேன். அதுவும் டான்ஸ் வேலைகளுக்காகத்தான். இப்போ மறுபடியும் நடிக்கிறேன். டான்ஸ் மற்றும் ஆக்டிங்ல தொடர்ந்து கவனம் செலுத்துவேன்."

`` `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் டிடி-ஐ கவனிச்சிருக்கீங்களா?!" - `வம்சம்' ஜெயஶ்ரீ
`` `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் டிடி-ஐ கவனிச்சிருக்கீங்களா?!" - `வம்சம்' ஜெயஶ்ரீ

``நடிப்புக்குச் சின்ன பிரேக் கொடுத்திருந்தேன். அதுவும் டான்ஸ் வேலைகளுக்காகத்தான். இப்போ மறுபடியும் நடிக்கிறேன். டான்ஸ் மற்றும் ஆக்டிங்ல தொடர்ந்து கவனம் செலுத்துவேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், சின்னத்திரை நடிகை ஜெயஶ்ரீ.

``நீங்க நடிக்க வந்தது எப்படி?"

``என் அம்மா லட்சுமி ராவ், நடிகை மற்றும் டான்ஸர். நிறைய கிளாஸிகல் படங்களில் வொர்க் பண்ணியிருக்காங்க. குழந்தைகள் பிறந்ததும் சினிமாவிலிருந்து விலகிட்டாங்க. பரதநாட்டிய வகுப்புகள் மட்டும் எடுத்துட்டிருக்காங்க. `நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் பிரபுதேவா சில குழந்தைகளை தன் வீட்டில் வளர்ப்பார். அதில், நான், டிடி (ஆங்கர் திவ்யதர்ஷினி), டிடியின் தம்பி நடிச்சிருக்கோம். அடுத்து, `சமர்ப்பணம்' என்ற இந்தி சீரியலில் நடிச்சேன். தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். தூர்தர்ஷனில் `வெண்ணிறாடை' நிர்மலா அம்மாவின் இயக்கத்தில், புராண நாடங்களில் நடிச்சேன். ஆராய்ச்சிக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் நூற்றுக்கணக்கான ஷார்ட் ஃபிலிம்களில் நடிச்சிருக்கேன்."

`` `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் வெற்றி அனுபவம் பற்றி..."

``என் அம்மாகிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். பரதநாட்டியத்தில் டிப்ளோமாவும் டிகிரியும் முடிச்சேன். `மானாட மயிலாட'  சீசன் 1 போட்டியாளரா கலந்துக்கிட்டேன். அதில் என் ஜோடி, சதீஷ். நான் கிளாஸிகல் டான்ஸர். வெஸ்டர்ன் மற்றும் ஃபோக் டான்ஸில் ஆடறதுக்குச் சிரமப்பட்டேன். ஆனால், சதீஷ் அதில் தூள் கிளப்புவான். அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிறைய திட்டு வாங்கியிருக்கேன். அப்புறம், நிறைய பயிற்சி எடுத்தேன். முதல் சீசனில் நாங்க டைட்டில் வின் பண்ணினோம். சதீஷ், இன்னிக்கு சினிமாவில் கோரியோகிராபராக கலக்கறான். ஒரு தோழியாக எனக்கு ரொம்ப சந்தோஷம். என் ஃப்ரெண்டு டிடி-யும் இன்னிக்குப் பெரிய ஆங்கர். பெருமையா இருக்கு. அவங்களுக்கு என் வாழ்த்துகள்."

``ஆக்டிங்ல ரீ-என்ட்ரி எப்படி நிகழ்ந்தது?"

``ஜீ தமிழில் `பாவ மன்னிப்பு' சீரியல் மூலமாக மறுபடியும் ஆக்டிங்கைத் தொடங்கினேன். பல சேனல்களின் சீரியல்களில் நடிச்சேன். இறுதியா நடிச்சதுதான், `வம்சம்' சீரியல். ரம்யா கிருஷ்ணன், சீமா என ரெண்டு பெரிய நடிகைகளுடன் நடிச்ச அனுபவம் மறக்கமுடியாதது. நடிப்பு சார்ந்த நிறைய விஷயங்களை அவங்களிடம் கத்துக்கிட்டேன். நெகட்டிவ் ரோலில் பெயர் வாங்கினேன். நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. ஷாட் இல்லாத நேரங்களில் செம கொண்டாட்டமா ரகளை பண்ணுவோம். என் ஆக்டிங் கரியரில் மறக்கமுடியாத சீரியல் அது. அப்புறம், கோயில் மற்றும் வெளி நிகழ்ச்சிகளில் டான்ஸ் பண்ணிட்டிருந்ததால், சில மாதங்களா நடிக்கலை. இப்போ ரீ-என்ட்ரி கொடுக்கிறேன்.''

``காதல் திருமணம் எப்படிப் போகுது?"

``கணவர் ஈஸ்வர் அவரின் டீன் ஏஜ்ல நடிச்சிருக்கார். `எம் மகன்' உள்ளிட்ட சில படங்களில் சவுண்டு இன்ஜினீயராவும் வொர்க் பண்ணினார். அப்புறம், சிங்கப்பூரில் எம்.பி.ஏ படிச்சுட்டு அங்கேயே வேலை செய்துட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத தன் தாத்தாவைக் கவனிச்சுக்க சென்னை வந்தவர், நடிப்பைத் தொடர்ந்தார். அப்படி, `பாவ மன்னிப்பு' சீரியலில் அவருக்குத் தங்கையா நடிச்சேன் (சிரிக்கிறார்). அங்கே குளோஸ் ஃப்ரெண்ட்ஸாகி, காதலாகி, கசிந்துருகி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு. ரெண்டு பேரும் மீடியாவில் இருக்கிறதால், ஒருத்தர் நடிப்புக்கு இன்னொருத்தர் சப்போர்ட் பண்ணிப்போம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்போம். ஃப்ரீ டைமில் அவருக்கு நான் டான்ஸ் சொல்லிக்கொடுப்பேன். அது எங்களுக்குள் மிகச் சுவாரஸ்யமானது."

``சினிமா கோரியோகிராபராகும் ஆசை இருக்கிறதா?"

``சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ண ஆசையில்லை. வேளச்சேரியில் டான்ஸ் கிளாஸ் எடுக்கிறேன். வேறு இடத்தில் டான்ஸ் கிளாஸைத் தொடங்க இருக்கேன். எப்போதும் பரதநாட்டியத்தில்தான் எனக்கு ஆர்வம்."