Published:Updated:

’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!" அத்தியாயம் 15

’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!" அத்தியாயம் 15

’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!" அத்தியாயம் 15

’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!" அத்தியாயம் 15

’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!" அத்தியாயம் 15

Published:Updated:
’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!" அத்தியாயம் 15

என்னோட ஷோவில் தொகுப்பாளரா இருக்கிறவங்களுக்கும் எனக்கும் அதிகமான ட்ராவல் இருக்காது. நான் போட்டியாளர்களையும் அவங்களோட ஸ்கிரிப்டிலும்தான் அதிக கவனமா இருப்பேன். அதுனால போட்டியாளர்கள்தாம் என்கூட அதிகமாக ட்ராவல் ஆவாங்க. ஆனால், தொகுப்பாளர்கள் ஷோவோட ஷூட்டிங்கிற்கு மட்டும்தான் வருவாங்க. அதனாலேயே எங்களுக்குள்ள ட்ராவல் இருக்காது. ஆனால், இந்த லிஸ்டில் ரக்‌ஷன் வரமாட்டான். ஏன்னா, ரக்‌ஷன் எங்க டீமுக்கு வந்த ரூட்டே தனி. 

ரக்‌ஷன் விஜய் டிவிக்கு வர்றதுக்கு முன்னாடி வேறு சில டிவிகளில் தொகுப்பாளரா இருந்திருக்கான். `அது இது எது’ ஷோவோட தீவிரமான ரசிகன். அதனால என்னைப் பார்த்து விஜய் டிவி காமெடி ஷோவில் எப்படியாவது தொகுப்பாளராகணும்னு என்னை ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிட்டு இருந்தான். ரிகர்சல், ஷூட்டிங், ஸ்பெஷல் ஷோ என நான் எங்க போனாலும் ரக்‌ஷன் அங்க இருப்பான். ஆனால், என்கிட்ட வந்து பேசுனது இல்லை. நானா ஒரு நாள், `என்னடா இந்தப் பையன் ரொம்ப நாளா நம்மை ஃபாலோ பண்றானே’னு கூப்பிட்டுப் பேசுனேன். அப்போதான் என்னோட ஷோவில் தொகுப்பாளராகணும்னு சொன்னான். `விஜய் டிவியைப் பொறுத்தவரை ஆங்கர்ஸை சேனல்தான் முடிவு பண்ணும். நீ அங்க போய் கேளு’னு அனுப்பி வெச்சேன். சேனல்ல, `இப்போ விஜய் டிவியில் போயிட்டு இருக்கிற எல்லா ஷோக்களுக்கும் வீ.ஜே கரெக்ட்டா இருக்காங்க. வேற ஏதாவது ஷோ வந்தா சொல்றேன்’னு சொல்லிருக்காங்க. 

அதுக்கு அப்பறமும் என்னைப் பார்க்க வந்துட்டே இருந்தான். நான் டீமோட உட்கார்ந்து ஸ்கிரிப்ட் டிஸ்கஷன் பண்ணும்போது அவனும் வருவான். கொஞ்ச நாள்ல அவனும் எங்க டீமில் ஒருத்தனா மாறிட்டான். `அது இது எது’ ஷோவுக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்தான். சில எபிசோடுகளில் நடிக்கவும் செஞ்சிருக்கான். அந்த டைம்லதான் அவனுக்கு ஆங்கரிங் சொல்லிக் கொடுத்தோம். கூட்டமா இருக்கிற ஒரு இடத்துக்குக் கூப்பிட்டுப் போய், அங்க கேமராவை வெச்சு பேசுனு சொல்லுவோம். யாருமே இல்லாத ரூம்ல அவனை மட்டும் நிக்க வெச்சு பேசுனு சொல்லுவோம். இப்படி ஆங்கரிங்காக அவனை அதிகமா ட்ரையின் பண்ணுனோம். 

ரக்‌ஷன் எதிர்பார்த்துட்டு இருந்த நாள் வந்தது. `கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிக்கலாம்னு விஜய் டிவியில் முடிவு பண்ணி ஆடிஷனுக்கும் கிளம்பியாச்சு. ரக்‌ஷனும் ஆடிஷன் நடக்குற இடத்துக்கெல்லாம் வந்தான். அப்போ நான், `ரக்‌ஷா, இந்த சீசனை ஆங்கரே இல்லாம பண்ணலாம்னு இருக்கேன். அப்படிப் பண்ணுனா நல்லா இருக்கும்ல’னு அவன்கிட்டேயே சொன்னேன்; ஷாக் ஆகிருப்பான். முதலில் எங்களுக்கு இந்தப் ப்ளான்தான் இருந்தது. ஷோ ஆரம்பிக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ஆங்கர்ஸ் போட்டுகலாம்னு முடிவு பண்ணினோம். அப்போ நானும் சேனல்ல ரக்‌ஷனை வெச்சே போகலாமானு சொன்னதுக்கு அவங்களும் ஓகே சொல்லிட்டு ரக்‌ஷன்கிட்ட, `உனக்கு அஞ்சு எபிசோடுதான் கொடுப்பேன். அதுல நீ நிரூபிக்கலைனா ஐ யம் சாரி’னு சொல்லி அனுப்பிட்டாங்க.

ரக்‌ஷனுக்கு செம பதற்றம். ஷூட் அன்னைக்கு என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திட்டு இருந்தான். நான் போட்டியாளர்களோட ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருந்த போது என்கிட்ட வந்து, `அண்ணா நான் இப்படிப் பேசுனா, இந்த மாதிரி ஓப்பனிங் கொடுக்கவா’னு கேட்டுட்டு இருந்தான். `எனக்கு ஷோ கன்ட்டென்ட்தான் முக்கியம். இதெல்லாம் நீயே பாத்துக்கோ. என்கிட்ட வராத’னு சொல்லி அனுப்பிவிட்டுட்டேன். முதல் எபிசோடு டெலிகாஸ்ட் ஆனதும் ரக்‌ஷனோட ஆங்கரிங்கிற்கு நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்தது. `சில பேரு கஷ்டப்பட்டு ஆங்கராவாங்க. ஆனால், நீ ஆங்கராகியும் கஷ்டப்பட்டுட்டு இருக்க’னு ரக்‌ஷன்கிட்ட சொன்னேன். ரொம்ப தடுமாறுனான். சீசன் 5ல போட்டியாளர்கள் எல்லாரும் செம வெயிட்டா இருந்தாங்க. அவங்களுக்கு நடுவுல ரக்‌ஷன் இருந்தான். இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனைக் கிண்டலடிச்சாங்க. 

நடுவர்களும் ரக்‌ஷனை செமயா கலாய்ப்பாங்க. அதெல்லாம் பார்த்ததும், `சரி, ஆங்கரிங்ல தடுமாறுறான். இவனைப் போட்டியாளர்களோடு சேர்த்துவிடலாம்’னு முடிவு பண்ணினோம். வாராவாரம் ஒரு ஜோடியோடு சேர்ந்து காமெடி பண்ண வெச்சதும் பதற்றம் எல்லாம் போய் நார்மலாக ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்பறம் ஆங்கரிங்கை விட பெர்ஃபார்மன்ஸ்ல அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சுட்டான். விஜய் டிவியில் எந்த ரியாலிட்டி ஷோவிலும் இல்லாத மாதிரி ஆங்கரை பெர்ஃபார்மன்ஸில் கொண்டு வந்தோம். தொடர்ந்து பல ஹிட் எபிசோடுகளில் ரக்‌ஷன் பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சான். நிறைய கெட்டப் போட ஆரம்பிச்சான். எல்லாமே ஹிட்டாக ஆரம்பிச்சது. அதை எல்லாம் பார்த்து வெளியில இருந்து சில பேர் என்கிட்ட, `போற போக்கைப் பார்த்தால் ரக்‌ஷன் டைட்டில் வின்னராகிடுவான் போல’னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போதுதான் நம்ம ஸ்டூடென்ட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஃபீல் எனக்குக் கிடைச்சது. ஏன்னா, அனுபவம் இருக்கிறவங்க நிறைய பேர் இந்த ஷோவுக்குள் வந்து பிரபலமாகியிருக்காங்க. ஆனால், எந்த அனுபவமும் இல்லாமல் இந்த ஷோவில் எல்.கே.ஜி.யிலிருந்து ஆரம்பிச்சு எல்லாத்தையும் கத்துக்கிட்டவங்க சில பேருதான். அதுல ரக்‌ஷனும் ஒரு ஆள். 

`கலக்கப்போவது யாரு’ சீசன் 5, 6, 7னு தொடர்ந்து மூணு சீசன் பண்ணுனான். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் சரியான படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். இப்போ துல்கர் சல்மானோட `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிச்சிட்டு இருக்கான். இருந்தாலும் சின்னத்திரையை விட்டுடக் கூடாதுனு இப்போ `ரெடி ஸ்டெடி போ’ பண்ணிட்டு இருக்கான். வாய்ப்புக் கேட்டு வரும்போது எப்படி இருந்தானோ அதே மாதிரிதான் ஷோ ஹிட்டானதுக்கு அப்பறமும் இருந்தான். எப்போதும் மாறாமல் இருக்குறதுதான் ரக்‌ஷனோட பலம். அந்த பலத்தோடு இன்னும் அவனுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்க என் வாழ்த்துகள்.