Published:Updated:

``சின்னப் பசங்களும் பிக்பாஸ் பார்ப்பாங்க; உண்மையா நடந்துக்கோங்க..!’’ - கணேஷ் வெங்கட்ராம்

``சின்னப் பசங்களும் பிக்பாஸ் பார்ப்பாங்க; உண்மையா நடந்துக்கோங்க..!’’ - கணேஷ் வெங்கட்ராம்
``சின்னப் பசங்களும் பிக்பாஸ் பார்ப்பாங்க; உண்மையா நடந்துக்கோங்க..!’’ - கணேஷ் வெங்கட்ராம்

``சின்னப் பசங்களும் பிக்பாஸ் பார்ப்பாங்க; உண்மையா நடந்துக்கோங்க..!’’ - கணேஷ் வெங்கட்ராம்

ஜூன் 17 ம் தேதி ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன் 2. பல எதிர்பார்ப்புகளுக்கிடையே அரங்கேற இருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் என்பதை டாப் சீக்ரெட்டாக வைத்திருக்கிறது சேனல். பிக்பாஸ் முதல் சீசனில் பெஸ்ட் போட்டியாளராகவும் 100 நாள்கள் முழுமையாக வீட்டுக்குள் இருந்தவருமான கணேஷ் வெங்கட்ராம், பிக்பாஸ் இரண்டாவது சீசனைப் பற்றி என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். 

``இரண்டு முறை கேட்டும் பிக்பாஸுக்கு நோ சொன்னேன். மூன்றாவது முறையாக என்னை நேரில் சந்தித்துப் பெரிய விளக்கம் கொடுத்தாங்க. இந்த  நிகழ்ச்சியை எந்தெந்த வழிகளில் மக்கள்கிட்ட சேர்ப்பாங்கனு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கப்பறம் ஓகே சொன்னேன். உள்ளே போகுறதுக்கு முன்னாடி பிக்பாஸ் பத்தி எதுவும் தெரியாது. இந்தி பிக்பாஸும் பார்த்தது இல்லை. எல்லாத்தையும் ஒரு சவாலா எடுத்துக்கிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாள்கள் இருந்தேன். அந்த 100 நாள்கள் கூட்டுக்குடும்பமாகப் பல சந்தோஷங்கள், பல சண்டைகள்னு ஒரு புது அனுபவமாக இருந்தது.

ஆனால், பிக்பாஸ் இரண்டாவது சீசனுக்குப் போறவங்க உண்மையா இருப்பாங்களானு தெரியலை. ஏன்னா, முதல் சீசன் மூலமா அவங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும். இந்த ஷோவோட ரீச் தெரிஞ்சிருக்கும்; என்ன பண்ணுனா வைரலாக முடியும்னு தெரிஞ்சிருக்கும். இது எல்லாம் தெரிஞ்சு நடிச்சாங்கன்னா பிக்பாஸோட நோக்கமே வேற மாதிரி போயிடும். ஒரு நடிகர் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடிச்சிருப்பாங்க. ஆனால், அவங்களோட உண்மையான முகம் என்னன்னு மக்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிகழ்ச்சி மூலமா அதை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை எல்லா வயதினரும் பார்க்குறாங்க. பிக்பாஸ் முடிஞ்சதுக்குப் பிறகு ஒரு பெரியவர் என்கிட்ட வந்து, `உங்களோட பொறுமை எனக்குப் பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்தையும் ரொம்ப கவனமா டீல் பண்றீங்க. எல்லாருக்கும் சம உரிமை கொடுக்குறீங்க’னு சொன்னார். சின்னப் பசங்க சில பேர், `நீங்க எந்த டாஸ்க்கா இருந்தாலும் விடாம பண்றது எங்களுக்குப் பிடிக்கும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும், அதை தெரிஞ்சுக்க முயற்சி பண்றதும் பிடிக்கும்’’னு சொன்னாங்க. இந்த மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம இந்த ஷோவைப் பார்க்குறாங்க. அதனால் அதை எல்லாம் உணர்ந்து போட்டியாளர்கள் நடந்துக்கணும். 

என்னதான் போட்டியாளர்கள் தங்களது ஒரிஜினல் முகத்தைக் காட்டாமல் மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி, மற்ற போட்டியாளர்களுக்குப் பிடிக்கிற மாதிரி நடிச்சாலும், சில நாள்களுக்கு மேல நடிக்க முடியாது. ஒரு கட்டத்தில் அவங்களோட ஒரிஜினல் முகம் தெரியத்தான் ஆரம்பிக்கும். அதுனால இப்போ பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறவங்க ஃப்ரஷ் மைண்டோட போங்க. உள்ள இருக்கிற போட்டியாளர்கள் தப்பு பண்ணுனாலும் வெளியில இருக்கிற நாம அதை ட்ரோல் பண்ணக் கூடாது. ஏன்னா, புது இடம், சாப்பாடு, அவங்களோட இருக்கிற நபர்கள், போன், பிரைவஸி இல்லாததுனு நிறையப் பிரச்னைகள் அவங்களுக்கு இருக்கும். அதுனால தன்னை மீறி கோபப்படுவாங்க. அதை ஒரு கட்டத்தில் அவங்களே புரிஞ்சுப்பாங்க. அப்படி இந்த சீசனில் யாராவது பண்ணுனா அவங்களை ட்ரோல் பண்ணாம மோட்டிவேட் பண்ணுங்க. அதுதான் முக்கியம். 

இந்த சீசனுக்கு வர போட்டியாளர்கள் சினிமா செலிபிரிட்டியாக மட்டுமல்லாமல், ஓர் அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், விளையாட்டு வீரர்னு கலவையா வந்தா நல்லா இருக்கும். அது போட்டியாளர்கள், பலரது வாழ்க்கை முறையைப் பற்றி தெரிஞ்சுக்க வசதியா இருக்கும். இந்த சீசனுக்கு நான் ஒரு ஆடியன்ஸாக கமல் சாரின் எபிசோடுகளுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். போன சீசனிலேயே அனிதா தற்கொலை, அப்போதுள்ள அரசியல் களம்னு நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார். இந்த சீசனிலும் அவர் பல சமூகப் பிரச்னைகளைப் பற்றி பேசுவார். அதைப் பார்க்குறதுக்கு வெயிட்டிங் ப்ரோ’’ என முடித்தார் கணேஷ் வெங்கட்ராம்.

அடுத்த கட்டுரைக்கு