Published:Updated:

’’பிக்னிக் மாதிரிதான் இருக்கும்... ஆனா, உஷார்..!’’ - பிக்பாஸ் ஆர்த்தி

’’பிக்னிக் மாதிரிதான் இருக்கும்... ஆனா, உஷார்..!’’ - பிக்பாஸ் ஆர்த்தி
’’பிக்னிக் மாதிரிதான் இருக்கும்... ஆனா, உஷார்..!’’ - பிக்பாஸ் ஆர்த்தி

பிக்பாஸ் ஆர்த்தி பிக்பாஸ் ஷோ வுக்குப் பிந்தைய ஒரு வருடம் கழித்துப் பேசியது

'பிக் பாஸ்' பத்தி 'போதும் போதும்'கிற அளவுக்கு மத்தவங்க பேசிட்டாங்களே, அதனால நானும் அது பத்திப் பேசணுமா' என்ற ஆர்த்தியை கன்வின்ஸ் செய்தோம். சில நிமிடங்கள் யோசனைக்குப் பிறகு பேசத் தொடங்கினார்...

''அந்த நூறு நாள்கள்ல நடந்ததுன்னு டெலிகாஸ்ட் ஆனதை ஊர் உலகமே பார்த்திடுச்சே. 'அது ஒரு மணி நேரமாச் சுருக்கினது; ’மத்த நேரங்கள்ல நடந்ததைச் சொல்லுங்க'ன்னு நீங்க கேக்கறது புரியுது. இதுக்கு என்னோட பதில், 'ரகசியம்னா அது ரகசியமா மட்டுமே இருக்கணும். வெளிப்படையாப் பேசறது நல்லதில்ல’' என மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கினார்.

'சரி, இந்த ஒரு வருஷத்துல 'பிக்பாஸ்' பத்தின நினைவுகள் எப்போல்லாம் வந்திச்சு' எனக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிப் போட்டோம்.

''ஏங்க, பிக்பாஸ் ஷோ வை நான் வாழ்நாள்ல மறக்க முடியுமா? ஒருசிலரைப் போல எனக்கு வாழ்க்கை தந்த ஷோ அதுன்னு சொல்ல மாட்டேன். அதேநேரம் லட்சக் கணக்கான மக்கள் விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சியில, அதுவும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் முன்னாடி கலந்துகிட்டதை எப்படி மறக்க முடியும்? சர்வசாதாரணமா எங்க வீட்டுல இப்பவும் 'பிக்பாஸ்'ங்கிற வார்த்தை அப்பப்ப ஒலிச்சிட்டே இருக்கும். 'ஆர்த்தி ஹாலுக்கு வரவும்' னு என் கணவர் பிக்பாஸ் வாய்ஸ்ல என்னைக் கலாய்ப்பார். அவரை ஏதாவது வேலை வாங்கணும்னா, 'ஆர்த்தி இந்த வீட்டுக் கேப்டன்; கேப்டன் கொடுத்த டாஸ்க்கை கண்டிப்பா நிறைவேத்தணும்'னு அவரைக் கலாய்ப்பேன். இது ஒருபுறம் போகும். வெளியில பார்க்கிறவங்களும் இந்த ஷோ பத்தியே கேட்டு அவங்க பங்குக்கு ஞாபகப் படுத்தி விடுவாங்க.

இன்னொரு பக்கம். பிக்பாஸ் ஷோவுல இருந்து வெளியில வந்ததுமே ஒரு வாட்ஸ் அப் குரூப் ஃபார்ம் பண்ணினோம். குரூப்ல எல்லாருமே சேர்க்கப்பட்டாங்க. அதுல கலகலப்பான அரட்டைகள் போயிட்டிருந்தது. ஆனா பிறகு சிலர் தானாகவே வெளியேறிட்டாங்க. ஜூலி, காஜல், சுஜாவருணியெல்லாம் இப்ப குரூப்ல இல்லை. அவங்களும் கிட்டத்தட்ட ஒரே மைன்ட்செட் உள்ள ஆட்கள்னு நினைக்கிறேன். ஏன் வெளியேறினாங்கன்னு நீங்கதான் அவங்களைக் கேட்கணும். நான், சிநேகன், காயத்ரி இவங்கல்லாம் இன்னைக்கும் மீட் பண்ணி பேசிக்கிடுறோம். இந்த குரூப்ல இருந்து வெளியேறினவங்க கூட தனியா மீட்டிங் போடறதா எனக்குத் தகவல் வந்தது.

பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்தவரைதான் குரூப்பிசம்னா வெளியில வந்துமா'ன்னு நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. அதுக்கு நான் என்ன செய்ய?'' என்றவரிடம் 'ஜூலியை இந்த ஒரு வருஷத்துல எப்போதாவது சந்தித்தீர்களா' எனக் கேட்டோம்.

’'இல்லைங்க. ஒரேயொரு முறை 'கலக்கப் போவது யாரு' ஷோ ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து சேனல்காரங்க பேச வச்சாங்க. அதனால பேசினேன்'’ என்கிறார்.

’இந்தாண்டு பிக்பாஸ் வீட்டுக்குப் போகிறவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா' என்றோம்.

’'பிக்னிக் கிளம்பற மாதிரி ஜாலியா கிளம்புங்க; ஆனா வச்சு செய்யவும் காத்திருப்பாங்க. வெளியில வர்றப்ப ஆஹா ஓஹோனு வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. கண்ணுல கண்டாலே கல்லை விட்டு எறியறவங்களையும் சந்திக்க நேரிடலாம். என்னைப் பொறுத்தவரை இந்த ரெண்டுக்கும் இடைப்பட்டவளா இருந்தேன். உங்க லக் எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆல் தி பெஸ்ட்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு