Published:Updated:

``கமல் எனக்குக் கடவுள், அப்பா! அவரை நம்பி யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகலாம்!" - பரணி #BiggBoss

``கமல் எனக்குக் கடவுள், அப்பா! அவரை நம்பி யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகலாம்!" - பரணி #BiggBoss

`பிக் பாஸ்' சீஸன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பரணி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

``கமல் எனக்குக் கடவுள், அப்பா! அவரை நம்பி யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகலாம்!" - பரணி #BiggBoss

`பிக் பாஸ்' சீஸன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பரணி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

Published:Updated:
``கமல் எனக்குக் கடவுள், அப்பா! அவரை நம்பி யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகலாம்!" - பரணி #BiggBoss

``ரொம்ப பிஸியா `நாடோடிகள் 2' டப்பிங் வொர்க்ல இருக்கேன். எதைப் பத்தி பேசணும். ஓ... பிக் பாஸ் பத்தியா? பேசிடலாமே!" என ஆர்வமாகிறார், நடிகர் பரணி. 

``பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த யாரையும் பிடிக்கலைனு சொல்லமாட்டேன். ஆனா, `என்னடா மனுஷங்க இப்படி இருக்காங்களே'னு தோணியிருக்கு. சரியா பதினாழு நாள்கள்தாம் அங்கே இருந்தேன். அதுக்குப் பிறகு அங்கே இருக்க முடியலை. உள்ளே இருந்தவங்க கொடுத்த டார்ச்சர்ல மன உளைச்சல் அதிகமாயிருச்சு. அதனாலதான், விட்டா போதும்னு சுவர் ஏறிக் குதிச்சுட்டேன். 

விஜய் டி.வி நண்பர்கள் என்னோட எப்போதும் தொடர்புல இருப்பாங்க. `அச்சம் தவிர்'னு ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துனாங்க. அதில், போட்டியாளரா கலந்துகிட்டேன். அதுமூலமாதான் பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. முதல்ல யோசிச்சேன். ஏன்னா, நிகழ்ச்சியைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. ஆனா, கமல் சார் தொகுத்து வழங்குறார்னு தெரிஞ்சதும் உடனே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, கமல் சாரை பார்க்கணும், பேசணும்னு ஆசை வந்துருச்சு. ரெண்டுபேரும் ஒரே ஊர்க்காரங்க வேற. எங்க அப்பா, ஐயானு எல்லோருமே அவரோட ரசிகர்கள். நான் மூணாவது தலைமுறை ரசிகன். அதனால உள்ளே போவோம்னு முடிவு பண்ணிட்டேன். வீட்டுல என் மனைவிதான் கொஞ்சம் ஃபீல் பண்ணாங்க. அப்புறம் அவங்களே சமாதானம் ஆகி அனுப்பி வெச்சாங்க. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்ற மொழியில நடக்கிற `பிக் பாஸ்' நிகழ்ச்சி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, என் அனுபவத்துல சொல்றேன். விஜய் டி.வி நிகழ்ச்சிக்கு நம்பிப் போகலாம். தவிர, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறது கமல் சார். இந்த நிகழ்ச்சிக்குச் சரியான தலைவர் அவர்தான். சரியான தீர்ப்பைச் சொல்வார், அந்தத் தீர்ப்பு நடுநிலையாவும் இருக்கும். எதையும் ஆராய்ச்சி பண்ணி சரி எது, தவறு எதுனு சொல்வார். பெரிய, சின்ன நடிகர், பணக்காரன், ஏழை, தெரிஞ்சவன், தெரியாதவன், ஊர்க்காரன், சொந்தக்காரன் பாகுபாடெல்லாம் காட்ட மாட்டார். கமல் சாரோட தலைமைக்காகவே யாரா இருந்தாலும் நம்பிப் போகலாம். 

`சீஸன் 2'ல யார் யார் போகப்போறாங்கனு தெரியலை. ஆனா, இந்த நிகழ்ச்சி என்னை வேற லெவலுக்குக் கொண்டு போயிருச்சு. ஒரு நடிகனா என்னை மக்களுக்குத் தெரியும். `தென்மேற்குப் பருவக்காற்று', `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தோட வாய்ப்பு எனக்கு வந்தப்போ நடிக்க முடியாமல் தவிர்த்துட்டேன். இந்தப் படங்களில் நடிச்சிருந்தா எவ்வளவு பேர் கிடைத்து இருக்கோமோ அதைவிட அதிகமான பேர், புகழ் இந்த நிகழ்ச்சி மூலமா கிடைச்சிருச்சு. முக்கியமா, பரணி நல்ல மனிதர்ங்கிற பெயர் கமல் மூலமா கிடைச்சது. இந்த நிகழ்ச்சியில என்னோட ஆல்டைம் ஃபேவரைட் ஓவியா. அவங்களை நான் போட்டியாளராவே பார்க்கலை. 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கமலை ரெண்டு, மூணு முறை சந்திச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. `நீ நிறைய சினிமா பண்ணணும். உன்னைத் தக்க வெச்சுக்க நிறைய உழைக்கணும். பொருளாதார நிலையை மேம்படுத்திக்கணும். உன் குடும்பத்துக்காக ஓடணும்'னு சொன்னார். அவரை நான் கடவுளா, அப்பா மாதிரி பார்க்கிறேன். அதனாலதான் மதுரையில அவருடைய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துனப்போ, கமல் சார் கூப்பிடாமலேயே போனேன். என் குடும்பம் மதுரையிலதான் இருக்கு. கலைஞராய் இருந்தவர், சமூகத்துக்காக அரசியலுக்குள்ள வரும்போது அவரை ஆதரிக்கணும். நம்ம மக்களை நல்லா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தர் கமல் சார். 

கமல் சாருடைய இதயத்தில் என்னைக்குமே இருப்பேன். மக்கள் பணி செய்யணும்னு எனக்குத் தோணும்போது, கண்டிப்பா கமல் சார் கட்சியில உறுப்பினரா சேர்ந்திடுவேன். நான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவருடைய கட்சியில் சேரலாம்'' என்றவர், தான் நடித்துக்கொண்டிருக்கும் `நாடோடிகள் 2' படத்தைப் பற்றி விவரிக்கிறார். 

`நாடோடிகள்' படத்துல பார்த்து, ரசிச்ச விஷயங்களை இந்தப் படத்திலும் பார்க்கலாம். அந்தப் படத்துல சின்னப் பிள்ளைத்தனமா இருப்பேன். இந்தப் படத்துல இறங்கி காமெடி பண்ணியிருக்கேன். காதலர்களுக்குள்ள இருக்கிற பிரச்னைகளை அந்தப் படம் பேசியது. `நாடோடிகள் 2' நாட்டுல நடக்கிற அத்தனை பிரச்னைகளையும் பேசும். `பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன் சமுத்திரக்கனி அண்ணே என்னைக் கூப்பிட்டு ஆறுதலா பேசினார். `அடுத்து நாம படம் பண்றோம்டா... ரெடியா இரு'னு சொன்னார். சொன்னதைச் செஞ்சுட்டார். 

சமீபத்தில் மதுரையில கஞ்சா கருப்பு அண்ணனைப் பார்த்தேன். பேசினார். எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லை. `நாடோடிகள் 2' படத்துல கஞ்சா கருப்பு அண்ணன் நடிக்கலை. தவிர, என்னைத் தப்பா பேசியிருந்தாலும் ஜூலியை என் தங்கச்சியாதான் பார்க்கிறேன். ஜூலிக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வர்றதைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கு. நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டாங்க. அது நடந்திடுச்சு. வாழ்த்துகள் ஜூலி. மத்தபடி, வெற்றி தோல்வி எனக்குப் பெரிய விஷயம் இல்லை. அன்பா, உண்மையா இருந்தா  போதும். அதனால, `பிக் பாஸ் 2' நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டா போவேன்!" எனச் சிரிக்கிறார், பரணி.