’கலக்கப்போவது யாரு’ சீசன் 3ல போட்டியாளரா வந்த தனசேகர், ஃபைனல் வரைக்கும் வந்தார். ஹாலிவுட் படங்களை தமிழில் டப் செய்வதை வெச்சு காமெடியா நிறைய விஷயங்கள் பண்ணுவார். அதுதான் தனசேகரோட அடையாளம். அது ஆடியன்ஸுக்கு புதுசா இருந்தது. ரொம்ப என்ஜாய் பண்ணுனாங்க. அதை விடாம இப்போ வரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கார். செமையா மிமிக்ரியும் பண்ணக்கூடிய ஆள். லிவிங்ஸ்டன், ரகுவரன் வாய்ஸ் எல்லாம் பக்காவா பேசுவார்.
தனசேகரிடம் ஒரு தனி திறமை இருக்கும். அதுதான் அவரிடம் எனக்கு பிடிச்சது. மற்ற போட்டியாளர்கள் எல்லாரும் மிமிக்ரி பண்ணினால் அல்லது கெட்டப் போட்டு வந்தால்தான் சக்ஸஸ் ஆகமுடியும். ஆனால், தனசேகரா தனசேகர் வந்தாலே அவருக்கு செம ரீச் கிடைக்கும். இது எல்லாருக்கும் அமைஞ்சிடாது; யாரையும் இமிட்டேட் பண்ணாம, யார் மாதிரியும் மிமிக்ரி பண்ணாம தனி திறமையோட இருக்கிறது சில பேர்தான். முல்லை, கோதண்டம் மாதிரி தனசேகருக்கும் அந்த திறமை நிறையவே இருக்கு. ஸ்டாண்டப் காமெடி பண்றவங்க கூட நிறைய கலெக்ஷன் ஆஃப் ஜோக்ஸை எடுத்துப்பாங்க. ஆனால், எதையுமே எடுத்துக்காம காமெடியனா சக்ஸஸ் பண்றது ரொம்ப கஷ்டம். அதை தனசேகர் சக்ஸஸ்ஃபுல்லா பண்ணிட்டு இருக்கார்.
’கலக்கப்போவது யாரு’ சீசன் 3 முடிஞ்சதும் ’கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸ் ஆரம்பிச்சோம். அதுல தனசேகர், நாகராஜ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த்னு இந்த நால்வர் அணிதான் வின் பண்ணுச்சு. தனசேகர் நல்லா ஸ்கிரிப்ட் எழுதுவார். அவர் பண்ற எபிசோடுகளுக்கு அவரே ஸ்கிரிப்ட் எழுதிப்பார். கான்செப்டை மட்டும் என்கிட்ட ஓகே வாங்கிட்டு, ஸ்கிரிப்ட்டில் அதிக கவனம் செலுத்தி எழுதுவார். மற்ற போட்டியாளர்களோட ஸ்கிரிப்ட்டில் எங்க டீம் வொர்க் பண்ண வேண்டியது இருக்கும். ஆனால், இவர் ஸ்கிரிப்ட் எழுதினால் அதில் கை வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. பக்காவா முடிச்சிடுவார்.
சாதாரணமா பேசும் போதே ரொம்ப நக்கலா, கலாயா பேசக்கூடிய ஆள். ’நாம இப்போ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளதான் போயிட்டு இருக்கோம்’, ‘மிஸ்டர் ஜாக், அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு’னு ஹாலிவுட் பட தமிழ் டப்பிங் ஸ்டைலில் அசால்ட்டா பேசுவார். இந்த ஸ்டைலுக்கு சொந்தக்காரரே இவர்தான். இதை முதலில் இவர்தான் பண்ணினார். புதுசா இருந்தனால செம ரீச்சாச்சு. ’டைட்டானிக்’, ’மம்மி’, ’கிங்காங்’, ’ஸ்பைடர்மேன்’னு நிறைய படங்களை தமிழில் காமெடியா டப் செஞ்சிருக்கார்.
இப்போ போயிட்டு இருக்கிற ’கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸ்ல சில எபிசோடுகள் பண்ணிட்டு இருக்கார். அதுல சக்தி நாடக சபானு ஒரு கான்செப்ட்ல ஒரு எபிசோடு பண்ணுனாங்க. அதுல ’சிரிச்சா போச்சு’ டீம் பண்ணின ஸ்கிரிப்ட்தான் ஹைலைட்டா இருந்தது. செம ரீச்சும் ஆச்சு. சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்ல ’கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்சிக்காக அவார்ட் வாங்கினார். அவரும் அவரோட டீமும்தான் அந்த ஷோ முழுக்க குழந்தைகளுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதினாங்க. ‘தில்லுக்கு துட்டு’ படத்தோட இரண்டாம் பாகத்துல சந்தானம் சார்கூட இப்போ பிஸியா நடிச்சிட்டு இருக்கார் தனசேகர்.
ரொம்ப டிசிப்லினா இருக்கக்கூடிய ஆள். அவரோட வேலைகளை சரியா பார்ப்பார்; சரியா நேரத்துக்கு வந்திடுவார். ரொம்ப சரியா நடந்துப்பார். இதெல்லாம் தனசேகரோட நல்ல குணங்கள். இதெயெல்லாம் விடாம ஃபாலோ பண்ணிட்டு இருந்தால், தனசேகர் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்குவார்.