Published:Updated:

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!
மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

16 போட்டியாளர்களோடு சிறப்பு விருந்தினராக கடந்த சீஸனின் கனவு தேவதை ஓவியாவையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ஆட்டத்தை ஆரம்பிச்சு வெச்சிருக்கார் `ஆண்டவர்' கமல். நல்லவர் யார்... கெட்டவர் யார்..? பிக் பாஸ் இரண்டாவது சீஸன் போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

1) யாஷிகா ஆனந்த்

ப்ளஸ்:

போட்டியாளர்களில் மிகவும் வயது குறைந்தவரான யாஷிகா ஆனந்த்துக்கு இளம் ரசிகர்கள் எக்கச்சக்கம். ஓட்டு போட்டுக் காப்பாற்றும் நிலை வந்தால், ரசிகர்கள் வரலாறு காணாத ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கவைப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

கேரக்டரை விமர்சிக்கும்விதமான கேள்விகளுக்கும்கூட கூலாக பதில் சொல்லும் யாஷிகாவுக்கு போட்டியாளர்களின் நெருக்கடி எல்லாம் அவர் கையில் இருக்கும் சாண்ட்விச்போல... பிரித்து மேய்வார்.

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

மைனஸ்:

இளம் வயதிலேயே அடல்ட் படத்தில் நடித்தவர் என்பதும், க்யூட் துறுதுறுப்பும் ரசிகைகளுக்குப் பிடிக்காமலும்போகலாம். பொறாமையா... ஹஹா லைட்டா!

வயதுக்கு மீறிய அவரது நிதானமே சீனியர் ஹவுஸ்மேட்ஸை ஜெலுசில் குடிக்கவைக்கலாம். அதனாலேயே அடிக்கடி நாமினேட் செய்யப்படவும் வாய்ப்பு உண்டு.

2) பொன்னம்பலம்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

ஹீரோக்களிடம் அடிவாங்கி `த்ருஜ்... த்ருஜ்' எனச் சுற்றிச் சுழன்று கண்ணாடி உடைத்து விழுந்த கரடுமுரடு பொன்னம்பலம், பவ்யமாக வலம் வருவதே பெரிய ஆச்சர்யமும் ப்ளஸ்தான்.

ஆள் `ஹல்க்'போல பல்க்காக இருப்பதால் யாரும் பிரச்னை செய்யாமல் சுமுகமாக நடந்துகொள்வார்கள் என்பதும் ப்ளஸ். பின்னே... கோபப்படுத்திட்டு அந்தரத்துல அடிவாங்குறது யாரு?

மைனஸ்:

அதிமுக-வின் பிரசார `பீரங்கி'யான பொன்னம்பலம், சமீபமாக பா.ஜ.க ஆதரவாளராக இருப்பதால் மக்கள் ஓட்டுகளில் பங்கம் வரலாம். ஆர்.கே.நகர் எலெக்‌ஷன் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?

என்னதான் `ஜெய் ஶ்ரீராம்'னு ஒரு நாளுக்கு 48 ஆயிரம் முறை சொன்னாலும் டீச்சரைக் கொன்னுட்டு பழியைத் தூக்கி `நாட்டாமை' தம்பிமேல் போட்டதை தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். வில்லத்தனம் எப்போ எட்டிப்பார்க்குமோ!

3) மஹத்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

கடந்த சீஸனின் ஆரவ், ஹரீஷ் போல சாக்லேட் பாயாக இந்த சீஸனில் வந்திருக்கும் `மங்காத்தா' புகழ் மஹத்துக்கு. இளம் ரசிகைகளின் அமோக ஆதரவு இருக்கிறதாம்.

ரியல் லைஃபில் கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டின் எலிஜிபிள் பேச்சுலர் என்பதால் காதல் கிசுகிசுக்களும் அநேகம் வரலாம். அதனால், டிரெண்டிங்கில் இருப்பார். இன்னொரு மருத்துவ முத்தம் பார்சேல்ல்ல்!

மைனஸ்:

சிம்புவின் நெருக்கமான நண்பன் எனச் சொன்னதே பலருக்கும் பகீர் கிளப்பியிருக்கிறது. வேக்கப் சாங்குக்குப் பிறகும் தூங்கினால் ஆப்பு நிச்சயம்.

பிளேபாய் முகம் காட்டினால் ஆண் போட்டியாளர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். அனுதாபங்கள்ஜி!

4) டேனியல் ஆனி போப்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

`ஒரே வசனம்... ஓஹோன்னு வாய்ப்பு!' என சிங்கிள் டயலாக்கில் பிரபலமான `ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு' டேனியல் ஆனி போப், வெகு ஜாலியான மனிதர் என்பது ப்ளஸ்.

போன வருட பிக் பாஸ் செட்டை கலகலப்பாக்க கஞ்சாகறுப்பு, வையாபுரிபோல இந்த சீஸனில் இருப்பது இவரும் சென்றாயனும்தான் என்பதால் வெகுநாள் தாக்குப்பிடிக்கலாம்.

மைனஸ்:

ஷார்ட்-டெம்பர் மனிதர் என்பதால், இவரைச் சீண்டுபவர்களுக்கு நேருக்குநேர் பதிலடி கொடுப்பார். அதனால், சண்டைக்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜாலியாக ஏதாவது டயலாக் பேசப்போய், பஞ்சாயத்தைக் கூட்டும் அபாயங்களும் அதிகம். நாமினேட் பண்ணிட்டா ஹாட் ஆகிடுவாப்ளே!

5) RJ வைஷ்ணவி

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

எழுத்தாளர் சாவியின் பேத்தியான ஆர்ஜே வைஷ்ணவி, நடிப்பு, எழுத்து ஆகிய துறைகளிலும் இருப்பவர் என்பதால் ரசிகர்களின் மனதைப் புரிந்துகொண்டு நடக்கும் முனைப்பில் இருப்பார்.

அதிகம் தெரியாத முகம் என்பதால், சில வாரங்களுக்குள் மக்களால் வெளியேற்றப்படும் சூழல் வந்தாலும் வரலாம். தாக்குப்பிடித்துவிட்டால் செம பிளே செய்வார் என எதிர்பார்க்கலாம்.

மைனஸ்:

வந்தாங்க... அறிமுகப்படுத்தினாங்க... பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிட்டாங்கப்பா. நமக்கு வேற என்ன தெரியும்? மைனஸ் எல்லாம் போகப்போகக் கண்டுபிடிப்போம்.

6. ஜனனி

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

`நல்ல படங்களில் நடிக்கும் ஹீரோயின்' எனும் பெயர் வாங்கியிருக்கும் ஜனனி, பிக் பாஸ் வீட்டிலும் அப்படியே குட் கேர்ள் என ஸ்கோர் எடுக்கலாம்.

நல்ல ரீச் கிடைக்கும் என வெளிப்படையாகச் சொல்லியே இங்கே வந்திருக்கிறார் என்பதால், எதையும் ஓப்பனாகப் பேசி ரசிகர்களை ஈர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

மைனஸ்:

அதிக கவனம். என்னதான் க்யூட்டாக இருந்தாலும், கேமராவைத் தனியாகப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் ஓவியாவாகிவிட முடியாது.

சாஃப்டாக இருந்தாலும் சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. இந்தக் குடும்பத்துல இப்படிலாம் காலம் தள்ள முடியாதேம்மா!

7) அனந்த் வைத்தியநாதன்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

பிக் பாஸ் வீட்டில் அதிக வயதானவர் என எல்லோரும் மரியாதை கொடுக்கும்விதமாக நடந்துகொள்வார் என எதிர்பார்க்கலாம். (`பெரியமனுஷன் மாதிரி நீ நடந்துக்கலையேய்யா!' எனும் வசனத்தைப் பயன்படுத்த வைக்க மாட்டார் என நம்புவோமாக.)

ஆர்ஜே வைஷ்ணவி, ரம்யா ஆகியோருக்கு வந்த முதல் நாளே பாட்டு க்ளாஸ் எடுத்து டீமை ஃபார்ம் செய்துகொண்டது நல்ல முயற்சி.

மைனஸ்:

இந்தக் கூட்டத்தின் கலகலப்புக்கு ஒட்டாதவராக இருப்பார் என்பது மைனஸ். வாய்ஸ் எக்ஸ்பெர்ட் என அறிமுகப்படுத்திய காலம் முதலே கலாய்த்துவரும் நெட்டிசன்களுக்கு இவர் என்ன செய்தாலும் ஏகபோக அவல்பொரி.

காலையில் எழுந்ததும் ஸ்விம்மிங் பூலில் இறங்கி சாரீரம் பிடிப்பேன் என அடம்பிடித்தால் அவ்வளவுதான்.

8. பாடகி ரம்யா

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

ஹேர் கலரிங் செய்து ஸ்டைலிஷ்ஷாக இறங்கியுள்ள ரம்யாவுக்கு, கலைவாணர் என்.எஸ்.கே பேத்தி என்பது கௌரவம். (`இந்த ஆட்டம்லாம் இங்கே செல்லாது!' என ஹவுஸ்மேட்ஸ் கட்டையைத் தூக்குவார்கள்.)

அதிகம் சிக்கல்கள், சர்ச்சைகள் இல்லாத நபராக வலம்வரலாம்.

மைனஸ்:

அவரது வித்தியாச லுக் எந்தளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை. `என்ன பாப்பா... பொங்கலுக்கு வெள்ளையடிக்கிறப்ப குறுக்கப் போயிட்டியா?' என இப்போதே கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.

9. சென்றாயன்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

சென்றாயன் யதார்த்தமாக என்ன பேசினாலும் முரட்டு வைரலாகும் என எதிர்பார்க்கலாம். என்டர்டெய்ன்மென்ட் கேரண்டி பீஸு!

பிக் பாஸ் வீட்டுக்குள் எல்லோரையும் வரவேற்ற சென்றாயன் அனைவருடனும் ஜாலியாகப் பழக நினைப்பது ப்ளஸ்.

மைனஸ்:

சிரித்துப் பேசும்போதும்கூட டெரராகவே முகம் இருப்பது இந்த காமெடியனுக்கு இங்கே மைனஸாகப்போகலாம்.

ஆர்வக்கோளாறில் வாய்விட்டு வலுவாக வாங்கும் வாய்ப்புகளும் அதிகம். சூதானம் பிரதர்!

10) ரித்விகா

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

பக்கத்து வீட்டுப் பொண்ணு இமேஜ், அம்மணிக்கு அசாத்திய ப்ளஸ்.

சைலன்டான பெண் என்பதால், ஆண் போட்டியாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மைனஸ்:

எமோஷனல் டைப் என்பதால் சின்னப் பிரச்னைக்கெல்லாம் கண்ணைக் கசக்குவார்.

மற்ற எல்லோரையும்விட இந்த சீஸனில் அதிகம் பயப்படுவது இவர்தான். பாவத்த!

11. மும்தாஜ்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

`மல மல மல மருத மலே...'-வுக்கு எக்குத்தப்பு டவல் டான்ஸ் போட்ட மும்தாஜ் அப்படியே ரிட்டர்ன் ஆகியிருப்பதால், 80-ஸ் கிட்ஸ்(!) மத்தியில் ஏகப்பட்ட ஆதரவு. `யாஷிகான்னு சொன்னா உதடுகள் ஒட்டாது. மும்தாஜ்னு சொல்லிப்பாருங்க...' என இப்போதே கிளம்பியிருக்கிறது மும்தாஜ் புரட்சிப்படை.

`கட்டிப்புடி கட்டிப்புடிடா...' பாடலையெல்லாம் வேக்கப் சாங்காக ஒளிபரப்பினால், `மும்தாஜ் புரட்சிப்படை' மீண்டும் வலிமையாக உயிர்கொள்ளும்.

மைனஸ்:

மும்தாஜுக்கு மைனஸ் சொல்ற அளவுக்கு நம்ம மனசு இன்னும் கல்லாகல பாஸு.

12) தாடி பாலாஜி

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

மனைவி நித்யாவோடு இணைவதை பாலாஜி விரும்புவது அவருக்கு ப்ளஸ்.

இருவருக்குமிடையே ரொமான்ஸ், சண்டை என எது நிகழ்ந்தாலும் அதிகம் கவனிக்கப்படும் என்பதும் ப்ளஸ்.

மைனஸ்:

நிகழ்ச்சி செட்போல அவ்வப்போது மொக்க ஜோக்குகள் சொல்லி ஹவுஸ்மேட்ஸை வெறுப்பேற்றலாம் என்பது மைனஸ்.

வெளியே நடந்ததுபோல குற்றச்சாட்டுகளும் சண்டைகளும் உள்ளேயும் தொடர்ந்தால், பாலாஜி நேம் கொடூர டேமேஜ் ஆகும் என்பதும் மைனஸ்.

13) மமதி சாரி

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

வெகுநாளாக தலைமறைவாக இருந்துவந்த மமதி சாரியைக் கண்டதும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏகக் குஷி.

தொகுப்பாளர், எழுத்தாளர் எனப் பல அவதாரங்கள் எடுத்தவர் என்பதால், ஹவுஸ்மேட்ஸுடன் மல்லுகட்ட அதிகக் கஷ்டமில்லை.

மைனஸ்:

ஹவுஸ்மேட்ஸை டாமினேட் செய்யும்விதமாக நடந்தால், கடும் எதிர்ப்பைச் சம்பாதிக்கலாம்.

இதுவரை இருக்கும் நல்ல இமேஜ் பூனைக்குட்டி வெளியே குதித்து ஓடிவிடக் கூடாது.

14. நித்யா பாலாஜி

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

தாடி பாலாஜியுடன் சேர வாய்ப்பிருப்பதால் அதிக ஆதரவு கிடைக்கலாம்.

சிங்கிள் வுமன் என்பதை சிம்பதி க்ரியேட் செய்யும்விதமாகச் சொல்வது ப்ளஸ்ஸா... மைனஸா என்பது போகப்போகத் தெரியும். 

மைனஸ்:

தியாகம் செய்தவராகவே தன்னைக் காட்டிக்கொள்வது ரிவர்ஸ் ஸ்விங் ஆகலாம்.

அறிமுக நிகழ்ச்சியில் பலரும் தமிழில் பேசியபோதும், ஓவராக பீட்டர்விட்டதும் ரசிகர்களுக்கு கொஞ்சம் எரிச்சல்.

15. ஷாரிக் ஹாசன்

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

ரியாஸ் கான் - உமா ரியாஸ் ஜோடியின் மகன் ஷாரிக் ஹாசன் பெண்களுக்கு Pet ஆகலாம்.

விளையாட்டு வீரர் + நடிகர் காம்பினேஷன் என்பதால் சிறப்பாகவே `விளையாடு'வார்.

மைனஸ்:

வயது குறைந்தவர் என்றாலும், மற்ற ஆண் போட்டியாளர்களோடு ஒட்டுவாரா என்பது சந்தேகமே.

16. ஐஷ்வர்யா தத்தா

மும்தாஜ் ஆர்மியே உயிர்கொள்! - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்!

ப்ளஸ்:

அழகும் `கொஞ்சம் கொஞ்சம்' எனக் கொஞ்சும் தமிழும் ப்ளஸ்.

தமிழ் ரசிகர்களைக் கவரும்விதமாக பெங்காலியும் தமிழும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு என்கிறரீதியில் பேசியதெல்லாம் அசத்தலான காந்த முயற்சி.

மைனஸ்:

மழலைபோலக் கொஞ்சுவது பெண் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கடுப்பைக் கிளப்பலாம். எவ அவ மொமென்ட்!

கடந்த சீஸனின் அனுயாபோல என்டர்டெயின்மென்ட்டுக்கு வொர்க்-அவுட் ஆகாமல் சில வாரங்களிலேயே தூக்கி வீசப்படலாம்.

(இந்த நாடகத்தில் யாருக்கு என்ன வேடம்னு அந்த பிக் பாஸே அறிந்திருக்க மாட்டார். மொத்தப் போட்டியாளர்களின் ஜாதகமும் ஒரே வாரத்தில் ரசிகர்களின் கைக்கு வந்துடும் கொஞ்சம் பொறுங்க பாஸ்.)

அடுத்த கட்டுரைக்கு