Published:Updated:

``சீரியலுக்கும் சினிமாவுக்கும் 4 வித்தியாசங்கள் !" - `கல்யாணமாம் கல்யாணம்' - `கடைக்குட்டி சிங்கம்' ஜீவிதா

``சீரியலுக்கும் சினிமாவுக்கும் 4 வித்தியாசங்கள் !" - `கல்யாணமாம் கல்யாணம்' - `கடைக்குட்டி சிங்கம்' ஜீவிதா

`` `எதுக்குத் தயக்கம்? ரிலாக்ஸா நடிங்க'னு கார்த்தி ஹெல்ப் பண்ணினார். 24 நாள்கள் என் ஷூட்டிங் போர்ஷன் இருந்துச்சு. நிஜ குடும்பம் மாதிரிதான் எல்லோரும் பழகினோம். ஷூட்டிங் முடியறப்போ பயங்கரமா ஃபீல் பண்ணினோம்."

``சீரியலுக்கும் சினிமாவுக்கும் 4 வித்தியாசங்கள் !" - `கல்யாணமாம் கல்யாணம்' - `கடைக்குட்டி சிங்கம்' ஜீவிதா

`` `எதுக்குத் தயக்கம்? ரிலாக்ஸா நடிங்க'னு கார்த்தி ஹெல்ப் பண்ணினார். 24 நாள்கள் என் ஷூட்டிங் போர்ஷன் இருந்துச்சு. நிஜ குடும்பம் மாதிரிதான் எல்லோரும் பழகினோம். ஷூட்டிங் முடியறப்போ பயங்கரமா ஃபீல் பண்ணினோம்."

Published:Updated:
``சீரியலுக்கும் சினிமாவுக்கும் 4 வித்தியாசங்கள் !" - `கல்யாணமாம் கல்யாணம்' - `கடைக்குட்டி சிங்கம்' ஜீவிதா

குடும்பப் பின்னணிக் கதையுடன் உருவாகியிருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. அந்தப் படத்தில் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக நடித்திருக்கும் ஜீவிதா, படத்தின் அனுபவங்களைப் பகிர்கிறார்.

`` `கடைக்குட்டி சிங்கம்' படம் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?"

``சமுத்திரக்கனி சார் ஹீரோவா நடிக்கும் `ஆண் தேவதை' படத்தில் எனக்கு வில்லி கேரக்டர் வந்துச்சு. நடிகர் இளவரசு சாருக்கு ஜோடியா நடிக்கவேண்டிய நடிகை, கடைசி நேரத்தில் டிராப் ஆகிட்டாங்க. அதனால், அந்த ரோலில் என்னைக் கேட்டாங்க. ஷூட்டிங்ல தடங்கல் வரக் கூடாதுனு நானும் ஒப்புக்கிட்டேன். அதனால், இளவரசு சாருக்கு என் மேலே மரியாதையும் அன்பும் உண்டாகியிருக்கு. ஒருமுறை இயக்குநர் பாண்டியராஜ் சார், தன் படத்தில் கார்த்தியின் அக்கா ரோலில் நடிக்க ஒருவர் வேணும்னு இளவரசு சார்கிட்ட கேட்டதும், என்னை ரெஃபர் பண்ணியிருக்கார். அப்படித்தான் இந்தப் படத்தில் கமிட்டானேன். படத்தில் ஹீரோ கார்த்திக்கு அஞ்சு அக்காக்கள். முதலில், கடைசி அக்கா ரோல் என்றும், பிறகு மூணாவது அக்கா ரோல் என்றும் சொன்னாங்க. ஆனா, அந்த ரெண்டு அக்காக்களுமே படத்தின் நாயகிகளின் அம்மாக்கள். அந்த கேரக்டர்களுக்கு என் வயசும் தோற்றமும் பொருந்தலை. அதனால், நாலாவது அக்காவாக, ஸ்கூல் போகும் சின்னக் குழந்தைகளின் அம்மா ரோலில் நடிச்சேன்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சகோதரிகளாக நடிச்ச நடிகைகளுடான அனுபவம் பற்றி..."

``படத்தில் முதல் அக்கா, மெளனிகா. அவங்க என் உடன்பிறவா சகோதரி மாதிரி. நடிப்பு, ஃபேமிலினு எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணிப்போம். தீபா, ரெண்டாவது அக்கா. வயசுல பெரியவங்களா இருந்தாலும், தன்னை `வா, போ'னுதான் கூப்பிடச் சொல்வாங்க. `முண்டக்கண்ணி'னு அவங்க என்னையும், `குந்தானி'னு நான் அவங்களையும் கிண்டல் பண்ணிப்போம். அடுத்து, யுவராணி அக்கா. `ஹாய் பேபி'னு என்னைக் கூப்பிடுவாங்க. வெளிப்படையா பழகுவாங்க. இந்து, என் தங்கச்சி கேரக்டர். என் ப்ளஸ், மைனஸ் எல்லாத்தையும் எடுத்துச் சொன்னாங்க. நாங்க அஞ்சு பேருமே நிஜ அக்கா, தங்கச்சி மாதிரியே பழகினோம். இப்பவும் அடிக்கடி போனில் பேசிக்கிறோம். எங்க ஷூட்டிங் நடிப்பு, நிஜமாகி சகோதரிகளா ஆகிடக் கூடாதானு ஃபீல் பண்றேன்." 


 
``ஷூட்டிங்கில் நடந்த மறக்க முடியாத மெமரீஸ்..."

``ஷூட்டிங் போனதும் நான் முதல்ல மீட் பண்ணினது, சத்யராஜ் சாரை. `பாகுபலி' மற்றும் அவரின் பல படங்களின் நடிப்பைத் தொடர்ச்சியா ஒப்பிச்சேன். அமைதியா என்னைப் பார்த்துச் சிரிச்சவர், `இந்தப் பொண்ணு என்னமோ சொல்ல வருது'னு கலாய்ச்சார். படத்தில் என் தம்பியாக கார்த்தியுடன் முதல் ஷாட். அப்போ கொஞ்சம் நெர்வஸா இருந்தேன். `எதுக்குத் தயக்கம்? ரிலாக்ஸா நடிங்க'னு ஹெல்ப் பண்ணினார். 24 நாள்கள் என் ஷூட்டிங் போர்ஷன் இருந்துச்சு. நிஜ குடும்பம் மாதிரிதான் எல்லோரும் பழகினோம். ஷூட்டிங் முடியறப்போ பயங்கரமா ஃபீல் பண்ணினோம். இப்படி ஒரு படம் அமையறது அதிர்ஷ்டம்தான்." 

``அம்மா ரோலில் நடிக்க தயங்கினீங்களா?"

``ஒரு படத்தில் எனக்கு வந்த ஹீரோயின் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். பிறகு, சீரியல்களில் கவனம் செலுத்தினதால், செலக்டிவாகவே சினிமா வாய்ப்புகள் வருது. அம்மா ரோலில் நடிக்கும் வயசு இல்லைதான். இந்தப் படத்தில் நடிக்கவும் ஆரம்பத்தில் சின்னத் தயக்கம் இருந்துச்சு. இப்போ, டபுள் சந்தோஷப்படும் அளவுக்கு என் கேரக்டர் அமைஞ்சிருக்கு. என் உயரம் எனக்கு மைனஸ். அதுதான், என் வயசை உயர்த்திக் காட்டும். அதனால், கேரக்டர் ரோல்களில் தயங்காமல் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்."

``முதல் ஆக்டிங் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?"

``ராசிபுரம் பக்கம் நாமகிரிப்பேட்டை என் சொந்த ஊர். சின்ன வயசுல துறுதுறுனு இருப்பேன். ஸ்போர்ட்ஸ் பிளேயர். டான்ஸ் ஆர்வமும் உண்டு. நாமக்கல் லோக்கல் சேனலில் வொர்க் பண்ணிட்டிருந்தேன். மேற்கொண்டு டான்ஸ் கத்துக்க சென்னைக்கு வந்தேன். ஒருமுறை ஏவி.எம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் பார்க்கப் போனேன். நடிக்க விருப்பமானு கேட்டாங்க. ஏவி.எம்.சரவணன் சாரிடம் போட்டோ காண்பிச்சு செலக்ட் பண்ணினாங்க. ஜெயா டிவியின் `மனதில் உறுதி வேண்டும்' சீரியலில் நடிச்சேன். தொடர்ந்து, `வைராக்கியம்', `ஆபீஸ்', `பார்த்த ஞாபகம் இல்லையோ', `தேவதை' எனப் பத்துக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். இப்போ, விஜய் டிவியில் `கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில் மாடர்ன் வில்லி. பாரதி கிருஷ்ணகுமார் சார் இயக்கத்தில் `என்று தணியும்' படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸாகல. ஒரு சீரியல்னா, அதில் வருஷக்கணக்கில் நடிக்கலாம்; நீண்ட நாள் மக்கள் மனசுல நிற்கலாம். அதேசமயம் சினிமானா, ஒரு படத்துல நடிச்சாலும் அதோட ரீச் பல வருஷத்துக்குப் பேசப்படும்; கேரக்டர் ரோல்னாலும்கூட சினிமாலதான் வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்த முடியும். சினிமாவுக்கும் சீரியலுக்கும் வேறுபாடுன்னா, இந்த நாலு வித்தியாசங்கள்தாம். இந்த ரெண்டு ஆக்டிங் அனுபவமும் இப்போ நிறைவாகக் கிடைக்குது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism