Published:Updated:

பிக் பாஸின் `டாப் 5 ஓவர் ஆக்டிங்' போட்டியாளர்கள்!

பிக் பாஸின் `டாப் 5 ஓவர் ஆக்டிங்' போட்டியாளர்கள்!
பிக் பாஸின் `டாப் 5 ஓவர் ஆக்டிங்' போட்டியாளர்கள்!

கமல் சொல்லி அனுப்பியதுபோல் நடிக்கத் தெரியாம கொஞ்ச நேரத்திலேயே அப்பாவியாக மாட்டிக்கிட்ட ஓவியா எங்க... வந்த முதல் நாளே கடுப்பாகிற மாதிரி ஓவர் ஆக்ட் கொடுத்த மத்தவங்கள்லாம் எங்க..?

`பிக் பாஸ்' இரண்டாவது சீஸனில் முதல் நாள் நிறைவடைந்திருக்கிறது. முதல் நாளிலேயே சிலபல சித்து வேலைகளைக் காட்டி குதூகலமான வீட்டில் கும்மியடிக்கத் தொடங்கிவிட்டார் பிக் பாஸ். முதல் நாளில் பலரும் ஓவர் ஆக்ட் செய்தது, ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கமல் சொல்லி அனுப்பியதுபோல் நடிக்கத் தெரியாம கொஞ்ச நேரத்திலேயே அப்பாவியாக மாட்டிக்கிட்ட ஓவியா எங்க... வந்த முதல் நாளே கடுப்பாகிற மாதிரி ஓவர் ஆக்ட் கொடுத்த மத்தவங்கள்லாம் எங்க..? பிக் பாஸ் வீட்டின் ஓவர் ஆக்டிங் புலிகளுக்கு அவார்டு கொடுக்கும் செஷன் இது... `டாப் 5' ஓவர் ஆக்டர்ஸ் யாரெல்லாம்னு பார்ப்போமா...

வைஷ்ணவி

பாலாஜியின் மனைவி நித்யாவைப் பார்த்து, ``உங்களுக்குக் குழந்தை இருக்கா?'' எனக் கேட்டு வாயைப் பிளந்தார் வைஷ்ணவி. ``குழந்தைக்கு ஏழு வயசு!'' என்றதும் பயங்கரமாக அதிர்ச்சியாவதுபோல் நடித்தார். 5 ரூபாய் கொடுத்தா 5,000 ரூபாய்க்கு நடிக்கும் வைஷ்ணவிக்கு, `நடிப்புத் திலகம்' பட்டத்தை மனதாரக் கொடுக்கலாம். உங்களுக்கு முன்னாடியே ஜூலியையெல்லாம் பார்த்தவிங்க நாங்க. கொஞ்சம் பில்டப்பைக் குறைங்க தாயீ!டாய்லெட் பாதுகாப்புத் துறையைக் கடந்த சீஸனில் ஹேண்டில் செய்த நமீதா இடத்தை நிரப்பும்விதமாக, வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறினார் வைஷ்ணவி. `ஆன்ட்டிக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சா?!' என ஐஷ்வர்யாவின் ஆங்கிலத்தை பாலாஜி கலாய்த்ததை, ``யாரோட ஆன்ட்டிக்கு ஆக்ஸிடென்ட்?'' எனக் கேட்டு, ஓவர் ஆக்டிங்கை நிரூபித்துக்கொண்டே இருந்தார் வைஷ்ணவி. யம்மா, போதும்மா...  மிடில!

``ஃபேனுக்கும் பறவைக்கும் என்ன வித்தியாசம்... ஃபேனால பறக்க முடியாது... பறவையால சுத்த முடியாது. ஃபேன அமுக்கினா சுத்தும்... பறவையை அமுக்கினா கத்தும்'' என அதரப்பழசு ஜோக்குகளையெல்லாம் இந்த ஆண்ட்ராய்டு காலத்தில் சொல்லி அவரே சிரித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து, ``ஃபைல்ஸுக்கும் பைல்ஸுக்கும் என்ன வித்தியாசம்?" எனக் கேட்ட இவர் உருவில், சில நூறு பழைய ஜோக் தங்கதுரைகளைப் பார்க்கலாம்.

சென்றாயன்

படங்களைவிட பிக் பாஸ் வீட்டு நடிப்பில்தான் இவர் தூள் கிளப்புகிறார். ஓவியாவிடம் பேசுகையில், ரொம்பவே குதூகலமாகிக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதாக ஓவர் ஆக்டிங்கொடுத்தது, தனது பெட்டி வராததை பிக் பாஸிடம் தெரிவிக்க ``சூட்கேஸ் அண்ட் பெட்டி நோ... டெல்... கம்.. மை லுங்கி அண்ட்ராயர் எல்லாம் அதுலதான் இருக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ தாங்க்யூ" என சூரி ஆங்கிலத்தில் பேசுவதெல்லாம் அப்பப்பா முடியலை ரகம்.

டான்ஸ் கத்துக்கொடுக்கிறேன் பேர்வழி என லேடீஸ் சைக்கிளுக்கு பம்ப் அடித்தது, தமிழில் கேட்காமல் `அரைக்கால்குறை' ஆங்கிலத்தில் பிக் பாஸிடம் அதையும் இதையும் அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்டுக்கொண்டிருந்ததெல்லாம் கடுப்புகளைக் கிளப்பின. அடிக்கடி `மூடர்கூடம்' டயலாக்கைப் பேசியோ என்னவோ, இங்கிலீஷைத் தெருவுக்கு இழுத்துக் கடித்துத் துப்பி கொலையாய்க் கொல்கிறார். இதெல்லாம் காமெடின்னு நினைச்சு சிரிக்கிற அளவுக்கு மக்கள் இன்னும் நொந்துபோகலை சென்றாயன்!

டேனியல்

தனது உடைகள் இருக்கும் பெட்டி வராததால் நாள் முழுவதும் புலம்பிக்கொண்டே இருந்த டேனியல், ``உள்ளாடை வேண்டும்'' என பிக் பாஸிடம் மட்டுமல்லாது, பெண் போட்டியாளர்களிடம் முதற்கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் வெதும்பிக்கொண்டிருந்தார். அவரது பெட்டி வந்தாலும், அதில் ``உள்ளாடைகளைக் காணோம்!'' எனப் பதறியவரைப் பார்த்து குஷியானார்கள் ஹவுஸ்மேட்ஸ். சிறிது நேரத்தில் உள்ளாடைகள் கிடைத்ததும் ``எல்லாம் புதுசு... வேணும்னா மோந்துபாருங்க, உங்களுக்கே தெரியும்'' எனக் கத்திக்கொண்டிருந்தது எரிச்சலை உண்டாக்கியது. பிக் பாஸ் வீட்டின் மொக்கைகளுக்கும் அவர் இழுத்து இழுத்துச் சத்தமாகச் சிரித்தது கவனத்தை ஈர்ப்பதற்கே என்பது தெளிவாகத் தெரிந்தது. குடுத்த காசுக்குமேல கூவுறான்டா கொய்யால மொமன்ட்!

நித்யா

காலையில் எழுந்ததுமே ரெஸ்ட் ரூம் ஏரியாவில் நின்று தனது குழந்தை போஷிகாவுடன் இருக்கும் நினைப்பில் எழுந்துவிட்டதாகக் கண்ணில் வெங்காயம் உறிக்கத் தொடங்கிவிட்டார் நித்யா. ஓவியாவுக்குப் பிறகு யார் கண்ணாடியைப் பார்த்துப் புலம்பிக்கொண்டிருந்தாலும் ஓவர் ஆக்டிங்காகவே படுகிறது. (ஓவியா ஆர்மி மெம்பர்லாம் இல்லியே) பேசும் பலரிடமும் முரட்டு சென்டிமென்ட் பிட்டுகளாகப் போட்டுத் தாக்குகிறார் நித்யா. தியாகம் செய்வதாகவும் டெம்ப்ளேட் சேர்த்து சிம்பதி க்ரியேஷனுக்கு விதை போடுகிறார். சென்டிமென்ட் பிட்டுதான... போடுவாரு போடுவாரு!

ஐஷ்வர்யா தத்தா

ஐஷ்வர்யா, மும்தாஜிடம் சென்று ``ப்ளீஸ்... ப்ளீஸ்... வீட்டைவிட்டுப் போயிடாதீங்க! உங்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க" என்றதெல்லாம் சரண்டர் ஆகும்விதமான அசத்தல் நடிப்பு. பிக் பாஸ் வீட்டின் முக்கியமான ஆளுமையாக மும்தாஜ் இருப்பார் எனக் கணித்து, இப்போதே அவரிடம் ஒட்டத்தொடங்கியிருக்கிறார். ஆங்... ஆர்த்தி காயத்ரி எபிசோட் எல்லாம் கண் முன்னால வந்து போகுதே ``சுகர் மாத்திரை போட்டாச்சுனா கெளம்புமா... சும்மா கொஞ்சிக்கிட்டு! இவர்கள் தவிர கன்டென்டுக்காக என்னத்தையாவது பண்ணுவோமே'' என யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம் ஆகியோரும் குறுக்கே புகுந்து கோல் போட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாம் பரவாயில்லை, தயவுசெஞ்சு பாட்டெல்லாம் பாடாதீங்க மிஸ்டர் பொன்னம்பலம்!

அடுத்த கட்டுரைக்கு