Published:Updated:

``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு!" `நாயகி' பப்ரி கோஷ்

``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு!" `நாயகி' பப்ரி கோஷ்

``விஜய் சார் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, நான் பத்து வரிகளில் பதில் சொல்வேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீ பேசுறது ரொம்ப க்யூட்டா இருக்கு. இப்போ நீ பேசுற தமிழில் மிஸ்டேக் குறைஞ்சுடுச்சு'னு சொல்வார்."

``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு!" `நாயகி' பப்ரி கோஷ்

``விஜய் சார் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, நான் பத்து வரிகளில் பதில் சொல்வேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீ பேசுறது ரொம்ப க்யூட்டா இருக்கு. இப்போ நீ பேசுற தமிழில் மிஸ்டேக் குறைஞ்சுடுச்சு'னு சொல்வார்."

Published:Updated:
``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு!" `நாயகி' பப்ரி கோஷ்


``அப்பாவின் ஆசைக்காக ஆக்டிங் பக்கம் வந்தேன். சில பெங்காலி மற்றும் தமிழ்ப் படங்களிலும் நடிச்சிருக்கேன். ஆனால், கண்மணி கேரக்டர் வாங்கிக்கொடுத்த அடையாளம்தான் பெரிசு" எனப் புன்னைக்கிறார், பப்ரி கோஷ். சன் டிவி `நாயகி' சீரியலில் நடித்துவருபவர்.

`` `நாயகி' சீரியல் வாய்ப்பு பற்றி..."  

``சினிமாவில் நடிச்சுட்டிருக்கும்போது, `நாயகி' ஆஃபர் வந்துச்சு. முதலில், நெகட்டிவ் கேரக்டருக்குத்தான் சொன்னாங்க. ஆடிஷனுக்குச் சீக்கிரமே போயிட்டேன். டைரக்டர் குமரன் சார் என்னைப் பற்றி கேட்டார். ரியல் லைஃப்ல செம வாயாடி நான். அப்போ, சுத்தமா தமிழும் தெரியாது. அவர் கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிஞ்ச பாஷைகளில் மாறி மாறிப் பேசிகிட்டே இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிடுச்சு. பிறகு ஆடிஷனும் முடிஞ்சது. கண்மணி கேரக்டருக்கு ஏற்கெனவே செலக்ட் ஆனவங்க திடீர்னு ரிஜெக்ட் ஆக, அந்த கேரக்டருக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. எனக்காக அந்த கேரக்டரில் சில மாற்றங்களும் செஞ்சாங்க."

``ஆரம்பத்தில் தமிழ்ப் பேச ரொம்ப சிரமப்பட்டீங்களா?"

``என் பூர்வீகம், கொல்கத்தா. காலேஜ் படிக்கிறப்போ பெங்காலி படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். தமிழ்த் தெரியாமல் சீரியல் தொடக்கத்தில் நிறைய டேக் எடுத்தேன். ஷூட்டிங் ஸ்பாட்ல யாருக்காச்சும் போரடிச்சுதுன்னா, என்னைக் கூப்பிட்டு பேசச் சொல்லுவாங்க. `அம்மா தாயி போதும்மா' என்கிற அளவுக்குத் தமிழில் தடுமாறிப் பேசுவேன். பர்சனலாவும் பிராக்டீஸ் பண்ணுவேன். இப்போ, ஓரளவுக்குத் தமிழ்ப் பேசக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் டயலாக்கை கேட்டு, நாலு முறை ரிகர்சல் பார்ப்பேன். இப்போ, ஒரே டைம் ரிகர்சல் பார்த்துக்கிறதோடு கேமரா முன்னாடி போயிடறேன்.''

``நடிகை அம்பிகாவுடன் நடிக்கும் அனுபவம் பற்றி..."

``தமிழ் இண்டஸ்ட்ரிக்கு நான் புதுசு. அதனால், ஆரம்பத்தில் அவங்களைப் பற்றி பெரிசா தெரியாமல் இருந்தேன். கூகுள் பண்ணிப் பார்த்தப்போதான் தென்னிந்தியாவின் டாப் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியா நடிச்சவங்க எனத் தெரிஞ்சுகிட்டேன். அவங்க நடிப்பின் ஸ்டைலே சீனியர் நடிகைங்கிற மரியாதையை நமக்குள் ஏற்படுத்தும். இப்போ, அவங்களோடு நான் சேர்ந்து நடிக்கும் சீன்ஸ் நிறைய வருது. நான் தப்பா டயலாக் பேசினால், உடனே சரியா உச்சரிக்கச் சொல்லிக்கொடுப்பாங்க. நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க. அது எனக்கு பெரிய பிளஸ், சப்போர்ட். சமீபத்தில், என் ஃப்ரெண்டு விஜயலட்சுமிக்காக ரொம்ப கோபமாக மிரட்டியும், கண்ணை உருட்டியும் பேசும் சீன்ஸ் வரும். அந்த நடிப்பைப் பார்த்து எனக்கே ஆச்சர்யம். அதுக்கு அம்பிகா மேடம் கொடுத்த டிப்ஸ் ரொம்ப உதவியா இருந்துச்சு." 

``சீரியல் ஃப்ரெண்ட்ஸ் இருவரும் நிஜத்தில் எப்படி?"

``கதைப்படி விஜயலட்சுமியும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒருத்தர் பிரச்னைக்கு இன்னொருத்தர் ரொம்பவே சப்போர்ட்டா இருந்து உதவுவோம். விஜயலட்சுமி அமைதியான டைப். நான் செம வாய்; கஷ்டத்தையும் சுலபமா கடந்துபோகிற கேரக்டர். கிட்டத்தட்ட இப்படித்தான், நாங்க நிஜத்திலும். என் நடிப்புக்கும் விஜி ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க. நடிப்பைத் தாண்டி, பர்சனல் விஷயங்களையும் ஷேர் பண்ணிப்போம்."

``டீம்ல யார் அதிகம் ஃபன் பண்ணுவாங்க?"

``எங்க டீம்ல நிறைய யங்ஸ்டர்ஸ் இருக்காங்க. அவங்க எல்லோரும் மத்தவங்களை கலாய்ப்பாங்க. ஆரம்பத்துல மத்தவங்க தமிழில் என்னைக் கிண்டல் பண்ணும்போது எனக்கு அர்த்தம் புரியாது. இப்போ அர்த்தம் புரியும் என்பதால், அதிகம் கிண்டல் பண்றதில்லை. அம்பிகா மேம் கணவராகவும் என் மாமனாராகவும் நடிக்கும் செந்தில்நாதன் சார், பயங்கரமா காமெடி பண்ணுவார்; எல்லோரையும் கிண்டல் பண்ணுவார். என் கணவரா நடிக்கும் வெற்றி அண்ணனிடம், `நமக்கு கெமிஸ்ட்ரியே வொர்க் அவுட் ஆகலை'னு கிண்டல் பண்ணுவேன்."

``சினிமா ஆக்டிங் எப்படிப் போகுது?"

`` `டூரிங் டாக்கீஸ்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினா நடிச்சேன். `பைரவா' படத்தில கீர்த்தி சுரேஷ் ஃப்ரெண்டு. விஜய் சாரின் `62'-வது படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும் (விஜய்க்கு மச்சினி), அஜித் சாரின் `விசுவாசம்' படத்தில் நயன்தாரா ஃப்ரெண்டாவும் நடிக்கிறேன். விஜய் சார் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, நான் பத்து வரிகளில் பதில் சொல்வேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீ பேசுறது ரொம்ப க்யூட்டா இருக்கு. இப்போ நீ பேசுற தமிழில் மிஸ்டேக் குறைஞ்சுடுச்சு'னு சொல்வார். என் அப்கம்மிங் புராஜெக்ட்டுகள் பற்றியும் அக்கறையோடு கேட்பார். அஜித் சாரும் ரொம்ப அன்பாப் பழகுவார்."