Published:Updated:

"விவசாயத்தை புரொமோட் பண்ற மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்..!" - 'ஜோதிடபலன்' விஷால்

"விவசாயத்தை புரொமோட் பண்ற மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்..!" -  'ஜோதிடபலன்' விஷால்
"விவசாயத்தை புரொமோட் பண்ற மாதிரி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்..!" - 'ஜோதிடபலன்' விஷால்

நிகழ்ச்சி தொகுப்பாளினியா மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க தயார். வாய்ப்பு அமைஞ்சா நிச்சயம் என்னை மறுபடி ஸ்கிரீன்ல என்னைப் பார்க்கலாம் என்கிறார், 'ஜோதிடபலன்' விஷால்.

தினெட்டு வருடங்களுக்கும் மேலாக மீடியாத்துறையில் பயணித்தவர் ஶ்ரீ விஷாலாட்சி (மீடியாவைப் பொறுத்தவரை விஷால்). காலையில் சன் டி.வியை ஆன் செய்கிறவர்களுக்கு இவர் மிக பரிட்சயம். தினமும் காலை ஜோதிட பலன் மூலமாக நேயர்களின் அன்றைய நாளை சிறந்த நாளாக ஆக்குவதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பெயர் : விஷால்

பிரபலமான நிகழ்ச்சி : ஜோதிடபலன்

ஃபேமிலி : அன்பான கணவர், குறும்புக்கார மகன்

தற்போது செய்துகொண்டிருப்பது : ஐடி கம்பெனி வேலை

எதிர்கால திட்டம் : ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சா ரெடி.!

''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஸ்கூல், காலேஜ் அப்ப நிறைய கல்சுரல்ஸில் கலந்துப்பேன். கல்சுரல் மூலம்தான் மீடியா என்ட்ரி கிடைச்சது.  மீடியாக்குள்ள என்ட்ரி ஆகும் போது, 'பாக்கெட் மணி'க்காக ஒர்க் பண்றோம்ங்குற எண்ணம் மட்டும்தான் இருந்தது. படிச்சிட்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனேன். என்னுடைய முதல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் 'நீங்கள் கேட்ட பாடல்'. அதற்கப்புறம் சன் டிவியில் தொகுப்பாளரா சேர்ந்தேன். 'டைட்டானிக்' படத்திற்கு நான்தான் திரைவிமர்சனம் பண்ணேன். அதைத் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்'' என்றவரிடம் பிரேக்கிற்கான காரணத்தைக் கேட்டோம்.

''மீடியாவில இருந்தாலும் நல்லா படிக்கணுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். கிட்டத்தட்ட நாலு டிகிரிக்கு மேல வாங்கியிருக்கேன். கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்த்துட்டு ஃபார்ட் டைமாகத்தான் மீடியாவில இருந்தேன். நான் வேலை பார்த்த ஐடி கம்பெனியிலேருந்து என்னை ஃபாரினுக்கு அனுப்பினாங்க. அதனாலதான் மீடியாவுக்கு பிரேக் விட வேண்டியதா போச்சு மூன்று வருஷத்துக்கும் மேல லண்டனில் வேலை பார்த்தேன். இப்போ ஐந்து மாசத்துக்கு முன்னாடிதான் சென்னைக்குத் திரும்பினோம்" என்றவரின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.

"நிறைய பேர் என்னுடைய வாய்ஸ் தான் என் பிளஸ்னு சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் என் சிம்பிளிசிட்டிதான் என் பிளஸ். மேக்கப் பண்றது எனக்குப் பிடிக்காது. வீட்டில் எப்படி இருக்கேனோ அப்படித்தான் ஸ்கிரீன் முன்னாடியும் இருப்பேன். எங்க ஃபேமிலியோட லண்டலின் ஷாப்பிங் போயிருந்தோம். அங்கே என் ஃபேன்ஸ் என்னைப் பார்த்து அடையாளம் வைச்சு என் கூட செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க. வெளிநாட்டில் இருக்கிற ஶ்ரீலங்கன் ஃபேமிலி என்னை ஞாபகம் வைச்சிருக்காங்கன்னு எனக்கு அவ்வளவு சந்தோஷம்'' என மெய் சிலிர்க்கிறார்.

''என் கணவர் வெங்கட்பிரபு சார் டீம்ல வொர்க் பண்றார். மங்காத்தா, சென்னை - 28 படங்களில் நடிச்சிருக்கார். என் பையன் லவன்த் படிக்கிறான். எனக்கு சீரியலில் நடிக்க எப்பவுமே விருப்பம் இருந்ததில்லை. சீரியலுக்காக ஐ.டி வேலையைவிட வேண்டியது வரலாம்ங்கிற என் எண்ணம். எக்காரணம் கொண்டு ஐ.டி வேலையை விடக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கேன். இப்ப சென்னையில என் ஐ.டி வேலை தொடருது. அதுமட்டுமில்லங்க, என் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து நேச்சுரல் பியூட்டி பிராடக்ட் விற்கிற பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன். கடல் பாசி, பனங்கற்கண்டு மாதிரி நம்மூர்ல இயற்கையாகக் கிடைக்கக்கூடிய புராடக்டை சேல் பண்ற முடிவு எடுத்திருக்கோம். இது மூலமா விவசாயத்தை புரோமோட் பண்ணனும்ங்கிறதுதான் என் பிளான். அதே நேரம் பார்ட் டைம் நிகழ்ச்சி தொகுப்பாளினியா மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க தயார். வாய்ப்பு அமைஞ்சா நிச்சயம் என்னை மறுபடி ஸ்கிரீன்ல பார்க்கலாம்'' என்கிறார், விஷால்.

அடுத்த கட்டுரைக்கு