Published:Updated:

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

Published:Updated:
கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

இன்றைய தேதியில் தலைவர் ஆவதுதான் எளிய சமாச்சாரம்.  ஜனநாயகத்தில் அதற்கான குறுக்கு வழிகள் பல உள்ளன. விசுவாசமான தொண்டர்களைத்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  நேர்மையான கொள்கைகள் இருந்தால்தானே, தொண்டர்களும் இருப்பார்கள்? பிக்பாஸ் வீடும் இதற்கு விதிவிலக்கில்லை. அடுத்த தலைவருக்கான தேர்தலை புதுமையான முறையில் நடத்தினார் பிக்பாஸ். அதிகம் கஷ்டமில்லை ஜென்டில்மேன்! மணியடித்ததும் எவர் ஓடிவந்து முதலில் கன்ஃபெஷன் ரூமில் உள்ள இருக்கையில் அமர்கிறார்களோ, அவரே தலைவர். ரொம்பவும் எளிதான வழிமுறை! ஆனால், அது வைஷ்ணவி வசம் செல்லும் என அப்போது யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2இதையே நம் பொதுத் தேர்தலுக்கும் பயன்படுத்தினால் எத்தனை விஷயங்கள் மிச்சமாகும்? இத்தனை கோடி செலவு செய்து, லட்சக்கணக்கான வாக்கு இயந்திரங்களை இம்சை செய்து, வேட்பாளர்கள் வெயிலில் அலைந்து வடை சுடும் பாட்டிகளின் காலில் பாவனையாக விழுந்து, மக்களுக்கு விடுமுறை கொடுத்து, வாக்களிக்க அவர்களை வேண்டி, அப்படியும் சிலபலர் டிவி ரிமோட்டுக்களை விட்டு பிரிய மனமில்லாமல்.. 

பிக்பாஸ் டீம் யோசிக்கும் இந்த எளிய விதியைப்  போலவே நம்முடைய ஜனநாயக நடைமுறைகளையும் அமைத்தால் தலைவருக்கான பாதைகள் இன்னமும் எளிமையாகும். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்கிற பாரதியின் கனவும் சாத்தியமாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. என்னவொன்று, ‘உசைன் போல்ட்’ போன்ற மின்னல் வேக ஓட்ட ஆசாமிகள் மட்டுமே தலைவராக அதிகம் வாய்ப்புண்டு. அவர்கள் தொழில்முறை ஓட்டக்காரார்களாக இல்லையென்றாலும் கூட சில வருடங்களில் பெரும் பணத்தை சுரண்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ‘ஓடப்போகும்’ சாகசமும் எப்படியும் நடக்கத்தான் போகிறது. 

ஆக.. பிக்பாஸ் வீட்டிலும் தலைவர் தேர்தல் என்கிற பெயரில் இப்படியொரு கேலிக்கூத்து நடந்தது. அதைப் பற்றி விளக்கமாக பார்ப்போம். 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2


 

இந்த தேர்தல் கூத்துகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ‘கெடக்கறதுக்கெல்லாம் கெடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில வையி’ என்கிற பழமொழியைப் போல், ஐஸ்வர்யா, ஷாரிக், மஹத், யாஷிகா கூட்டணியின் ‘லவ் மேட்டர்’ பஞ்சாயத்து தனியாக ஓடிக் கொண்டிருந்தது. ‘அது என்ன மேட்டர்.. என்று அறிந்து கொள்ள முயன்றால் அது காவிரி நீர் விவகாரத்தை விடவும் சிக்கலாக இருக்கும் போலிருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ‘அவ இவனை லவ் பண்ணா.. இவன் இன்னொருத்தியை லவ் பண்ணான். பேபி பார்ம் ஆச்சு..” என்று தொலைக்காட்சி சீரியல்களைக் கிண்டலடித்து, ஒரு திரைப்படத்தில் விவேக் சொல்லும் நகைச்சுவை வசனம்தான் நினைவிற்கு வருகிறது. ‘இது லவ்ஸ் மேட்டாரத்தான் இருக்கும். இருங்கடா.. நானும் வரேன்’ என்கிற கவுண்டமணி கணக்காக குதித்தோடி கிளம்பி… ரொம்பவும் மெனக்கிட்டாலும் கூட ஒருமாதிரி ‘குன்சாகத்தான்’ புரிந்து கொள்ள முடிந்தது. 

இந்த ஷாரிக் பயல் வந்ததில் இருந்தே ஐஸ்வர்யாவை தொடர்ந்து மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். பாவம், அந்தப் பெண்ணும் அப்பாவித்தனமாக, இவன் வழிவதை காதல் என்று நினைத்துக் கொண்டிருந்தது போல. இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது, ஷாரிக்கிற்கு ‘A’ என்கிற பெயரில் துவங்கும் ஒரு காதலி இருக்கிறார் போலிருக்கிறது. 

ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் வழிவதை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு… ‘மவனே.. டாய்.. நான் ஒருத்தி வெளியில் இருக்கறப்ப…’ என்று நினைவுப்படுத்தும் படியாக எம்பிராய்டரி போட்ட சட்டையை அவனுடைய காதலி ஷாரிக்கிற்கு அனுப்பியிருக்கிறார். பயபுள்ள அந்த ‘மிரட்டல் குறியீட்டைப்’ பார்த்ததும் ஃபீலிங்ஸ்ஸூம் குழப்பமும் கலந்த உணர்வில் தள்ளாடுகிறார். 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2ஷாரிக்கிற்கு ஏற்கெனவே இருக்கும் ‘லவ்’ விஷயத்தை அறிந்த ஐஸ்வர்யா பயங்கர அப்செட் ஆகி தன் நெருங்கிய நண்பர்களான யாஷிகா, மஹத் ஆகியோரிடம் பேசாமல் இருக்க… அவர்கள் பதிலுக்கு கோபப்பட..ஒரே ‘கசமுசா’. வெளியில் ஒரு காதலி இருந்தும் ஷாரிக் தன்னை தற்காலிகமாக பழக முனைவதைப் போல மஹத் – யாஷிகா கூட்டணியும் போலியாக இருக்கும் போல என்று ஐஸ்வர்யா கருதுவதால் அவர்களின் மேல் கோபமாகவும் இருக்கிறார் என்று தோன்றுகிறது. 

‘யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்’ என்கிற மோடில் இருக்கிற ஐஸ்வர்யா, தனக்கு வந்த வெறுப்பில் ‘என்னை நாமினேட் பண்ணுங்க’ என்றொரு அதிரடி அறிவிப்பை பொதுவில் வெளியிட மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘தானும் வெளியேறுகிறேன்’ என்றொரு விளையாட்டான அறிவிப்பை மஹத் தெரிவித்து மேலும் குட்டையைக் குழப்பியிருக்கிறார் போலிருக்கிறது. ‘நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்திட்டு இருந்தீங்க.. கண்ணு பட்டுடுச்சு’ என்பது யாஷிகா –ஐஸ்வர்யா பிரிவைப் பற்றிய ஜனனியின் விஞ்ஞானபூர்வ கருத்து. ஒருத்தரையொருத்தர் பிராண்டிக் கொண்டு … பேசி.. பேசி.. இறுதியில் ஒருமாதிரியாக தற்காலிக சமாதானத்திற்கு வந்திருக்கிறார்கள். சுபம். 

‘ஒன்றுமே புரியவில்லையே’ என்கிறீர்களா? பரவாயில்லை, விடுங்கள். You are not missing anything. இது அப்படியொன்றும் உலகமகா பிரச்னையில்லை. எனக்கும்தான் புரியவில்லை. இத்தனை விவரமாக நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை?

முதல் சீஸனில் ஆரவ் – ஓவியா கூட்டணிக்கு நிகழ்ந்த சம்பவங்கள் ஏறத்தாழ ஐஸ்-ஷாரிக் கூட்டணிக்கு அப்படியே நடப்பதைப் பார்க்கும் போது அந்த சீஸனின் ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்’தான் இதிலும் பணிபுரிகிறாரோ என்கிற சந்தேகமும் ஒருபுறம் தோன்றாமல் இல்லை. 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2**

சரி, இன்று ஒளிபரப்பான நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம். 

14-ம் நாளின் சம்பவங்கள் இன்னமும் முடியவில்லை. மமதி வெளியேறினதற்காக பலர் கண்கலங்கினார்கள் அல்லது அப்படி பாவனை செய்தார்கள். ஒருவர் அகன்ற பிறகு அவரைப் பாராட்டுவதும் புகழ்வதும் நம் மரபு. ‘எல்லா வேலையும் கரெக்டடாதான் பண்ணாங்க. அப்புறம் ஏன் எவிக்ட் ஆனாங்க” என்பது சிலரின் சந்தேகம். “மக்களாலதான் எல்லாச் சம்பவங்களையும் பார்க்க முடியுது. சிலது நமக்கே தெரியாது. ஏதோவொண்ணு நடந்திருக்கும். அதான் அவங்களை தேர்ந்தெடுத்திருக்காங்க” என்று லாஜிக் சமாதானம் சொன்னார் மஹத்.  

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2மும்தாஜால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ‘என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைச்சுட்டு போறேன்” என்று மமதி இவரை ரம்யாவிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருப்பதால் ரம்யா அருகில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மும்தாஜை சமாதானப்படுத்துகிறேன் பேர்வழி என்று ‘கட்டிப்பிடிடா’ பாட்டை ஹஸ்கியான குரலில் பாடி மும்தாஜை சிரிக்க வைத்தார் மஹத். ‘நாளைக்கு நான் ஹீரோவாக படத்துல இந்த மாதிரி.. நிச்சயம் ஒரு பாட்டு… மும்தாஜோட’ என்பது மஹத்தின் ஆசை.  (ஆஹா.. இதுவல்லவோ வாழ்க்கையின் லட்சியம்). 

கவர்ச்சி நடிகை என்கிற பிம்பத்திலிருந்து வெளியேற மும்தாஜ் ஒருபுறம் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும் போது மஹத் போன்றவர்கள் அதை தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவகையில் மஹத்தின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ‘பிக்பாஸ் வீட்டின் இளம் பெண் போட்டியாளர்களிடம் வழிவதற்காகத்தான் இந்த ஷோவிற்கு வந்தேன்’ என்று தன் தோழியிடம் சொல்லி விட்டுத்தான் வந்திருப்பதாக துவக்க நாளில் சொன்னார். ஆக .. தன் கடமையில் தொடர்ந்து கண்ணுங்கருத்துமாக இருக்கும் மஹத்திற்கு விருது ஏதேனும் தந்தால் நல்லது. கடந்த சீஸன் சிநேகன் போல, கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு ஒன்றையும் மஹத் விடுவதில்லை. ‘Hugs’ சவால் மஹத்திற்கு தரப்பட்டிருந்தால், மனிதர் தீபாவளியே கொண்டாடியிருப்பார்.. 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2பதினைந்தாம் நாள் காலை எட்டு மணி. ‘சத்தியமா .. நீ எனக்கு .. தேவையேயில்லை..’ என்று ஒலித்த பாட்டு நேற்று வெளியேறிய மமதியை குறிப்பதாக இருக்காது என்றே எடுத்துக் கொள்வோம். நடனமாடி முடித்த பின் ‘குட்மார்னிங் போஷிகா’ என்று காமிராவைப் பார்த்து சொன்னார் நித்யா. தாயுள்ளம். 

‘நீதான் நாட்டி.. இல்ல.. நீதான் நாட்டி..’என்று ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள் யாஷிகாவும் மஹத்தும். (டேய்.. யப்பா… உங்களுக்கு வேற வேலையே இருக்காதா!)… இப்படி செய்து கொண்டிருந்த மஹத், டேனியிடம் .. “மச்சான்.. எனக்கு ஹெல்ப் பண்றா’ என்றவுடன் ‘டேய்.. இந்த விஷயத்துக்கெல்லாம் நான் ஹெல்ப் செய்ய முடியாது’ என்று  டேனி டைமிங்காக சொன்னது பயங்கர காமெடி.

“இந்த ஆளு எல்லாத்தையும் தப்பாவே யோசிக்கறாரு.. யாரையும் பாராட்ட மாட்டேன்றாரு.. பாசிட்டிவ்வா யோசிங்கண்ணே…” என்று பாலாஜியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் மஹத்..  (இவரு அப்படியே பாசிட்டிவ் திலகம்…).

வைஷ்ணவி தன்னை fake என்று சொல்லி விட்டார் என்பதற்காக சிணுங்கிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘அவ மட்டும் ஒழுங்கா?’ என்று ஆறுதல்படுத்தினார் யாஷிகா. 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2கரகரப்பிரியா ராகத்தில் ‘நித்யா’வை அழைத்த பிக்பாஸ். ‘உங்களின் தலைமைப் பொறுப்பு இத்துடன் நிறைவு பெறுகிறது” என்றார். அட.. ஆமால்ல… நித்யா தான் வீட்டிற்கு தலைவில்ல.. பாவம் நமக்கும் நினைவில்லை.. அவங்களும் கூட மறந்திருப்பாங்க போல… ‘ஐய்யா.. லீவு.. ‘’ என்று குதிக்கிற பள்ளிக்கூட குழந்தையைப் போல தலைவி பதவி முடிந்ததைக் கொண்டாடினார் நித்யா.

புதிய தலைவருக்கான போட்டி அறிவிப்பு வந்தது. அனந்த் மற்றும் நித்யா ஆகியோர் ஏற்கெனவே நாமினேஷனில் இருப்பதால் அவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. ‘சில நொடிகள் மட்டும் கன்ஃபெஷன் ரூம் திறந்திருக்கும். யார் முதலில் ஓடி வந்து இருக்கையில் அமர்கிறார்களோ..’ அவர்கள் தலைவர் பதவியில் போட்டியிட முடியும்’ என்று அறிவிப்பு வர, அருகிலிருந்த பாலாஜியை ‘போ.. போ’ என்பது போல் சைகை செய்தார் நித்யா..

சிலர் அடித்துப் பிடித்துக் கொண்டு வர.. இதர சிலர் ‘என்னத்த.. தலைவர்..’ என்கிற மோடில் சலிப்பாக இருந்தார்கள். முதலில் அமர்ந்த இருவர், சென்றாயன் மற்றும் மஹத் என்பதாகத்தான் தெரிகிறது. ஆனால் மஹத்தை வெளியே அனுப்பிய பிக்பாஸ், சென்றாயன் மற்றும் வைஷ்ணவியை தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தார். இரண்டு நிபந்தனைகள்.

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2ஒன்று, இதுவொரு ரகசியமான சவால். இதுகுறித்து எந்தவொரு போட்டியாளரிடமும் ஆலோசனை செய்யக்கூடாது. இரண்டு, இந்த இருவரில் எவர் மற்ற போட்டியாளர்களின் ‘கட்டிப்பிடி’ வைத்தியத்தை அதிகம் பெறுகிறார்களோ.. அவரே தலைவர். 

வெளியே வந்த இருவரும் ‘சாயங்காலம்தான் டாஸ்க் பத்தி சொல்வாங்களாம்’ என்றொரு பொய்யைச் சொல்லி விட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடத் துவங்கினார்கள். 

சென்றாயனின் அணுகுமுறை மிக எளிமையானதாக இருந்தது. ‘வர்ற புதன்கிழமை நிச்சயதார்த்தம் வெச்சிருக்கம். அவசியம் வந்துடுங்க’ என்று அழைப்பதைப் போல.. ‘காலைல கக்கூஸ் கழுவினேன்னே.. என்னைப் பாராட்ட மாட்டீங்களா?” என்று ஒவ்வொருவரிடமும் சென்று கேட்டுக் கொண்டிருந்தார். ‘அதான் காலைலயே பாராட்டினேனே..’ என்று எதிர் ஆள் கைகொடுத்தாலும்.. ‘ஒழுங்கா பாராட்ட மாட்டீங்களா..’ என்கிற மாதிரி அருகில் நிற்பார். அல்லது ஒருபக்கம் தோளோடு உரசுவார். ‘சரிடா பாராட்டறேன்’ என்று எவராவது கட்டிப்பிடிக்கும் போது சென்றாயனின் நோக்கம் ஒருவழியாக  நிறைவு பெறும். 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2சென்றாயனின் நாடகத்தை மஹத் எளிதில் கண்டுபிடித்து விட்டார். பிறகு அவருடைய கொள்கை பரப்புச் செயலாளராக மாறி பிற போட்டியாளர்களும் சென்றாயனை கட்டிப்பிடிக்க உதவி செய்தார். சென்றாயனின் வெள்ளந்தித்தனத்தால் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியவில்லை. ‘யார் அதிக hugs வாங்குகிறார்களோ.. அவர்கள்தான் தலைவர்’ போல’ என்பதை பிற போட்டியாளர்கள் எளிதில் கண்டுபிடித்து விட்டனர். போதாத குறைக்கு.. இன்னும் யார் யாரையெல்லாம் ‘கவர்’ செய்ய வேண்டும் என்று மஹத்திடம் வெளிப்படையாக ஆலோசனை செய்து கொண்டிருந்தார் சென்றாயன். இதுவொரு ரகசிய task என்பது மஹத்திற்கும் தெரியாததால் அவருக்கு உற்சாகமாக உதவி செய்து கொண்டிருந்தார். வைஷ்ணவியும் இது குறித்து சென்றாயனை தனிமையில் எச்சரித்தார். இருந்தும் சென்றாயனுக்குப் புரியவில்லை. (இங்லீஷ் படி..இங்லீஷ் படி..-ன்னு ஆண்டவர் சொன்னதை அப்பவே கேட்டிருந்தாதானே!)

மஹத்தின் உதவிக்குப் பின்னால் வேறு காரணமும் இருந்திருக்கலாம். வைஷ்ணவியை விடவும் சென்றாயன் தலைவர் ஆவதே நல்லது என்பதை மஹத் மட்டுமல்லாமல் பிறரும் நினைக்கிறார்கள். ‘ஏற்கெனவே . அவ... சும்மாவே ஆடுவா.. எதுக்கு தலைவர்-ன்ற சலங்கையை நாமளா கட்டிவிடணும்” என்பது அவர்களின் அரசியல். 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2இன்னொரு வேட்பாளரான வைஷ்ணவியின் முன்னால் இரண்டு சவால்கள் இருந்தன. ஒன்று, ‘ஏற்கெனவே தன் மீது விதம்விதமான கடுப்பில் இருக்கும் மற்றவர்களைச் சமாளித்து கட்டியணைக்கச் செய்ய வேண்டும். இன்னொன்று, ‘ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சென்றாயனைப் போல சட்டென்று மற்றவரை கட்டிப்பிடித்து விட முடியாது. குறிப்பாக ஆண் போட்டியாளர்களை’

ஜனனியிடம் முதலில் துவங்கினார் வைஷ்ணவி. வயிற்று வலியுடன் சோகமாக இருப்பது போல் நடிக்கத் துவங்க.. இரை வந்து வலையில் விழுந்தது. பழைய கதைகளுக்கெல்லாம் வருத்தப்பட்டு வைஷ்ணவி மன்னிப்பு கேட்க ‘ஓகே..’ என்று அணைத்துக் கொண்டார் ஜனனி. சக்ஸஸ்.. ‘என்னைக் கட்டிப்பிடியேன்’ என்பது போலவே சாய்ந்து கொண்டு நின்ற வைஷ்ணவியின் நாடகங்கள் ஒருபுறம் காமெடியாகவே இருந்தது. 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2இப்படியாக.. ஒவ்வொருவராக சென்று ‘கட்டிப்பிடி’ வைத்தியத்திற்கு வைஷ்ணவி முயல.. மஹத் மட்டும் எளிதில் மசியவில்லை. பழைய விஷயங்களுக்காக வைஷ்ணவி வருத்தம் தெரிவித்தும் ‘அப்படியா..’ என்பது மாதிரி கேட்டு கல்லுப்பிள்ளையார் போல அமர்ந்திருந்தார். (மவளே.. என் கிட்டயா சீன் போடற.. நீ எதுக்கு இப்படில்லாம் பண்றேன்னு எனக்குத் தெரியாதா..)
 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இந்த நாடகத்தை பிறகு அறிந்து கொண்ட ஜனனி, ‘ஹே.. அவ நெஜம்மாவே வருத்தப்பட்டுதான் என் கிட்ட மன்னிப்பு கேட்டா’-ன்னு நெனச்சிட்டேம்ப்பா.. பயபுள்ள இதுக்குத்தான் இத்தனை டிராமா ஆடுச்சா” என்று மற்றவர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். வைஷ்ணவியின் மீது கூடுதலான வருத்தமும் கோபமும் வர இது காரணமாக இருந்தது. 

ஒருவழியாக தேர்தல் காமெடி கலாட்டாக்கள் முடிவடைய தலைவருக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது ரகசிய சவாலாக இருந்தும் மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும்படி செயல்பட்ட சென்றாயன் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். எதிர்பார்த்ததுதான். (நாடாளுமன்றத்திலேயே செல்லாத வாக்கு விழுது. நீங்க கவலைப்படாதீங்க சென்றாயன்..’)

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2வைஷ்ணவி தலைவர் பொறுப்பை பெருமையுடன் ஏற்றுக் கொண்டார். டேனி, பாலாஜி. ஐஸ்வர்யா ஆகியோர் சமையல் பொறுப்பு. மும்தாஜ், பொன்னம்பலம், சென்றாயன்.. ஆகியோர் பாத்திரம் கழுவும் அணி. நித்யா, ஜனனி, ஷாரிக் ஆகியோர் பாத்ரூம் சுத்தம் செய்யும் அணி. 

தேர்தல் காமெடி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் வேறு பஞ்சாயத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த யாஷிகா – ஐஸ்வர்யா கூட்டணியை ‘தமிழில்’ பேச மறுபடியும் எச்சரித்தது பிக்பாஸ் குரல். மீறினால் நீச்சல் குளத்தில் தள்ளிவிடப்படும் தண்டனை தரப்படுமாம். (தமிழை வளர்க்க எப்படில்லாம் கஷ்டப்படறாங்கப்பா..)

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2


நாமினேஷன் படலம் துவங்கியது. மறுபடியும் அதேதான். அனந்த் மற்றும் நித்யா ஏற்கெனவே நாமினேஷனில் இருப்பதால் அவர்களின் பெயரை சொல்ல முடியாது. முடிவுகள் வெளிவரத் துவங்கின. 

பாலாஜி அதிக நபர்களின் வெறுப்பைச் சம்பாதித்து முன்னணியில் இருந்தார். அவர் ஆபாச வார்த்தைகள் பேசுவது, மலினமாக கிண்டலடிப்பது .. எல்லாம்..இப்போதுதான் மக்களின் கண்களில் படுகிறது போல. 


அடுத்த வரிசையில் இருந்தவர் பொன்னம்பலம். ‘நாட்டாமை’ படத்தில் வரும் ‘மிக்சர் ஆசாமி’ போல இவர் வீட்டில் சும்மாவே உலாத்திக் கொண்டிருப்பதாலும் கடுமையான சவால்களை இவரால் செய்ய முடியாது என்கிற யூகத்தின் அடிப்படையிலும் இவரைச் சிலர் தேர்ந்தெடுத்தனர். 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2


அடுத்தபடியாக மும்தாஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தலைமைக்குணம் உள்ளவர், கடுமையான போட்டியாளர், அச்சமூட்டக்கூடியவர் என்கிற காரணங்கள் போதும். 

ஆக.. பாலாஜி, பொன்னம்பலம், மும்தாஜ், அனந்த், நித்யா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களின் இந்த வாரச் செயற்பாடுகள் இவர்களின் வெளியேற்றுதலை வார இறுதியில் தீர்மானிக்கும்.. 

கட்டிப் பிடிச்சு கட்டிப் பிடிச்சு தலைவியான வைஷ்ணவி! #BiggBossTamil2

இனி.. பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவியின் ஆட்சிதான். உண்டு.. சண்டை.. கண்டிப்பாக உண்டு. .. காத்திருப்போம்… வைஷ்னவி தலைவர் ஆக்கப்பட்டது பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவு செய்யவும்.