Published:Updated:

கேபிள் கலாட்டா!

திகட்டத் திகட்ட திட்டு !படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார் ரிமோட் ரீட்டா

கேபிள் கலாட்டா!

திகட்டத் திகட்ட திட்டு !படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார் ரிமோட் ரீட்டா

Published:Updated:
##~##

''எந்த கேரக்டர் செய்தாலும், அதை திருப்தியா செய்யணும் ரீட்டா. 'தங்கம்’ சீரியல்ல என்னோட 'இளவஞ்சி’ கேரக்டருக்கு எத்தனை ஃபேன்ஸ் தெரியுமா..? குறிப்பா, குழந்தைகளுக்கு எல்லாம் பிடிச்ச வில்லி நான் என்பது, எவ்ளோ விநோதமான, பெருமையான விஷயம்..?!''

- உற்சாகமா பேச்சை ஆரம்பிச்சாங்க காவேரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ம்... 'வைகாசி பொறந்தாச்சு’ படத்துல அறிமுக     மாகி, ஃபீல்டுக்கு வந்து 22 வருஷம் ஆச்சு. சன் டிவி-யில் 'தங்கம்’, ராஜ் டி.வி-யில் சமீபத்தில் முடிஞ்ச 'கொடிமுல்லை’னு சேனல் ஏரியாதான் இப்பவும் தமிழக மக்கள்கிட்ட என்னைத் தொடர்பில் வெச்சுருக்கு. கொடுக்கிற கேரக்டரை கேமரா முன்னால் வாழ்ந்து காட்டிடணும்ங்கிறதுதான், இத்தனை வருஷ அனுபவத்தில் நான் கத்துக்கிட்ட பாடம்!''னு பக்குவமா பேசின காவேரி,

''சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை பக்கத்துல இருக்கிற மூங்கில்துறைப்பட்டு கிராமத்துக்குப் போயிருந்தேன் ரீட்டா. அங்க கூட்டுக்குடும்பமா வாழற ஒரு வீட்டு மனிதர்கள், என் மேல் அவ்வளவு பாசத்தைப் பொழிஞ்சாங்க. மூணு நாட்கள் அவங்க வீட்டில்தான் தங்கி இருந்தேன்னா பார்த்துக்கோ. உறவுகள், குழந்தைப் பட்டாளம், சந்தோஷம், சிரிப்புனு எப்பவும் கூட்டமாவே அந்த வீட்டைப் பார்த்தப்போ, பொறாமையா இருந்தது. சிட்டியில் இருக்கிற நாம் அதை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்!''னு ரொம்பவே ஃபீல் பண்ணினாங்க காவேரி.

கேபிள் கலாட்டா!

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

'இவருக்குப் பதிலாக இனி இவர்..!’னு மெகா தொடர்கள்ல சில கேரக்டர்களுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் மாறுவது சகஜம்தான். அப்படி 'தென்றல்’ சீரியல்ல வில்லி மாமியாரா வந்த சாந்தி வில்லியம்ஸ் கேரக்டர், இப்போ கே.எஸ்.ஜெயலட்சுமி கைக்கு மாறியிருக்கு!

''அம்மா கேரக்டர், தோழி கேரக்டர்னு ஆர்ட்டிஸ்ட்டுகள் மாறுவதைப் பாத்திருக்கோம். ஆனா, சவாலான வில்லி கேரக்டரையும் சூப்பரா பேலன்ஸ் பண்ணிட்டாங்க ஜெயலட்சுமி. பார்வையில் இருந்து, தேளா கொட்டிப் பேசுறது வரைக்கும் டிபிக்கல் நெகட்டிவ் மாமியாராகி, எங்ககிட்ட திட்டு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க 'தமிழ்’ அம்மா!''

- ஜெயலட்சுமிக்கு வரவேற்பு தந்த வாசகிகளோட கடிதங்களை ஹேண்ட்பேக்ல நிரப்பிட்டு, அவங்க வீட்டுக்குப் போனேன்!

கேபிள் கலாட்டா!

''ஃபீல்டுக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. ஆனாலும், இந்த ஹிட் கேரக்டர்ல நாம செட் ஆகணுமேனு சின்னதா ஒரு பயம் இருந்தது ரீட்டா. ஆனா... நேர்ல, போன்ல பேசினவங்களோட பாராட்டு, நீ கொண்டு வந்திருக்கிற இந்த லெட்டர்ஸை எல்லாம் பார்க்கும்போது, இப்போ திருப்தியா, ரொம்ப சந்தோஷமா இருக்கு''னு சொன்ன ஜெயலட்சுமி, ஒரு கிளாஸிக்கல் டான்ஸர்ங்கறது ஆச்சர்ய செய்தி!

''சின்ன வயசுல ரேடியோவுல பாட்டு கேட்டுட்டே, அதுக்கு ஏத்த மாதிரி டான்ஸ் ஆடுறதுதான் என் பொழுதுபோக்கு. வளர வளர அந்தப் பொழுதுபோக்கு ஆர்வமா மாற, முறைப்படி பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். அப்போ பாப்புலரா இருந்த கேமராமேன் கர்ணன் சார், ஒரு முறை என் போட்டோவைப் பார்த்துட்டு... 'நடிக்க விருப்பமா?'னு கேட்டார். சந்தோஷமாவும், பரவசமாவும் இருந்தது. அப்படிக் கிடைச்ச வாய்ப்புதான், சிவகுமார் சார் ஹீரோவா நடிச்ச 'எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நான் ஹீரோயின் ஆனது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சாச்சு. 'நல்லா நடிக்கிறேன்'னு பெயர் வாங்கிக் கொடுத்தது, நெகட்டிவ் கேரக்டர்கள்தான். இப்போ 'உறவுகள்’, 'தென்றல்’னு திகட்டத் திகட்ட தாய்க்குலங்கள்கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன்!''னு சிரிச்ச ஜெயலட்சுமி,

கேபிள் கலாட்டா!

''கே.பி. சாரோட 'ஒரு வீடு இரு வாசல்’ படத்துக்கு பிறகு... எல்லோரும் கே.எஸ். ஜெயலட்சுமிங்கற என்னோட பேரையே மறந்து, 'சிவப்பு ருக்மணி’னு தான் கூப்பிடறாங்க இப்போ வரைக்கும். நீ கொண்டு வந்திருக்கிற இந்த லெட்டர்ஸைப் பார்த்தா, இனி தமிழ்நாடே என்னை 'தமிழ் அம்மா’னு தான் கூப்பிடும்போல!''

- கலகலனு சிரிச்சாங்க ஜெயலட்சுமி.

'துளசி’கிட்டயும் கொஞ்சம் சிரிங்க!

''நான் வெத்தலைக்குப் பேர்போன கும்பகோணத்து ஆளு. குடிக்கத் தண்ணி இல்லாமக்கூட இருந்துடுவேன். ஆனா, வெத்தலை இல்லாம முடியாதும்மா!''னு நாக்கு சிவக்க பேசினார், 'விழுதுகள்’ சந்தானம்!

''மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல, ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு, இண்டியன் ஓவர்சீஸ் பேங்க்ல வேலைக்குச் சேர்ந்தவன், 'ஹன்ஸா விஷன்’ தயாரிப்புல தூர்தர்ஷன்ல வந்த 'விழுதுகள்’ தொடர்ல எக்ஸிக்யூட்டிவ் புரொடக்ஷன் வேலையைப் பார்த்துட்டே, சீரியல்ல வில்லனாவும் நடிச்சேன் ரீட்டா. நல்ல பெயர் கிடைச்சுது. 'விழுதுகள்’ங்கிற அடைமொழியும் என் பெயரோட ஒட்டிக்கிச்சு. ஜெயா டி.வி-யில 'வீட்டுக்கு வீடு லூட்டி’ காமெடி புரோகிராம் செய்தது, குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை என்னைக் கொண்டு சேர்த்தது. அப்படியே பிக்-அப் ஆக, வங்கியில வேலை பார்த்துட்டே இன்னொரு பக்கம் நடிச்சுட்டு இருந்தேன். பணி ஓய்வுக்கு பிறகு, முழு நேர நடிகன் ஆயாச்சு. அப்போ எல்லாம் சீரியல், சினிமாவுல வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். இப்போ நடிகர்கள், டெக்னீஷியன்கள்னு புதியவர்கள் வந்துட்டே இருக்குறது சந்தோஷமா இருக்கு''னு பக்கத்து வீட்டுக்காரர்போல பேசின சந்தானம்,

''கிட்டத்தட்ட 4,000 எபிசோட்கள் நடிச்சாச்சு. 'திருமதி செல்வம்’ சீரியலுக்காக போன வருஷம் சின்னத்திரையின் 'சிறந்த மாமனார்’ அவார்ட் வாங்கினப்போ, திருப்தியா இருந்தது. என் கேரியர்ல 'திருமதி செல்வம்’ மைல் கல். அவ்ளோ பாராட்டுகள் குவியுது. 94 வயதான என் அம்மாவே, 'இந்த ஸீன்ல ரொம்ப உருக்கமா நடிச்சுருக்கடா!’னு பாராட்டுறது, ஆசீர்வாதம்!''னு புன்னகையோட முடிச்சார் சந்தானம்!

நடிப்பில் வேர்விட்ட 'விழுது’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism