Published:Updated:

"ரியோவுக்காகத்தான் பண்ணேன்... ஆனாலும், அழுதுட்டேன்!" - ஸ்ருதி ரியோ

"ரியோவுக்காகத்தான் பண்ணேன்... ஆனாலும், அழுதுட்டேன்!" - ஸ்ருதி ரியோ

எதிர்காலத்தில் ஷார்ட் ஃபிலிம் டைரக்ட் பண்ணனும். நல்ல டைரக்டரிடம் அசிஸ்டென்டா வொர்க் பண்ணி டைரக்‌ஷன் கத்துக்கணும். இது மட்டும்தான் என் பிளான்

"ரியோவுக்காகத்தான் பண்ணேன்... ஆனாலும், அழுதுட்டேன்!" - ஸ்ருதி ரியோ

எதிர்காலத்தில் ஷார்ட் ஃபிலிம் டைரக்ட் பண்ணனும். நல்ல டைரக்டரிடம் அசிஸ்டென்டா வொர்க் பண்ணி டைரக்‌ஷன் கத்துக்கணும். இது மட்டும்தான் என் பிளான்

Published:Updated:
"ரியோவுக்காகத்தான் பண்ணேன்... ஆனாலும், அழுதுட்டேன்!" - ஸ்ருதி ரியோ

லருக்கும் பிடித்த வீஜேக்களில் ஒருவர், ரியோ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்துக்கொண்டிருப்பவர், விஜய் டிவியின் இரண்டு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குகிறார். ரியோவும் அவர் மனைவி ஸ்ருதியும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளனர். விளம்பரத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதியிடம் பேசினோம்.

``இதுதான் நாங்க நடிக்கும் முதல் விளம்பரம். ரியோ நடிச்சதால்தான் அந்த விளம்பரத்தில் நானும் நடிக்க சம்மதிச்சேன். அந்த கான்செப்ட் எங்களுக்குப் பிடிச்சிருந்ததால் ஓகே சொன்னோம். எனக்கு ஸ்க்ரீனுக்கு முன்னாடி வேலை பார்க்கிறதில் விருப்பம் இல்லை. ஸ்க்ரீனுக்குப் பின்னாடி வேலை பார்க்கிறதில்தான் ஆர்வமா இருக்கேன். அதனால்தான், ஸ்க்ரீனுக்கு முன்னாடி அமைந்த வாய்ப்புகள் எல்லாத்தையும் தவிர்த்தேன்'' என்றவர், பர்சனல் விஷயங்கள் பக்கம் அழைத்துச் சென்றார்.

``காதலிக்கும்போது எப்படி இருந்தோமோ அப்படித்தான் இப்பவும் இருக்கோம். நாங்க ரெண்டு பேரும் குடும்பப் பொறுப்பு விஷயத்தில் ரொம்பவே வீக். அதைச் சரிசெய்ய என்ன வழின்னு தெரியாமல் முழுச்சுட்டிருக்கோம். ரியோவோ, நானோ, பயங்கர மூட் ஆஃப்ல இருக்கிறதா தோணுச்சுன்னா, எங்கேயாவது லாங் டிரைவுக்குக் கிளம்பிருவோம். ரெண்டு பேருக்குமே டிராவலிங்னா அவ்ளோ பிடிக்கும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, ரியோவின் தாத்தா ஊருக்குப் போயிருந்தோம். அந்த ஊர் பெயர் குன்றி. மலை மேலேதான் ஊரே இருக்கும். அந்த இடம் ரொம்ப அழகா இருந்துச்சு. காடு, மலை என டிராவல் பண்ற சுகமே தனி. எனக்கு நான்வெஜ் சமைக்கத் தெரியாது. ரியோவுக்காக முதன்முதலா சமைக்கும்போது சமைக்க கஷ்டப்பட்டு அழுதுட்டேன். அவனுக்கு என் சாப்பாடு ரொம்பப் பிடிக்கும். நான் வைக்கும் சிக்கன் கிரேவிக்கு ரியோ அடிமை. என் சமையலை ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சாப்பிட்டு பாராட்டுவாங்க'' என்ற ஸ்ருதி, தன் கேரியர் பக்கம் கூட்டிச் செல்கிறார்.

``ரியோ மீடியா ஃபீல்டில் இருக்கிறதால் எனக்கு எது செட்டாகும்னு அவனுக்குத் தெரியும். நான் காலேஜ் முடிச்சுட்டு மீடியாவில் ஆஃப் ஸ்க்ரீனில் வேலை தேடி நிறைய இடங்களுக்குப் போயிருக்கேன். இப்போ, `இங்கே டிரை பண்ணு. உனக்குச் சரியா இருக்கும்'னு ரியோ வழிநடத்தறான். என்னாலும் ஈஸியா முடிவை எடுக்க முடியுது. ஆரம்பத்தில், ரியோவோடு சேர்த்துவெச்சுப் பார்க்கிறவங்க, என்னையும் ஆன்-ஸ்க்ரீனில் கூப்பிட்டாங்க.  நான் நடிக்க மாட்டேங்கிறதில் உறுதியா இருந்தேன். எனக்கு அது செட் ஆகாது. ரியோ நடிக்கிறது அவனுடைய கேரியர். என்னுடைய கேரியர் வேற.

ஆரம்பத்தில், என் டிரஸ்ஸிங்கில் அக்கறை எடுத்துக்கிட்டது கிடையாது. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஜீன்ஸ் பேன்டும், சாதாரண டி-சர்ட்டும்தான் போட்டுருப்பேன். இப்போ, டிரஸ்ஸிங் சென்ஸில் கவனமாக இருக்கேன். இப்போ லாங் ஸ்கர்ட் மேலே ஒரு கிரேஸ் இருக்கு. ரியோ எனக்கு டிரடிஷனல்தான் செலக்ட் பண்ணுவான். அவனுடைய ஃபேவரைட், சல்வார். ரெண்டு பேருக்குமிடையில் செல்லச் சண்டைகளும் அதிகம் இருக்கும். அடிக்கடி ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்துப்போம். அது யூஸ்ஃபுல்லா இல்லைன்னாலும் மீனிங்ஃபுல்லா இருக்கும். எதிர்காலத்தில் ஷார்ட் ஃபிலிம் டைரக்ட் பண்ணனும். நல்ல டைரக்டரிடம் அசிஸ்டென்டா வொர்க் பண்ணி டைரக்‌ஷன் கத்துக்கணும். இது மட்டும்தான் என் பிளான்'' எனப் புன்னகைக்கிறார் ஸ்ருதி.