Published:Updated:

``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை!" ரிந்தியா

``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை!" ரிந்தியா

``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை!" ரிந்தியா

``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை!" ரிந்தியா

``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை!" ரிந்தியா

Published:Updated:
``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை!" ரிந்தியா

``நடிப்புல மட்டும்தான் எப்போதும் கவனம் செலுத்துவேன். என்னைப் பத்தி பெரிசா எந்த விமர்சனங்களும் வந்ததில்லை. வந்தாலும் அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன். அதனால்தான் பல வருஷமா ஃபீல்டில் இருக்கேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார் ரிந்தியா. `சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்துவருபவர்.

``தமிழ்ல சின்ன இடைவெளிக்குப் பிறகு நடிக்கிற மாதிரி தெரியுதே..." 

``தமிழ்ல ஹிட்டான `தெய்வமகள்' சீரியல்ல அண்ணியார் கேரக்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த சீரியலின் மலையாள ரீ-மேக்கான `பாக்கிய லஷ்மி'ல நான் காயத்ரி ரோல்ல நடிச்சேன். ஒரே நேரத்தில் அதிகபட்சம் ரெண்டு சீரியல்லதான் நடிப்பேன். அப்படி, மலையாளத்தில் நடிச்சுக்கிட்டே தமிழ்ல்ல `கல்யாணப்பரிசு' சீரியல்ல நடிச்சேன். இப்பவும் ஒரு மலையாள சீரியல்ல நடிச்சுகிட்டே, `சரவணன் மீனாட்சி' சீரியல்லயும் நடிக்கிறேன். அதனால ஆக்டிங்ல பிரேக்ங்கிற பேச்சுக்கே இடமில்லை."

``அடுத்தடுத்து நெகட்டிவ் ரோல்களிலேயே அதிகம் நடிப்பது ஏன்?"

`` `திருமதி செல்வம்' சீரியல்ல முதலில் பாசிட்டிவா தொடங்கின என் கேரக்டர் பிறகு, நெகட்டிவா மாறிடும். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நெகட்டிவ் ரோல்களே அதிகம் வந்துச்சு. ஆரம்பத்துல அழுகை, சென்டிமென்ட் ரோல்கள்தான் எனக்கு அதிகம் வந்துச்சு. அப்புறம் வில்லி ரோல். இப்போ 'சரவணன் மீனாட்சி'யிலயும் வில்லி ரோல்தான். ஆனாலும், மாந்திரிகம், வசியம், சூனியம் வைக்கிற என் ரோல் கொஞ்சம் புதுமையா இருக்கு. தொடர்ந்து ஒரேவிதமான கேரக்டர்ல நடிச்சுகிட்டே இருந்தால், சீக்கிரம் சலிப்பு வந்திடும். அதைவிட, நம்ம நடிப்புத் திறமை முழுமையா வெளிப்படுத்த முடியாமலும் போயிடும். அப்படி வந்த சில நெகட்டிவ் கேரக்டர் வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கேன். தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களே வர்றதால, எனக்கு வருத்தமிருக்கு. இதைப் பல இயக்குநர்கள்கிட்ட நேரடியாவே சொல்லியிருக்கேன்; ஆதங்கப்பட்டிருக்கேன். இப்போ நடிக்கிற மாடதி ரோல், எனக்குப் பிடிச்சிருக்கு."   

`` `சரவணன் மீனாட்சி' சீரியல், அதுல நடிக்கிறவங்களைப் பத்தி வர்ற மீம்ஸ், ட்ரோல் பார்ப்பீங்களா?"

``நெல்லு விளையிறப்போ, கூடவே களையும் வளரும். அதனால வருத்தப்படாம, அதை நீக்கிட்டு போயிட்டே இருக்கணும். அப்படித்தான் இந்த விஷயத்தையும் கடந்து போகணும். எந்த ஒரு விஷயமும் மக்களோட அதிக கவனத்தை ஈர்க்கிறபோது, அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும். `சரவணன் மீனாட்சி'யில நடிக்கிற ரக்‌ஷிதாவை சோஷியல் மீடியாவுல அதிகம் விமர்சனம் செய்வாங்க. அவங்க நடிப்புக்குக் கிடைச்ச வெற்றினுதான் நான் பார்ப்பேன். இதையெல்லாம் தாண்டியும், அவங்க மூணு சீசன் வரைக்கும் போல்டா நடிச்சுகிட்டு இருக்கிறதே பெரிய விஷயம். இதை ரக்‌ஷிதாகிட்ட பலமுறை நேர்லயே சொல்லிப் பாராட்டியிருக்கேன். ஆனானப்பட்ட ரஜினிகாந்த் சாரையே பெரிசா கலாய்ச்சு விமர்சனம் பண்றாங்க. நாமெல்லாம் இதுக்காகக் கவலைப்பட்டா வளரவே முடியாது. வேலையே இல்லாத வெட்டிப் பசங்க சிலர் பண்ற இந்த மாதிரியான செயல்பாடுகளைப் பெரிசா கண்டுக்கக் கூடாது. நம்ம வேலையில நாம முழு மனதோடு கவனம் செலுத்தினாலே போதும். என்னைப் பத்தி மீம்ஸ் போட்டிருக்காங்களானு தெரியலை. அப்படிச் செஞ்சாலும் கவலைப்படமாட்டேன்."

``நீண்ட காலம் இந்த ஃபீல்டுல இருக்கீங்க.. இந்தத் துறையில் மாற்றம் வந்திருக்கா?"

``தமிழ், மலையாளத்தில் நிறைய சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். ஆக்டிங் பயணத்தில் நீண்ட கால அனுபவம் எனக்கிருக்கு. முன்பு இத்தனை சேனல்களும் சீரியல்களும் இல்லை. அதனால நிதானமாக ஷூட்டிங் நடக்கும். அப்போவெல்லாம் ஒரு சீரியல் நடிப்பே, பல வருஷத்துக்குப் பேசப்படும். இன்னிக்கு அது கொஞ்சம் மிஸ்ஸாகிறதா நினைக்கிறேன். மத்தபடி டெக்னிக்கலா நிறைய வளர்ச்சி வந்திருக்கு. சீக்கிரமே ஷூட்டிங் முடிக்க முடியுது." 

``தமிழ் மற்றும் மலையாள சீரியல் ஆக்டிங்ல நீங்க உணரும் வேறுபாடுகள் பற்றி..."

``கதைக்கரு என்னவோ ஒண்ணுதான். ஆனா, அது எடுக்கப்படும் விதத்தில்தான் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். தமிழ்ல கதை விறுவிறுப்பா நகரும். கதாபாத்திரங்கள்கூட ரொம்ப கலர்ஃபுல்லா அதே நேரம் காமெடி, ரொமான்ஸ்னு, மெச்சூரிட்டியான முடிவுகள் நிறைய இருக்கும். மலையாள சினிமா மாதிரியே, சீரியல்களிலும் யதார்த்தமான நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. எந்த மொழியா இருந்தாலும், அவங்கவங்க கலாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் எடுப்பாங்க." 

``ஒருசில சீரியல்களோடு, பல ஃபேமஸான ஆர்டிஸ்டுகளும்கூட ஃபீல்ட் அவுட்டாகிவிடுறாங்களே..."

``பத்து வருஷத்துக்கு முன்பெல்லாம், இப்போ மாதிரி அதிக போட்டியெல்லாம் இல்லை. இன்னிக்கு, திறமையானவங்க பலரும் ஃபீல்ட் அவுட் ஆகிடுறாங்க. அது கஷ்டம்தான். இப்போ நிறைய புது வரவுகள் வர்றாங்க. அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் அவங்க நடிப்பை நல்லா கத்துக்கணும். சீக்கிரமே புகழ்பெறணும்னு நினைக்கக் கூடாது என்பது என் ஆலோசனை. இப்போவரை மற்ற மொழி படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனிச்சுகிட்டு இருப்பேன். அதன்மூலம் என் நடிப்புத் திறனை மேம்படுத்திக்கிறேன். மொழிப் பிரச்னையால, ஏற்கெனவே ரெண்டு இந்தி சீரியல் வாய்ப்புகளை இழந்துட்டேன். இப்போ ஓர் இந்தி சீரியல்ல நடிக்கலாம்னு இருக்கேன்."