Published:Updated:

’’ஜார்ஜுக்கு ஹல்க்; ஜெயசந்திரனுக்கு எம்.ஜி.ஆர்..!’’ - அத்தியாயம் 19

’’ஜார்ஜுக்கு ஹல்க்; ஜெயசந்திரனுக்கு எம்.ஜி.ஆர்..!’’ - அத்தியாயம் 19

`பாட்ஷா’ படத்துல ரஜினிக்கு பதில் எம்.ஜி.ஆர் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்னு பண்ணியிருந்தாங்க.

’’ஜார்ஜுக்கு ஹல்க்; ஜெயசந்திரனுக்கு எம்.ஜி.ஆர்..!’’ - அத்தியாயம் 19

`பாட்ஷா’ படத்துல ரஜினிக்கு பதில் எம்.ஜி.ஆர் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்னு பண்ணியிருந்தாங்க.

Published:Updated:
’’ஜார்ஜுக்கு ஹல்க்; ஜெயசந்திரனுக்கு எம்.ஜி.ஆர்..!’’ - அத்தியாயம் 19

`கலக்கப்போவது யாரு’ சீசன் 5 போட்டியாளர் முல்லை - கோதண்டம் மாதிரி ஜார்ஜ் - ஜெயசந்திரன் ஒண்ணாவே இருப்பாங்க. அதனால இந்த அத்தியாயத்தில் அவங்க ரெண்டு பேரைப் பற்றியும் பேசிடலாம்னு நினைக்கிறேன்.

ஜார்ஜ் எனக்கு காலேஜ் சீனியர். சீனியர்னா, எனக்கு ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே அவர் காலேஜ் முடிச்சுட்டார். ஜார்ஜும் ஜெயசந்திரனும் அப்போதுல இருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து நிறைய கார்ப்பரேட் ஷோஸ் பண்ணியிருக்காங்க. நான் காலேஜ் முடிச்சுட்டு `கலக்கப்போவது யாரு’ முதல் இரண்டு சீசனில் உதவி இயக்குநராகவும், அடுத்த இரண்டு சீசன்களுக்கு இயக்குநராகவும் இருந்ததுக்கு அப்பறம் `கிங்ஸ் ஆஃப் காமெடி’னு ஒரு நிகழ்ச்சி ஸ்டார்ட் பண்ணினோம். அந்த நிகழ்ச்சியில கலந்துக்க ரெண்டு பேரும் வந்தாங்க. இந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன்தான் ஆங்கரா இருந்தார். சின்னி ஜெயந்தும் கு.ஞானசம்பந்தமும் நடுவர்களா இருந்தாங்க. 

ஜார்ஜும் ஜெயசந்திரனும் சேர்ந்து பண்ணுன முதல் எபிசோடே செம ஹிட். `பாட்ஷா’ படத்துல ரஜினிக்கு பதில் எம்.ஜி.ஆர் நடிச்சிருந்தா  எப்படி இருக்கும்னு பண்ணியிருந்தாங்க. எம்.ஜி.ஆர் மாதிரி ஜெயசந்திரன் அப்படியே பண்ணுவார். அந்த ஸ்கிரிப்ட்ல அவங்க என்னென்ன பன்ச்கள் பேசினாங்க என்பதுகூட இன்னும் ஞாபகம் இருக்கு. எம்.ஜி.ஆர்.கிட்ட, `சார் நீங்க இந்த பம்ப்பைப் பிடிங்கி வில்லனை அடிக்கணும்’னு சொன்னதும், `நான் பம்ப்பால அடிக்கிறவன் கிடையாது; பண்பால அடிக்கிறவன். அதுமட்டுமல்லாம இந்த ஏரியாவுல இருக்குற தாய்க்குலங்கள் எல்லாரும் இந்த பம்ப்லதான் தண்ணிப் பிடிக்கிறாங்க. இதை நான் உடைச்சுட்டா அவங்க தண்ணிக்கு கஷ்டப்படுவாங்க. அதுனால இந்தக் காரியத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்’னு சொல்லுவார். இவங்க பண்ணின இந்த எபிசோடுக்கு செட்டுலேயும் செம ரெஸ்பான்ஸ்; அது டெலிகாஸ்ட் ஆனதுக்கு அப்புறம் ஆடியன்ஸ்கிட்டேயும் செம ரெஸ்பான்ஸ் இருந்தது. இவங்களோட கிரியேட்டிவிட்டி லெவலே ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. இந்த எபிசோடில் இருந்துதான் ஜார்ஜ் - ஜெயசந்திரனோடு நான் ட்ராவல் ஆனேன். இவங்க ரெண்டு பேரும் சீனியரா இருந்தாலும் அப்போ இருந்த ஜூனியர்ஸ்கிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. நிறைய சீனியர்ஸ் ஜூனியர்ஸ்கூட சேர்ந்து ஷோ பண்றதுக்குத் தயக்கம் காட்டிட்டு இன்னும் வெளியில  தெரியாமலே இருக்காங்க. அந்த வகையில் ஜார்ஜையும் ஜெயசந்திரனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

`கிங்ஸ் ஆஃப் காமெடி’ ஒரு சின்ன ஷோவாகத்தான் பண்ணுனோம். அதனால அது சீக்கிரம் முடிஞ்சு போச்சு. `என்னடா நாம கலந்துகிட்ட ஷோ சீக்கிரமே முடிஞ்சுப்போச்சு’னு ரெண்டு பேரும் கொஞ்சம் ஃபீல் பண்ணுனாங்க. அதனால அவங்க ரெண்டு பேரையும் `சிரிச்சா போச்சு’லேயும் கலந்துக்க வெச்சோம். இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் எனக்குப் பிடிச்சதே, `எனக்கு இந்த கேரக்டர் வேணும்; அந்த கேரக்டர் வேணும்’னு கேட்காததுதான். கொடுத்த வேலையைச் சரியாப் பண்ணுவாங்க. இப்போ இருக்கிற பசங்க ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கியதும், கடகடனு படிக்க ஆரம்பிச்சுடுவாங்க. `பரவாயில்லையே... உடனே வாங்கிப் படிக்கிறாங்களே’னு சந்தோஷப்பட்டா, `சார் எனக்கு ரெண்டு டயலாக்தான் இருக்கு; எனக்கு நாலு டயலாக்தான் இருக்கு’னு வந்து நிப்பாங்க. ஆனால், ஜார்ஜ் அப்படிக்கிடையாது. ரெண்டு டயலாக்கா இருந்தாலும் ஒரு நாள் முழுக்க இருந்து அந்த எபிசோடை முடிச்சுக் கொடுத்துட்டுப் போவார். தான் நடிக்காத எபிசோடா இருந்தாலும் ஜெயசந்திரன் வந்து ஹெல்ப் பண்ணுவார். 

`சிரிச்சா போச்சு’ல நிறைய மறக்க முடியாத எபிசோடுகளை ரெண்டு பேரும் பண்ணியிருக்காங்க. ஜார்ஜோட பாடி லாங்வேஜுக்கு ஏற்ற மாதிரி கெட்டப் போடுவார். ஹல்க், பாடகி உஷா உதுப், `தில்லானா மோகனாம்பாள்’ல மோகனாம்பாள் அம்மா கெட்டப்னு ஜார்ஜ் போட்ட சில கெட்டப் செம ரீச்சாச்சு. அதே மாதிரி மீனா, பாடகி நித்யஸ்ரீ, எம்.ஜி.ஆர், சிவாஜினு ஜெயசந்திரன் எந்த கெட்டப் போட்டாலும் பக்காவா செட்டாகும்; வாய்ஸும் பிரமாதமா இருக்கும். இவங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா சில எபிசோடுகள் ஹிட்டானாலும், `என்னமா இப்படிப் பண்றீங்களேமா’ எபிசோடு ரெண்டு பேருக்குமே செம ரீச்சாச்சு. அந்த ஸ்கிரிப்ட்ல ஜார்ஜ், நாஞ்சில் விஜயனுக்கு அம்மாவாகவும், ஜெயசந்திரன், தங்கதுரைக்கு அப்பாவாகவும் நடிச்சிருப்பாங்க. 

`அது இது எது’ முதல் சீசன் முடிஞ்சதுக்கு அப்பறம் ஒரு சின்ன ப்ரேக் விட்டோம். அந்த ப்ரேக்ல இருந்துதான் ஜார்ஜும் சினிமாவுக்கு போயிட்டார்; ஜெயசந்திரனும் சன் டிவிக்குப் போயிட்டார். ஜார்ஜ் முதல்ல `கடல்’ படத்தில் நடிச்சார். அப்பறம் `மாரி’, `விக்ரம் வேதா’, `தமிழ்ப்படம் -2’, `செக்கச் சிவந்த வானம்’னு தொடர்ந்து படம் நடிச்சுட்டு இருக்கார். அதுமட்டுமல்லாம ஜார்ஜுக்கு சமூக விஷயங்களிலும் அதிக அக்கறை இருக்கும். சென்னையில வெள்ளம் வந்தப்போ களத்தில் நிறைய வேலைகள் பார்த்தார். அவருக்கு இன்னும் அதிக பட வாய்ப்புகள் வரணும். 

ஜெயசந்திரன் சன் டிவிக்குப் போய் `காமெடி ஜங்ஷன்’, `கிராமத்தில் ஒரு நாள்’னு சில ஷோக்கள் பண்ணிட்டு இருக்கார். `கிராமத்தில் ஒரு நாள்’ ஷோல நிறைய பெண்களுக்கு நடுவில் நின்னு ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கிறதை ஒரு நாள் பார்த்தேன். பெண்கள்கிட்ட பேசவே கூச்சப்பட்டவர்; இப்போ பெண்களை வெச்சு ஒரு ஷோவே பண்ணிட்டு இருக்கார். அவருக்கும் சினிமாவில் நடிக்கணும்கிறதுதான் ஆசை. ஜெயசந்திரனுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கணும். 

இரண்டு பேருக்கும் என் வாழ்த்துகள்.