Published:Updated:

``நான் இப்போ நவீனுடன் இருக்கேன்னா அதுக்கு திவ்யாதான் காரணம்!" - கிருஷ்ணகுமாரி

``நான் இப்போ நவீனுடன் இருக்கேன்னா அதுக்கு திவ்யாதான் காரணம்!" - கிருஷ்ணகுமாரி

``நான் இப்போ நவீனுடன் இருக்கேன்னா அதுக்கு திவ்யாதான் காரணம்!" - கிருஷ்ணகுமாரி

``நான் இப்போ நவீனுடன் இருக்கேன்னா அதுக்கு திவ்யாதான் காரணம்!" - கிருஷ்ணகுமாரி

``நான் இப்போ நவீனுடன் இருக்கேன்னா அதுக்கு திவ்யாதான் காரணம்!" - கிருஷ்ணகுமாரி

Published:Updated:
``நான் இப்போ நவீனுடன் இருக்கேன்னா அதுக்கு திவ்யாதான் காரணம்!" - கிருஷ்ணகுமாரி

மிமிக்ரி கலைஞர் நவீன் - திவ்யலட்சுமி பிரச்னை, பூதாகரமாக வெடித்து வருகிறது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறிவருகின்றனர். இந்நிலையில், `நடந்தவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார்' என இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசினார் கிருஷ்ணகுமாரி.

``நான் பிறந்தது மலேசியா. நான் பிரைடல் மேக்கப் பண்ணிட்டிருந்தேன். என் அப்பா, லாரி டிரைவர். அம்மா, குடும்பத் தலைவி. என் அண்ணனுக்குத் திருமணமாகி தனியா வசிக்கிறாங்க. நானும் அக்காவும் சம்பாதிச்சுதான் குடும்பத்தை நடத்திட்டிருந்தோம். டான்ஸ் மாஸ்டர் சாண்டி, எனக்கு நண்பர். அவருடைய நிகழ்ச்சியைப் பார்க்கப் போகும்போதுதான், நவீனின் அறிமுகம் கிடைச்சது. நவீனின் மிமிக்ரிக்கு நான் ஃபேன். ஃப்ரெண்ட்லியா எங்களுக்குள்ள உரையாடல் இருந்துச்சு. என் அக்காவின் கல்யாணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் அழைச்சிருந்தேன். அப்போ, நவீனும் அவர் ஃபேமிலியுடன் மலேசியாவுக்கு வந்தார். அப்போதான் தெரிஞ்சது நாங்க சொந்தக்காரங்கன்னு. அப்புறம், ரெண்டு ஃபேமிலிக்கும் நெருக்கம் அதிகமாச்சு. அவருக்குத் திருமணமாகி விவாகரத்து கேஸ் நடக்கிறது வரை எல்லா விஷயமும் தெரியும். நான் அவரை காதலிக்கணும்னோ, கல்யாணம் பண்ணிக்கணும்னோ கொஞ்சமும் ஆசைப்படலை. பொதுவாக, நடிகர்கள் மீது எப்படி கிரஷ் இருக்குமோ, அப்படித்தான் நவீன் மீதும் இருந்துச்சு. அவர் சொந்தக்காரர்னு தெரிஞ்சதும், அந்த கிரஷ்கூட உடைஞ்சு போச்சு. ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம்'' எனத் தொடர்கிறார் கிருஷ்ணகுமாரி.

``என் அக்கா ஹனிமூனுக்காக தமிழ்நாடு வந்தப்போ, நானும் வந்தேன். என்னை நவீன் வீட்டில் விட்டுட்டு அவங்க ஹனிமூன் போனாங்க. அங்கே இருந்த சமயம்தான் சாண்டி மாஸ்டருக்குத் கல்யாணம் நடந்துச்சு. அந்தத் திருமணத்துக்கு நவீன் ஃபேமிலியுடன் நானும் போனேன். அங்கே எடுத்த போட்டோவை என் ஃபேஸ்புக் பேஜ்ல அப்லோடு பண்ணினேன். உடனே, திவ்யா எனக்கு மெசேஜ் பண்ணாங்க. `நவீன் மேலே உனக்கு கிரஷ் இருக்கா? அவன் குரல் உனக்குப் பிடிக்குமா?' என்றெல்லாம் கேட்டாங்க. நானும் பதிலுக்கு ரிப்ளை பண்ணினேன். காலையில் எழுந்து பார்த்தால் நவீனையும் என்னையும் சேர்த்துவெச்சு தப்பான பொண்ணுங்குற மாதிரி சித்திரிச்சுப் போட்டிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு என் சொந்தக்காரங்க என்னைக் கேவலமாப் பேசினாங்க. என் வாழ்க்கையில் ரொம்பவே வலியை அனுபவிச்சேன். நவீன் வீட்டைச் சேர்ந்தவங்க என் அம்மா, அப்பாகிட்ட பேசி, `நவீனால்தானே உங்க பொண்ணுக்குக் கெட்ட பெயர். அதனால், கிருஷ்ணாவாவை நவீனே திருமணம் செய்துப்பான்'னு சொன்னாங்க. எனக்கு நவீன் மேல காதலே இல்லை. நவீனும் என்கிட்ட வந்து பேசினார். ஆனால், ரெண்டு பேருக்கும் வேற வழியே இல்லைங்கிற நிலையில் திருமணம் செய்துக்க முடிவுக்கு வந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தனை நாளா நவீனுடன் இருக்கேன். டப்ஸ்மாஷ் பண்ணும்போது, ஒரு ஃபன் வேணும்ன்னு ரொமென்ஸ் பண்றோம். நேரில் தவறான கண்ணோட்டத்தில் நவீன் என்னைப் பார்த்ததே இல்லை. இப்போ நவீனுடன் இருக்கிறேன்னா, அதுக்கு திவ்யாதான் காரணம். ஒரு வகையில் திவ்யாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்த மாதிரி நல்ல மனிதரை என் வாழ்க்கையில் சந்திச்சது என் பாக்கியம். எவ்வளவு பிரச்னை வந்தாலும், நவீனுடன்தான் இருப்பேன். நவீனையே கல்யாணம் செஞ்சுப்பேன்'' என்றார். 

இது தொடர்பாக, திவ்யலட்சுமி ஏதாவது தெரிவிக்க விரும்பினால், அவர் தரப்பு கருத்தையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism