Published:Updated:

``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்!" - `அழகு' ஸ்ருதி

``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்!" - `அழகு' ஸ்ருதி

`மாண்புமிகு மாணவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது தொடங்கி, தற்போது நடித்துகொண்டிருக்கும் சீரியல், பெர்ஷனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், `அழகு' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி.

``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்!" - `அழகு' ஸ்ருதி

`மாண்புமிகு மாணவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது தொடங்கி, தற்போது நடித்துகொண்டிருக்கும் சீரியல், பெர்ஷனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், `அழகு' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி.

Published:Updated:
``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்!" - `அழகு' ஸ்ருதி

ன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் `அழகு' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார், நடிகை ரேவதி. அவருக்கு மருமகளாக நடிக்கிறார், ஸ்ருதி. `தென்றல்' சீரியல் மூலமாக துளசி என்ற பெயரில் பிரபலமானவர். தற்போது சுதாவாகப் பலரின் மனதிலும் நெகட்டிவ் கதாபாத்திரமாகப் பதிந்திருக்கிறார். அவரிடம் பேசியபோது,

`` `தென்றல்' சீரியலில் நடித்தவர்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கிறீர்களா?"

``ஆமாம். அந்த டீமை மறக்க முடியுமா?. என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்த சீரியல் இது. இந்த சீரியலின் இயக்குநர் குமரன் சாருடைய `நாயகி' சீரியல் இப்போ போயிட்டு இருக்கு. ஷூட்டிங் எங்கே நடந்தாலும், அங்கே போய் டீமை சந்திச்சி ஒரு ஹாய் சொல்லிட்டுத்தான் வருவேன். `தென்றல்' சீரியல் வந்தப்போ, இப்போ இருக்கிற மாதிரி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல ஆக்டிவாக இல்லாமல் இருந்தோம். வாட்ஸ்அப் குரூப்ல பேசுவதெல்லாம் கிடையாது. சமீபத்துலதான், எல்லோரும் ஒன்றாகப் பேச ஆரம்பிச்சிருக்கோம்." 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சினிமாவில் நீங்கள் நடித்த படங்கள் பற்றி?"

``நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் விஜய் அண்ணாகூட`மாண்புமிகு மாணவன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போ விஜய் அண்ணா அவ்வளவு பெரிய நடிகர் என்பதெல்லாம் தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவேன். நடிச்சிட்டு வருவேன், அவ்வளவுதான். அப்படிச் சில படங்கள் தமிழில் பண்ணியிருக்கேன். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் இரண்டு படங்கள் நடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலை."

``திருமணம் எப்போ?"

``இதுவரை என் வாழ்க்கையில் எதையும் பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது. அப்படிப் பிளான் பண்ணாலும், பெருசா நடந்தது இல்ல. கிட்டத்தட்ட வாழ்க்கைங்கிறதே, எது பண்ணக் கூடாதுனு நினைக்கிறோமோ, அதையே பண்ண வேண்டியிருக்கு. சினிமாவிலிருந்து நான் சீரியலுக்கு வந்ததும், அப்படித்தான். இன்னும் சொல்லப்போனா, ஒரு கட்டத்துக்கு மேல் நான் பிளான் பண்ணி ஒரு மிட்டாய்கூட வாங்கினது இல்ல. வடிவேல் சார் சொன்னது மாதிரி, என்னால `பிளான் பண்ணிப் பண்ணமுடியாது'. கல்யாண விஷயத்தை வீட்டுல பார்த்துப்பாங்க."  

``நீங்க வீட்டுக்கு ஒரே பொண்ணாமே... கூடப் பிறந்தவங்க யாரும் இல்லைங்கிற ஃபீலிங் இருக்கா?"

``கண்டிப்பாக இருக்கு! எங்க வீட்ல நானும், அம்மாவும்தான் இருக்கோம். என்னைத் தாங்கிக்கிற மாதிரி, பத்திரமா பார்த்துக்கிற மாதிரி அண்ணனும், அக்காவும் இருந்திருக்கலாம்னு அடிக்கடி தோணும். வீடு நிறைய உறவுகளோடு இருக்கிறது ஒரு வரம்." 

``ஷூட்டிங் இல்லாத சமயங்களில்..?"

``கண்டிப்பா போரடிக்கும். வீட்ல ஓய்வா இருக்கும்போது சின்னச் சின்னதா எம்ப்ராய்டரி வொர்க்ஸ் பண்ணுவேன். அதைவிட இன்னும் சந்தோஷமான விஷயம், ஃப்ரீ டைம் கிடைக்கும்போது கேரளாவுக்குப் போய் நல்லா ஊர் சுத்திட்டு வருவேன்."

``நீங்க வாழ்க்கையில ஒரு முறையாவது பார்க்க நினைக்கும் நபர்?"

``வாழ்க்கையில நான் பார்க்கணும்னு நினைச்ச ஒரே ஆள், ஷாரூக் கான். அவருக்கு ஒருவாட்டி ஷேக் ஹேண்ட் கொடுக்கணும். என் பெரிய கனவே அதுதான். அவரைப் பார்த்தா கண்டிப்பாகப் பேச்சு வராது. ஒண்ணு, கண் கலங்கிடும். இல்லைனா, அப்படியே பிரமிச்சுப் போய் நின்னுடுவேன். மத்தபடி, தமிழ் நடிகர்களில், ரஜினி சாரைப் பார்த்துட்டேன். கமல், விஜய், அஜித் எல்லோரையும் பார்த்தாச்சு. வெயிட்டிங்கில் இருப்பது ஷாரூக் மட்டும்தான்!."

``நிறைய வீடியோ மீம்ஸ், `மியூசிக்கலி'யில கலக்கிட்டு இருக்கீங்களே?"

``ஆமாம். நேரம் கிடைக்கும்போது எனக்குப் பிடிச்ச வசனம், பாட்டுனு எதையாவது பாடுவேன், பேசுவேன். போன வாரம்கூட லஞ்ச் பிரேக்ல நானும், சகானாவும் சும்மா பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, `யாரடி நீ மோகினி' படத்தின் டயலாக்கை  பேசிப் பார்க்கலாம்னு தோணுச்சு. உடனே பேசி போஸ்ட் பண்ணிட்டோம். செம்ம லைக்ஸும் அள்ளிட்டோம்ல! ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவங்க பார்க்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு." 

`` `தென்றல்' சீரியலில் பாசிட்டிவ் ரோல், `அழகு' சீரியலில் நெகட்டிவ் மாதிரியான ரோல்... இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்?"

``எனக்கு சில நேரத்தில் கஷ்டப்படுத்துற மாதிரி நேரில் கேட்பாங்க அல்லது ஆன்லைன் கமென்ட்ஸ்ல திட்டியிருப்பாங்க. ஏன்னா, `அழகு' சீரியலில் இப்போ நெகட்டிவ் மாதிரியான ரோலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அதை முழுக்க நெகட்டிவ் கேரக்டர்னும் சொல்ல முடியாது. சுதா என்கிற கேரக்டர் தன் கணவர் இறந்த பிறகு, பிள்ளையின் பாதுகாப்புக்காக கணவரின் நண்பரைத் திருமணம் செய்துகொள்வார். அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய முறைப் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்துட்டதா எல்லோரும் திட்டுறாங்க. சுதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டவரின் அண்ணனை அந்த முறைப்பெண் திருமணம் செய்து கொள்கிறார். அதாவது, என் நாத்தனார் ஆகிறார். கதை இப்படிப் போகும். `இவளுக்கு ஊர்ல இருக்கிற ஆம்பிள்ளைங்கெல்லாம் வேணுமாம்'னு எல்லாம் கமென்ட்ல திட்டுறாங்க. அந்த கேரக்டர் எங்கேங்க அப்படிக் கேட்டுச்சு?! குழந்தையின் பாதுகாப்பு கருதிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுல என்ன தப்பு?!" 

``நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும்போது, என்ன தோணும்?" 

``மனசைப் புண்படுத்துற மாதிரியெல்லாம் எழுதுறாங்க. சீரியலைப் பார்த்து கெட்டுப்போறாங்கனு சொல்றாங்களே... இப்படிப் பார்த்து அதை ஏன் தனக்குள்ள கொண்டுபோறாங்கனு தெரியல. இதில் பெரும்பாலும் பெண்கள்தான் அவ்வளவு சென்சிட்டிவாகக் கொண்டு போறாங்க. ஆண்கள் அந்த அளவுக்கு இல்லை. சீரியலை சீரியலாக மட்டுமே பார்த்தால், இந்தப் பிரச்னை வராதுனு நினைக்கிறேன். அதனாலதான் அம்மாகிட்ட இதையெல்லாம் சொல்றதில்லை. நல்ல விஷயத்தை மட்டுமே சொல்வேன். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. என்ன பண்றதுனு தெரியல. அப்புறம் அப்படியே பழக ஆரம்பிச்சுட்டேன். ஆனால், இன்னும் நான் சந்தோஷப்படுறது என்னைப் பலர் `தென்றல்' சீரியல் துளசியாகத்தான் பார்க்கிறாங்க. அந்த கேரக்டருக்கான பாராட்டு இன்னும் கிடைச்சுக்கிட்டேதான் இருக்கு." என்கிறார், ஸ்ருதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism