Published:Updated:

’சகல Vs ரகள’ முதல் ‘தாயா தாரமா’ வரை... ஒவ்வொரு கேம் ஷோ பற்றி ஒரு ரகசியம்!

’சகல Vs ரகள’ முதல் ‘தாயா தாரமா’ வரை... ஒவ்வொரு கேம் ஷோ பற்றி ஒரு ரகசியம்!

’சகல Vs ரகள’ முதல் ‘தாயா தாரமா’ வரை... ஒவ்வொரு கேம் ஷோ பற்றி ஒரு ரகசியம்!

’சகல Vs ரகள’ முதல் ‘தாயா தாரமா’ வரை... ஒவ்வொரு கேம் ஷோ பற்றி ஒரு ரகசியம்!

’சகல Vs ரகள’ முதல் ‘தாயா தாரமா’ வரை... ஒவ்வொரு கேம் ஷோ பற்றி ஒரு ரகசியம்!

Published:Updated:
’சகல Vs ரகள’ முதல் ‘தாயா தாரமா’ வரை... ஒவ்வொரு கேம் ஷோ பற்றி ஒரு ரகசியம்!

சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என இருந்த சின்னத்திரை, இப்போது கேம் ஷோ பக்கம் திரும்பியிருக்கிறது. தமிழில் இருக்கும் எல்லா சேனல்களிலும் ஏதாவது கேம் ஷோ நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி என்னென்ன ஷோக்கள் புதியதாக வருகிறது; ஏற்கெனவே இருக்கும் ஷோக்களில் என்ன ஸ்பெஷல் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

`சகல Vs ரகள’ - விஜய் டிவி:

`என்னம்மா இப்படி பண்றீங்களேமா... ஆத்தாடி என்ன உடம்பீ... அடடா அல்வாத்துண்டு இடுப் இடுப்... பிரியோ இப்போ நீ என்ன வேலை பாக்குறனு தெரியுமா பிரியோ...’ என ராமர் எது பேசுனாலும் ரகளைதான். சமீபத்திய வைரலாக இருக்கும் இவரை காமெடி ஷோக்களுக்கு மட்டும் பயன்படுத்தினால் எப்படி என, அவரை காமெடி கலாட்டா கேம் ஷோவுக்குத் தொகுப்பாளராக மாற்றியிருக்கிறார்கள். `சகல Vs ரகள’ என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இந்த ஷோவை ராமருடன் இணைந்து ஆண்ட்ரூஸும் தொகுத்து வழங்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே விஜய் டிவியின் `ரெடி ஸ்டெடி போ’, `வில்லா டு வில்லேஜ்’ எனச் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜூலை 22 முதல் ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி, `ரெடி ஸ்டெடி போ’ ஷோவின் அடுத்த வெர்ஷனாக இருக்கிறது. `ரெடி ஸ்டெடி போ’ ஷோவில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், இதில் ஆண்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர் - நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். 

`ஜீன்ஸ்’, `மிஸ்டர் அண்டு மிஸஸ் கில்லாடி’ - ஜீ தமிழ்:

`ஜீன்ஸ்’ நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனில் இருக்கிறது. இந்த சீசனை `வள்ளி’, `சூரிய வம்சம்’ போன்ற படங்களில் நடித்த நடிகை ப்ரியா ராமன் தொகுத்து வழங்குகிறார். முதல் இரண்டு சீசன்களை நடிகை ரோஜா தொகுத்து வழங்கினார். சென்ற மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புது சீசனில் இதுவரை, `ரோபோ’ சங்கர், நமீதா, `பவர்ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், `ஊர்வம்பு’ லட்சுமி, `டெல்லி’ கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

`மிஸ்டர் அண்டு மிஸஸ் கில்லாடி’ நிகழ்ச்சி தற்போது இரண்டாவது சீசனில் இருக்கிறது. தீபக் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஆனந்தி - அஜய்குமார், `சிங்கப்பூர்’ தீபன் - சுகன்யா, ராகவ் - ப்ரீத்தா, ஈஸ்வர் - ஜெயஸ்ரீ, காசி விஸ்வநாதன் - ஜெனிபர், சித்தார்த் - பிரியதர்ஷினி, சிவா - தனலட்சுமி, கமலேஷ் - சுபலட்சுமி, ரஹ்மான் - ஃபரினா, கார்த்திக் - ரதி எனப் பத்து ஜோடிகள் கலந்து கொண்டனர். இதுவரை எட்டு எபிசோடுகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது நான்கு ஜோடிகள் மட்டுமே நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர்.

`டிவைடட்’ - விஜய் டிவி:

டாக் ஷோவில் பயங்கர சீரியஸாகப் பேசிட்டிருந்த கோபிநாத்தின், காஸ்ட்டியூம்ஸ், ஹேர் ஸ்டைல் என அவரை மாற்றி கேம் ஷோவுக்கு ஆங்கராக மாற்றியிருக்கிறார்கள். `டிவைடட்’ எனப் பெயர் வைத்துள்ள இந்த ஷோவில், சம்பந்தமே இல்லாத மூணு பேர் ஒண்ணா சேர்ந்து இதை விளையாடுவார்கள். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மூணு பேரும் சேர்ந்து ஒத்துமையாக பதிலைச் சொல்ல வேண்டும். ஆனால், வின் பண்ணின பிறகு பரிசு தொகையைச் சரி சமமாப் பிரிச்சுக்கக் கூடாது. வின் பண்ணுனவங்க ஒத்துமையா பிரிச்சுக்கிறாங்களா என்பதே இந்த `டிவைடட்’ ஷோவின் கான்செப்ட். இந்த ஷோ வருகிற ஜூலை 21 முதல் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பயிருக்கிறார்கள். 

`நம்ம ஊரு கலரு’ - கலர்ஸ் தமிழ்:

புதியதாக ஆரம்பிக்கப்பட்ட `கலர்ஸ் தமிழ்’ சேனலில், நிறைய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை அடுத்தடுத்து ஆரம்பித்து வருகிறார்கள். தற்போது புது கேம் ஷோ ஒன்றையும் ஆரம்பிக்கவிருக்கிறார். `நம்ம ஊரு கலரு’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஷோ, முழுக்க முழுக்க ஜோடிகளுக்கானது. ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, பல ஜோடிகளை ஆடிஷன் செய்து, அதிலிருந்து 4 ஜோடிகளை தேர்வு செய்கிறார்கள். அந்த நான்கு ஜோடிகளை நிறைய கேம்கள் விளையாட வைத்து, அதில் ஒரு ஜோடியை வின்னராகத் தேர்வு செய்வார்கள். இப்படித் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்குச் சென்று ஷோ நடத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் முடிந்த ஜோடிகளே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இதில் போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்படும் கேம்கள் அனைத்தும், கணவன் - மனைவி புரிதலைப் பற்றியதாகத்தான் இருக்குமாம். 

`தாயா தாரமா’ - சன் டிவி:

சீரியல்களில்தான் மாமியார் - மருமகள் சண்டையை வைத்து கதை எழுதுகிறார்கள் என்றால், கேம் ஷோக்களிலும் மாமியார் - மருமகள் சண்டையை ஃபோகஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். `தாயா தாரமா’ என்கிற பெயரிலேயே இந்த ஷோவின் கன்ட்டென்ட் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நிகழ்ச்சியில் தனது தாய் மற்றும் தாரத்துடன் ஒரு ஆண் கலந்து கொள்ளவேண்டும். ஆணிடம் கேட்கப்படும் கேள்விக்குத் தாயும் தாரமும் அவர்களது பதிலை சொல்வார்கள். இதில் யார் சொல்லும் பதில் சரியானது என அந்த ஆண் கண்டுபிடித்து, அதை தனது பதிலாகச் சொல்ல வேண்டும். `இதுல என்ன சண்டை இருக்கப் போகுது’னு தான யோசிக்கிறீங்க; இருக்கு. சரியாச் சொல்ற எல்லா பதில்களுக்கும் பரிசுத் தொகை உண்டு. தாய் சொல்கிற பதிலை அந்த ஆண் தேர்ந்தெடுத்து, அது தப்பாகப் போனால் தாரத்துக்கு கோபம் வரும். தாரம் சொல்கிற பதில் தப்பாக இருந்து அதை அந்த ஆண் தேர்ந்தெடுத்தால், தாய்க்கு கோபம் வரும். இதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். தாய்க்கும் தாரத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அந்த ஆணின் நிலைமைதான் பரிதாபம். 

இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. முதல் எபிசோடை தொடங்கி வைக்க நடிகர் நகுல், தன் தாய் மற்றும் தாரத்தோடு வந்திருந்தார். `ஓ, அப்போ எல்லா எபிசோடிலும் நடிகர்கள்தாம் வருவாங்களா...’ என நினைக்காதீங்க. சாமானியர்களும் வருவாங்க; அப்போ அப்போ செலிபிரிட்டிகளும் வருவாங்க. இந்த நிகழ்ச்சியை அசார் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism