Published:Updated:

"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..?" - 'பொன்மகள் வந்தாள் ' ஆயிஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..?" - 'பொன்மகள் வந்தாள் ' ஆயிஷா
"டைரக்டருக்கும், எனக்கும் சண்டை. ஆனா, என்னை மட்டும் ஏன் நீக்கினீங்க..?" - 'பொன்மகள் வந்தாள் ' ஆயிஷா

"அவர் பயங்கரமா கத்த ஆரம்பிச்சுட்டார். எல்லோருமே உள்ளே வந்துட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமாப் போச்சு. கத்திட்டுப் போனதும் ரூமுக்குள்ளேயே பயங்கரமா அழுதேன்"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பொன்மகள் வந்தாள்' தொடர், 100 எபிசோடுகளைக் கடந்து மக்களிடம் வரவேற்புப் பெற்றுள்ளது. இந்தத் தொடரின் புதுமுக நாயகி, கேரளாவைச் சேர்ந்த ஆயிஷா. தற்போது, அந்த சீரியலிலிருந்து விலகியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

``என் சொந்த ஊர், கேரளாவில் உள்ள காசர்கோடு. இப்போ, கொஞ்சம் தமிழ்ப் பேச கத்துக்கிட்டேன். ஆனாலும், சில வார்த்தைகள் உச்சரிக்க கஷ்டமா இருக்கும். என்னுடைய மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்தேன். எனக்குப் பிடிச்ச கோர்ஸை செலக்ட் பண்ணிப் படிக்க டிரை பண்ணிட்டிருந்தப்போ, ஃப்ரெண்டு மூலமா விஜய் டிவியில் ஒளிபரப்பான `ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அதன்மூலம், `பொன்மகள் வந்தாள்' வாய்ப்பு கிடைச்சது. எனக்கு கேமரானாலே பயம். நடிப்புன்னா என்னன்னு தெரியாது. ஆனாலும், முயற்சி பண்ணுவோம்னு நடிக்க சம்மதிச்சேன். 

ஆரம்பத்தில் சுத்தமா நடிக்கத் தெரியலை. டைரக்டர் கத்துக்கொடுத்ததைக் கவனிச்சு நடிக்க ஆரம்பிச்சேன். இந்த சீரியல் மூலமா நிறைய சினிமா, விளம்பர வாய்ப்புகளும் வந்துச்சு. சீரியலில் நடிச்சுட்டிருக்கிறதால் அந்த வாய்ப்புகளைத் தவிர்த்தேன். இந்த சீரியலில் ஏற்கெனவே இரண்டு டைரக்டர்கள் மாறினாங்க. இப்போ, நம்பி ராஜா என்கிறவர் இயக்குகிறார். என்னுடன் நடிக்கும் மற்ற ஆர்ட்டிஸ்டுகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு மரியாதை கொடுக்கிறதில்லே. புதுமுகம்னு மரியாதை குறைவா நடத்தினார். அதையும் பொறுத்துக்கிட்டேன். ஒரு நாள், மணப்பெண் கோலத்தில் நடிக்கிற காட்சி. அதுக்காக, நிறைய அலங்காரம், மருதாணி வெச்சுக்கிறது என நேரம் எடுத்தது. `எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க. சீக்கிரம் வாம்மா'னு டைரக்டர் சொன்னார். `சரி சார் ஒரு மணி நேரத்தில் வந்துடுறேன்'னு சொன்னதும், `அவ்வளவு நேரம் கொடுக்க முடியாது'னு சொன்னார். `சரி சார், அரை மணி நேரத்தில் வந்துடுறேன்'னு சொல்லிட்டு ரூமில் ரெடி ஆகிட்டிருந்தேன்'' என்ற ஆயிஷா ஆதங்கத்துடன் தொடர்கிறார். 

``ரூம்ல டிரஸ் மாத்திட்டிருக்கும்போது டைரக்டர் கதவைத் தட்டிட்டே இருந்தார். `இன்னுமா ரெடியாகலை'னு கத்தினார். என் மேக்கப் அசிஸ்டென்ட், `இன்னும் 10 நிமிஷத்தில் வந்துடறதா சொல்றேன்'னு கதவைத் திறந்து டைரக்டர்கிட்ட பேசினாங்க. அவர் சத்தம் போட்டுக்கிட்டே உள்ளே வந்துட்டார். நான் பாதி கட்டின சேலையோடு திகைச்சு ஓரமா நின்னுட்டேன். அவர் பயங்கரமா கத்த ஆரம்பிச்சுட்டார். எல்லோருமே உள்ளே வந்துட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமாப் போச்சு. கத்திட்டுப் போனதும் ரூமுக்குள்ளேயே பயங்கரமா அழுதேன். பேசாமல் தூக்கு மாட்டித் தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்கிற அளவுக்குப் போயிட்டேன்'' என விசும்பலை அடக்கி தொடர்கிறார் ஆயிஷா.

``அப்புறம் புரொடியூசர் செட்டுக்கு வந்தார். அவர்கிட்ட எல்லா விஷயங்களையும் சொன்னேன். `இதெல்லாம் ஒரு பிரச்னையாம்மா?' என்கிற அளவுக்குத்தான் அவர் சமாதானம் பேசினார். மறுநாளே நான் கேஷூவலா செட்டில் என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஆனால், மத்தவங்க ஒரு மாதிரிதான் பழகினாங்க. இதெல்லாம் நடந்து ஒன்றரை மாசம் ஆகுது. தொடர்ந்து நடிச்சுக் கொடுத்துட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் `சேனலில் உங்களைப் பார்க்கணுமாம்'னு சொன்னதால் போய்ப் பார்த்தேன். `புரொடியூசர் தரப்பிலிருந்து நிறைய பிரஷர். அதனால், இந்த சீரியலில் ஹீரோயினை மாத்திட்டோம்'னு சொன்னாங்க. அதைக் கேட்டு அதிர்ச்சி. எந்தத் தப்பும் பண்ணாத என்னை ஏன் விலக்கினாங்கன்னு தெரியலை. என் நடிப்பு சரியில்லை. அதனால் விலக்கறோம்னு சொல்லியிருந்தாலும் ஏத்துப்பேன். அப்படியும் இல்லை. நல்லா நடிக்காமலா 100 எபிசோடு வரை டிராவல் பண்ண முடிஞ்சது. டைரக்டர், புரொடியூசர் எல்லோரும் பிளான் பண்ணி என்னை நீக்கிட்டாங்க. ஆனாலும், விஜய் டிவி தரப்பில் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு