Published:Updated:

'றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா... பின்னணி என்ன?

'றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா... பின்னணி என்ன?

'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரிலிருந்து வெளியேறியது குறித்துப் பேசியிருக்கிறார் வில்லியாக நடித்துக்கொண்டிருந்த வந்தனா.

Published:Updated:

'றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா... பின்னணி என்ன?

'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரிலிருந்து வெளியேறியது குறித்துப் பேசியிருக்கிறார் வில்லியாக நடித்துக்கொண்டிருந்த வந்தனா.

'றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா... பின்னணி என்ன?

'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரில் வில்லியாக வந்து அதகளம் செய்துகொண்டிருந்த வந்தனா, தொடரிலிருந்து வெளியேற, அந்த இடத்துக்கு வந்துள்ளார் நிஷா. சீரியல்களில், 'இவருக்குப் பதில் அவர், இவருக்குப் பின்னால் இவர்' எனப் பல கதைகள் கிளம்புவதுண்டு. சில நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தொடரின் ஷூட்டிங்ஸ்பாட் சூழல் பிடிக்காமல்கூட  தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர், தயாரிப்பு தரப்புடன் முரண்பட்டு விலகுகிறார்கள். சிலர், சேனல்களின் நிர்பந்தத்தால் வெளியேற்றப்படுகிறார்கள். சிறுசிறு கேரக்டர்களில் நிகழ்கிற ஆள் மாற்றங்கள் பெரும் விளைவுகளை உண்டாக்குவதில்லை. ஆனால், முக்கியமான கதாபாத்திரங்கள் மாறும்போது, சில நாள்களுக்காவது அதுபற்றி பேசப்படுகிறது. வந்தனா விஷயத்தில் நடந்தது என்ன?

அவரிடமே பேசினேன்.

'''கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல்ல என்னோட நெகட்டிவ் ரோல் நல்ல ரீச். அதைப் பார்த்துட்டு, 'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடருக்குக் கூப்பிட்டாங்க. சீரியல் நல்லாதான் போயிட்டிருந்தது. எந்த சீரியல்ல கமிட் ஆனாலும் ஆரம்பத்திலேயே என்னோட தேவைகளை கிளீயரா சொல்லிடுவேன். 'அவுட்டோர் ஷூட் போகமாட்டேன்ங்கிறதையும் சொல்லி, அதெல்லாம் சரிபட்டு வர்ற பட்சத்துல மட்டுமே சீரியல்ல கமிட் ஆகிட்டு வர்றேன். இந்த சீரியல் கமிட் ஆனப்போவும் எல்லாம் பேசினதுதான். ஆனா, சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே பேமென்ட், ஷூட்டிங் டைம் தொடர்பா எனக்கு சில சங்கடங்கள் நேர்ந்தன. அவை, தானாகவே சில நாள்கள்ல சரியாகும்னு நினைச்சேன். புரொடக்‌ஷன் சைடுல என் பிரச்னைகளைச் சொன்னேன். ஆனா, சங்கடங்கள் சரியாகுற மாதிரியே தெரியலை. குறைந்தபட்சம் என் நியாயமான கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாரா இல்லைங்கிறதை போகப்போக புரிஞ்சுக்கிட்டேன்.

ஷூட்டிங் நடக்குறதே மாசத்துல பாதி நாள்தான். அந்த உழைப்புக்கான ஊதியமும் சரியான நேரத்துக்குக் கிடைக்காமப்போனா, என்ன சொல்றது? சம்பளத்தைக் கேட்காம இருந்தா நடிச்சுக்கிட்டே இருக்கலாம் போல! கேட்டா, எரிச்சலாகி 'இவருக்குப் பதில் இவர்'னு அவங்களாகவே ஆளை மாத்தக்கூட செஞ்சிருப்பாங்க. அதனாலதான், முந்திக்கிட்டு நானே வெளியேறிட்டேன். அதாவது, வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுட்டேன்னு சொல்லலாம். அதுக்குப் பிறகும்கூட கன்வின்ஸ் பண்ணி தொடர்ந்து நடிக்கச் சொல்லி கேட்டாங்க. ரெண்டு மாதம் மூணு மாதம் கழிச்சுதான் சம்பளம்... அதிலும் பேமென்ட் பாக்கினு போனா எப்படிங்க தொடர்ந்து இந்த சீரியல்ல வொர்க் பண்ண முடியும்'' என்கிறார், வந்தனா.

'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரின் ஹீரோயின் சமீராதான், தொடரின் தயாரிப்பாளரும்கூட! 'பகல் நிலவு' தொடரில் நடித்த நிஜ காதல் ஜோடியான அன்வர் - சமீரா இருவரும் ஆளுக்கொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஆளுக்கொரு சீரியலைத் தயாரித்து வருகிற நிலையில், (வேறு வேறு சேனலில்) மேற்படி இரண்டு நிறுவனங்களின் மீதும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாகக் கிசுகிசுக்கிறது, சின்னத்திரை உலகம். அன்வர் தயாரிக்கும் 'பொன்மகள் வந்தாள்' தொடர் ஆரம்பித்த ஐந்தே மாதங்களில், இரண்டு இயக்குநர்கள் மாறிவிட்டார்கள். ஹீரோயினை மாற்றியிருக்கிறார்கள். வெளியேறிய ஹீரோயின், தான் உடை மாற்றிக்கொண்டிருந்த அறையில் இயக்குநர் அத்துமீறி நுழைந்ததாகத் தயாரிப்பு தரப்பில் புகார் சொன்னால், கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் கூறிச் சென்றுள்ளார்.

வந்தனா கூறிய கருத்துகள்குறித்து சமீராவிடம் கேட்டபோது, 'ஆமா, அவங்க இப்போ நடிக்கலை' என்றவர், 'பிறகு பேசுகிறேனே!' என்றார். மீண்டும் நாம் முயற்சித்தபோது, நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.