Published:Updated:

``அது என் பெர்சனல்... தலையிடாதீங்க ப்ளீஸ்!" `சன்டே கலாட்டா' ஸ்வேதா

``அது என் பெர்சனல்...  தலையிடாதீங்க ப்ளீஸ்!" `சன்டே கலாட்டா' ஸ்வேதா
``அது என் பெர்சனல்... தலையிடாதீங்க ப்ளீஸ்!" `சன்டே கலாட்டா' ஸ்வேதா

``அது என் பெர்சனல்... தலையிடாதீங்க ப்ளீஸ்!" `சன்டே கலாட்டா' ஸ்வேதா

சின்னத்திரையில் டான்ஸராக, நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், ஸ்வேதா. தற்போது, சன் டிவியின் `சன்டே கலாட்டா' நிகழ்ச்சியில் புது வரவாக, காமெடி ரோலில் நடித்துவருகிறார்.

``ஆஃப் ஸ்கிரீன்ல நான் ரொம்ப ஜாலியா இருப்பேன். ஷூட்டிங், ஈவன்ட்ஸூக்குப் போகிறப்போ என் டீம் ஆட்களோடு ஜாலியாப் பேசுவேன். நிறைய ஃபன் நடக்கும். `கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் `பழைய ஜோக்' தங்கதுரையிடமே மொக்க ஜோக் சொல்லி கலாய்ப்பேன். சமீபத்தில், சன் டிவியின் `ஸ்டார் வார்' நிகழ்ச்சி பண்ணும்போதும் அப்படித்தான் இருந்தேன். அந்த நேரத்தில், `சன்டே கலாட்டா' நிகழ்ச்சியிலிருந்து தேவதர்ஷினி மேம் விலகினதால், புது ஆர்டிஸ்ட் தேவைன்னு என்னை அணுகினாங்க. என் குளோஸ் ஃப்ரெண்டான, `கில்லி' ஜெனிஃபரும் அதில் நடிக்கிறதா சொன்னதும் டபுள் ஓகே சொல்லிட்டேன்.

`நீங்க காமெடி ரோலிலா நடிக்கறீங்க? இதனால், மற்ற வாய்ப்புகள் மிஸ் ஆகிடுமே'னு சிலர் சொன்னாங்க. நடிப்புத் துறைக்கு வந்தாச்சு. எந்த ரோலா இருந்தாலும் திறமையைக் காட்டினால்தானே வளர முடியும். இயல்பில் நான் சாஃப்ட் கேரக்டர். ஆனால், `அபூர்வ ராகங்கள்' சீரியலில் வில்லியா நடிச்சேன். நல்ல வாய்ப்புகள் வரும்போது அதைச் சவாலுடன் ஏற்பதில் உறுதியா இருப்பேன். அதனால், `சன்டே கலாட்டா' நிகழ்ச்சியில் நடிக்க சம்மதிச்சேன். இதுக்காக ரொம்பவே மெனக்கெட்டேன். என் நடிப்பில் முதல் எபிசோடு ஒளிபரப்பானதும் பலரும் பாராட்டினாங்க. சந்தோஷமா நடிக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசத்துக்கு மேலே ஆகிருச்சு. இந்த நிகழ்ச்சியின் ஹீரோவான மதுரை முத்து சார், இயல்பாவே பேசிட்டிருக்கும்போதே கவுன்ட்டர் கொடுக்கிறவர். அவருக்குப் பதில் கவுன்ட்டர் கொடுக்கிறதே பெரிய சவால். அது, ஃபன்னாகவும் இருக்கு. ஷூட்டிங் முடிஞ்சதும் ரெகுலரா ஒரு பானிபூரி கடையில் ஆஜராகிட்டுதான் கிளம்புவோம்" என உற்சாகமாகிறார் ஸ்வேதா.

திருமணம் குறித்துப் பேசும்போது, ``என் கல்யாணம் பற்றி ஒரு வருஷமாவே பலரும் கேட்டுட்டே இருக்காங்க. `நீங்க யாரையாச்சும் காதலிக்கிறீங்களா? அவர்தான் உங்க காதலரா? உங்களுக்கு என்கேஜ்மென்ட் ஆகிடுச்சாமே?'னு அவங்களா கற்பனை செய்துட்டு கேட்கிறாங்க. கல்யாணம், என் பர்சனல் விஷயம் என்றாலும், நிஜமான அக்கறையோடு கேட்கிறவங்களுக்குப் பொறுமையா பதில் சொல்வேன். அதுவே, ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துட்டு, எதையோ தெரிஞ்சுக்கிற ஆர்வத்தில் அடிக்கடி கேட்கும்போது, ரொம்பக் கோபம் வரும். ஒரு லிமிட்டுக்கு மேலே என் பர்சனல் விஷயத்தில் தலையிடாமல் இருக்கிறது நல்லது. மத்தவங்க பர்சனல் விஷயத்துல நுழைஞ்சு குளிர் காயறது பலருக்கும் வேடிக்கையாக இருக்கு. என்ன செய்யறது, அவங்க தரமே அவ்ளோதான்னு நினைச்சுப்பேன். கூடிய சீக்கிரமே என் கல்யாணம் பற்றி நானே சந்தோஷமா சொல்றேன் போதுமா ஃப்ரெண்ட்ஸ்?'' எனத் தன் மெல்லிய கோபத்தை வெளிப்படுத்தி  பின் தொடர்கிறார்.

``2009-ம் வருஷம் மீடியாவில் என்ட்ரி ஆனேன். காலம் வேகமா ஓடிகிட்டிருக்கு. டான்ஸர், நடிகை, ஆங்கர் எனப் பலவிதமா வொர்க் பண்ணிட்டேன். நடுவுல சில காலம், ஃபாரின்ல செட்டில் ஆகிட்டு மறுபடியும் வந்தேன். அப்போ ஜீ தமிழின் `டான்ஸ் ஜோடி டான்ஸ்' மூலம் பெரிய ரீ-என்ட்ரி கிடைச்சது. ஆக்டிவா நடிக்கவும் ஆரம்பிச்சேன். இப்போ, பிரைவேட் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடிகிட்டிருக்கேன். லைஃப் சந்தோஷமா இருக்கு" என்று புன்னகைக்கிறார் ஸ்வேதா.

அடுத்த கட்டுரைக்கு