Published:Updated:

`` `மியூசிக்கலி'ல் ஆக்டிவா இருக்கேன். என்ன பிளஸ் தெரியுமா?!’’ - `அழகு' சஹானா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` `மியூசிக்கலி'ல் ஆக்டிவா இருக்கேன். என்ன பிளஸ் தெரியுமா?!’’ - `அழகு' சஹானா
`` `மியூசிக்கலி'ல் ஆக்டிவா இருக்கேன். என்ன பிளஸ் தெரியுமா?!’’ - `அழகு' சஹானா

``சன் டி.வியில் `அழகு', விஜய் டி.வியில் `பகல் நிலவு' இந்த ரெண்டும் என் கரியர்ல முக்கியமான சீரியல்கள்!" என்கிறார், சஹானா. அவரிடம் பேசியதிலிருந்து...

ன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் `அழகு' சீரியலில் நடித்து வருகிறார், சஹானா. மாடலிங் மூலமாக நடிப்புத் துறைக்குள் வந்தவருக்கு நடிப்பு ஆசை தொற்றிக்கொள்ள, இப்போது முழுநேரமும் நடிப்பையே கையில் எடுத்துவிட்டார். அவரிடம் பேசினோம். 

```அரூபம்', `கொக்கிற குளம்', `இவளுக இம்சை தாங்க முடியல', `ஆறாம் அறிவு' போன்ற படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். என்னதான் ரொமான்டிக் ஹீரோயினாக நடிச்சாலும், ஹாரர் மூவிஸ் மேல எனக்கு எப்போவுமே ஆர்வம் உண்டு. வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கணும். மக்கள் மனதில் பதியணும். அப்படி எனக்குக் கிடைச்சது, பாலா சாரோட `தாரை தப்பட்டை' பட வாய்ப்பு. இந்தப் படத்தில் கிடைத்த அனுபவம் இன்னும் எனக்குக் கை கொடுக்குது. பாலா சாருக்குப் பிடிச்ச மாதிரியான சீன் வரலைனா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பார். நம்மிடம் இருக்கும் திறமையை நமக்கே தெரியாமல் வெளிக்கொண்டு வரும் டைரக்டர் அவர்!" என்று பூரிக்கும் சஹானாவின் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே மியூசிக் தெரியுமாம். அதைப் பற்றிக் கேட்டால், அவ்வளவு சந்தோஷத்துடன் பேசுகிறார்.

``ஒருவருக்கு எல்லாக் காலத்திலும், நேரத்திலும் கூடவே இருப்பது இசை மட்டும்தான். என்னைப் பொறுத்தவரை எந்த வகையிலாவது இசையை மனிதன் நேசிக்க ஆரம்பிச்சுடுறான். அது அவனுக்கே தெரியாமல்கூட இருக்கலாம். அந்த வகையில், என்னைச் சுற்றி எல்லாமே இசை மயம்தான். அம்மா தில்ருதா, சித்தார் என்கிற இசையையும் வாசிப்பாங்க. ரெக்கார்டிங்கும் பண்ணியிருக்காங்க. அதனால எனக்கும் இசை மீது எப்போதும் ஆசை. வீட்டில் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்கும்போதுகூட ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துட்டு இருப்பேன். அதேதான் இப்போ ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நடக்குது. நானும், ஸ்ருதி அக்காவும் இடைவேளைகளில் மியூச்சிகலியில எதையாவது வசனம் பேசி போஸ்ட் பண்ணுவோம். நான் தனியா இருக்கும்போதும் ஏதாவது பாடல், வசனங்களைப் பேசி போஸ்ட் பண்ணுவேன். `மியூசிக்கலி'யில நான் ஆக்டிவா இருக்கக் காரணம், என் இசை ஆர்வம்தான்!'' என்பவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் உடனே கிடைத்துவிடவில்லை.

``டி.வி, படம் பார்த்துட்டு வீட்டுல சும்மா நடிச்சுக் காட்டுவேன். எங்க வீட்ல யாரும் நடிப்புத் துறையில இல்லை. ஆனா, எனக்கு நடிப்பு மேல ஆசை அதிகமாக இருந்தது. சிங்கிள் பேரன்டா இருந்து, எங்க அம்மா என்னை எப்படியோ கஷ்டப்பட்டு வளர்த்துட்டாங்க. நடிப்புனு வரும்போது கொஞ்சம் பயந்தாங்க. அப்புறம் என்மேல இருக்கிற நம்பிக்கையில மாடலிங், நடிப்புனு அடுத்தடுத்து அனுமதிச்சாங்க. என்கூட எப்பவாவது டைம் கிடைக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட் வருவாங்க'' என்பவருக்குப் படிப்பை பாதியில் நிறுத்தியது மிகப்பெரும் வருத்தமாம்.

``ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால், அதை தடையின்றி முடிக்கணும்னு நினைப்பேன். என்னால இப்போதைக்கு முடிக்க முடியாத விஷயம்னா, அது என் படிப்புதான். ப்ளஸ் டூ முடிச்சதும், பிபிஏ சேர்ந்தேன். காலேஜ் சேர்ந்த முதல் வருடத்திலேயே நடிக்க வாய்ப்பு வந்துடுச்சு. அதனால படிப்பு முழுக்கு போட்டுட்டு நடிக்க வந்துட்டேன். பிறகு படிப்பைத் தொடரலாம்னு நினைக்கிறேன், இப்போவரை முடியல. சமயத்துல, டிகிரி முடிச்சுட்டு சினிமாவுக்கு வந்திருக்கலாமோனுகூட தோணும். இப்போதைக்கு நடிப்பு. எதிர்காலத்துல படிப்பைப் பத்தி யோசிக்கலாம்னு விட்டுடுவேன்!" என்றவர், 

``சன் டி.வியில் `அழகு', விஜய் டி.வியில் `பகல் நிலவு' இந்த ரெண்டும் என் கரியர்ல முக்கியமான சீரியல்கள். `அழகு' சீரியலில் ரேவதியின் மகளாக காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரேவதியை அம்மானுதான் கூப்பிடுவேன். கொஞ்சநாளிலேயே நல்ல `பெட்' ஆகிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கிறவங்களே, `நிஜ அம்மா, பொண்ணு மாதிரியே இருக்கீங்க!'னு பாராட்டுவாங்க. எனக்கு ரேவதி அம்மாவை அவ்ளோ பிடிக்கும். அன்பானவங்க. அடுத்த முக்கியமான ஒருத்தரைச் சொல்லணும்... `தலைவாசல்' விஜய். அவரோட பொண்ணு என்னை மாதிரியே இருப்பாங்களாம். அதனால, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எப்போவும் அவங்க பொண்ணுகிட்ட பேசுறமாதிரியே என்கிட்டேயும் பேசுவார்.

தவிர, பாரதிராஜா அங்கிளோட பையன் மனோஜ் எனக்கு `அண்ணன்' மாதிரி. அடிக்கடி சந்திச்சது கிடையாது. ஒருமுறை பார்த்துப் பேசினோம். நல்ல ஃப்ரெண்டு ஆகிட்டார். ஏதையாவது ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்சா, அவருக்கு போன் பண்ணிப் பேசுவேன். என்கூட பிறக்காத அண்ணன் அவர். கெளதமன் சாரும் அப்படித்தான். `காகிதம்' படத்தின் மூலமாதான் அவரை எனக்குத் தெரியும். அன்பானவர், நல்ல மனிதர். நிஜமாவே என்னுடைய உலகம் அன்பு சூல் உலகுதான்!" என்று புன்னகைக்கிறார், சஹானா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு