Election bannerElection banner
Published:Updated:

" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்!" ஒய்.விஜயா

" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்!" ஒய்.விஜயா
" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்!" ஒய்.விஜயா

" 'என்னை மறந்துட்டீங்களா?'னு கமல் சார்கிட்ட ஒருமுறை விளையாட்டா கேட்டேன். ''உங்களை மறக்கமுடியுமா? என்ன டான்ஸர்; என்ன பர்ஃபாமர்'னு சொன்னார்."

1970, 80-களில் தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர், நடிகை ஒய்.விஜயா. பெரிய இடைவெளிக்குப் பிறகு, சன் டிவியின் 'மின்னலே' சீரியல் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கறீங்க. இந்த இடைவெளிக்குக் காரணம்..."

"கடைசியாக, 'ப்ரியமான தோழி' படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவா நடிச்சேன். குஷ்புவுடன் நடித்த 'கல்கி', என் கடைசி சீரியல். சினிமாவில் நடிச்சு 15 வருஷமும், சீரியலில் 10 வருஷமும் ஆகிருச்சு. தமிழில் நான் நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து சென்னையில்தான் இருக்கேன். ஆனால், ஹைதராபாத்துக்கு ஷிஃப்ட் ஆகிட்டேன்னு பலரும் சொல்லிக்கிறாங்க. ஒரு போன் பண்ணி எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுட்டிருக்கலாம். அப்படி யாரும் பண்ணலை. சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துக்கிறேன். இப்போவரை தெலுங்கில் பிஸியா நடிச்சுட்டுதான் இருக்கேன்."

" 'மின்னலே' சீரியல் என்ட்ரி எப்படி நிகழ்ந்துச்சு?"

"இதுக்கு முன்னாடியே ஒரு சில சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. எனக்குப் பிடிக்கலை. 'மின்னலே' கதையும் டீமும் பிடிச்சிருந்துச்சு. பல வருஷம் கழிச்சு மீண்டும் தமிழில் நடிக்கிறதில் ரொம்ப சந்தோஷம். இதில் நடிக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசம்தான் ஆகுது. சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு ஒரு வாரம்தான் ஆகுது. 'ரொம்ப நாள் கழிச்சு உங்க நடிப்பைப் பார்க்கிறோம்'னு பலரும் சொன்னாங்க. மக்களின் இந்த அன்பு, கடைசி வரை கிடைக்கணும். நடிச்சுட்டிருக்கும்போதே என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன்."

"தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நினைவுகள் பற்றி..."

"என் பூர்விகம், ஆந்திரா. டான்ஸ் கத்துக்க ஆசைப்பட்டு, சின்ன வயசுல சென்னைக்கு வந்தேன். அரங்கேற்றம் முடிச்சுட்டு, சினிமாவுல நடிக்க முயற்சி எடுத்தேன். 'வாணி ராணி' படத்தில் சின்ன ரோல்ல நடிச்சேன். தெலுங்கில் ஹீரோயினா நடிச்ச பல படங்கள் பெரிய ஹிட். அதன்பிறகுதான், பாலசந்தர் சாரின் 'மன்மத லீலை' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. படம் பெரிய ஹிட். 'நவரத்தினம்', 'புண்ணிய பூமி', 'மூன்று முடிச்சு', 'ஆறு புஷ்பங்கள்', 'பைரவி' எனப் பல படங்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பெரிய ஹீரோக்களுடன் நடிச்சேன்."

" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கடைசியா எப்போது கேட்டீங்க?"

(பலமாகச் சிரிப்பவர்), " 'மன்மத லீலை' படத்தில் வரும் இந்தப் பாடல், ரொம்ப ஃபேமஸ். எங்கே போனாலும் இந்தப் பாடல் ஒலிக்கும். எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் இந்தப் பாடலின் சில வரிகளை என்னிடம் பாடிக் காட்டுவாங்க. நானும் அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்பேன். அப்போது, அந்த ஷூட்டிங் டைம், கமல்ஹாசன் சாருடன் நடிச்ச நினைவுகள் வரும். 'சிங்காரி சரக்கு' பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்தப் பாட்டும் பெரிய ஹிட். எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அதனால், ரொம்ப சந்தோஷமா ஆடினேன். மக்களால் ரொம்பவே ரசிக்கப்பட்டது. 'அபிராமி' என்கிற சீரியலில், கெளதமியுடன் இணைந்து நடிச்சேன். அப்போ, கமல் சாரை சந்திச்சேன். 'என்னை மறந்துட்டீங்களா சார்?'னு விளையாட்டா கேட்டேன். ''உங்களை மறக்கமுடியுமா? என்ன டான்ஸர்; என்ன பர்ஃபாமர்'னு சொன்னார். ரஜினி சாரும் என்னை எங்கே பார்த்தாலும் நல்லா பேசுவார். என் பொண்ணு கல்யாணத்துக்கு ரஜினி சாருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்தேன். அவர் வெளியூர் போகவேண்டிய சூழல் ஏற்பட்டதால், சீர்வரிசைப் பொருள்களை அனுப்பிவெச்சார்."

"குடும்ப வாழ்க்கை பற்றி..."

"கணவர் அமலநாதன், காலேஜ் முதல்வர் மற்றும் தாளாளரா இருந்து ரிட்டயர்மென்ட் வாங்கிட்டார். என் ஒரே பொண்ணு அனுஷ்யா, கல்யாணமாகி ஃபாரீன்ல வசிக்கிறாங்க. 1984-ம் ஆண்டு, தெலுங்கில் ரொம்ப பிஸியா இருந்தேன். 1985-ல் திருமணம் ஆனபோது, தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. ஹீரோயினா நடிச்சுட்டிருக்கும்போதே, கிளாமர் ரோல்களிலும் நடிச்சேன். ஒருகட்டத்தில், கேரக்டர் ரோல்கள் வர ஆரம்பிச்சது. நெகட்டிவ் ரோல்களும் நிறைய பண்ணினேன். குறிப்பிட்டு ஒரு கேரக்டர் பிடிக்கும்னு சொல்லமுடியலை. எல்லாமே பிடிக்கும். எல்லா மொழிகளிலும் சேர்த்து, 700 படங்களுக்கு மேலே நடிச்சாச்சு." 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு