Published:Updated:

``அலோ... நான் சயின்டிஸ்ட்!’’ - `நாயகி’ வித்யா

``அலோ... நான் சயின்டிஸ்ட்!’’ - `நாயகி’ வித்யா
``அலோ... நான் சயின்டிஸ்ட்!’’ - `நாயகி’ வித்யா

நாயகி தொடரின் என்ட்ரி குறித்து `ஆனந்தி' வித்யா பேசுகிறார்

``இப்ப வரைக்கும் சுமார் இருபது படங்கள் நடிச்சிருப்பேன். கன்னடத்துல் சிவ்ராஜ்குமார் ஜோடியாக் கூட நடிச்சிட்டேன். ஆனா இதுவரை இண்டஸ்ட்ரியில என் பேரு வித்யாதான். முதன்முதலா `நாயகி' மூலமா சீரியலுக்கு கமிட் ஆகி இருபது நாள்தான் கடந்திருக்கும், பொது இடத்துல பார்க்கிற மக்கள், `எப்படி இருக்கீங்க ஆனந்தி'ன்னு கேக்கறாங்க. இந்த அனுபவம் எனக்குப் புதுசாகவும் ஆச்சர்யப்பட வைக்கிறதாகவும் இருக்குது...'' என வியந்து பேசுகிறார் வித்யா. `நாயகி' தொடரின் நாயகி.

`வித்யா டூ நாயகி' லைஃப் ஜர்னியைப் பேசலாமா' என்றதும் உற்சாகமானார்... ``கேரளா, ஆலப்புழா என்னோட ஊரு. அப்பா ரிட்டயர்டு மிலிட்டரி ஆபீஸர். பயோ டெக்னாலஜியில பி.எச்.டி முடிச்சதும், பிரபலமான நிறுவனத்துல ஜூனியர் சயின்டிஸ்ட் வேலை கிடைக்க, எனக்காகக் குடும்பமே சென்னைக்கு வந்திடுச்சு.

படிச்ச படிப்புக்கு வேலை, கை நிறைய சம்பளம்னு ஒரு லெவல்ல மனசு செட்டில் ஆகும்னு பார்த்தா, ஏதோ ஒண்ணு மிஸ் ஆகற மாதிரியே ஃபீலிங். நடிக்கலாம்னு முடிவு பண்ணி, போர்ட்ஃபோலியோ எடுத்து சில இடங்களுக்கு அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு விளம்பரப்படங்கள்ல நடிக்க கூப்பிட்டாங்க. சாரிஸ், ஜுவல்லரி விளம்பரங்கள்னு சில பெரிய நிறுவனங்களுக்குப் பண்ணினேன். அந்த விளம்பரங்கள் `சைவம்' படத்துல கேரக்டர் ரோல் வாங்கித்தர, சினிமாவுல என்ட்ரி ஆகியாச்சு. அடுத்து `பசங்க 2' படத்துல அம்மா ரோல் கிடைச்சது. `ஆரம்பத்துலயே அம்மா கேரக்டரா'ன்னு சிலர் கேட்டாங்க. என்னைப் பொறுத்தவரை விளம்பரம், சினிமா, சீரியல், வெப் சீரிஸ் எதுவா இருந்தாலும் நடிப்புங்கிறது ஒண்ணுதான். இப்போ ஒரு வெப் சீரிஸ்கூட கமிட் ஆகியிருக்கேன்'' என்றவரிடம், `நாயகி' என்ட்ரி குறித்துக் கேட்டேன்.

``கடந்த சில வருடங்களாவே சீரியலுக்கு கேட்டுட்டே இருந்தாங்க. சினிமா, விளம்பரம் இன்னொரு பக்கம் சயின்டிஸ்ட் வேலையையும் விடாம இருந்த சூழல்ல சீரியல் கமிட் பண்ணத் தயக்கமா இருந்தது. என்னைப் பொறுத்தவரை நைன் டூ ஃபைவ் ஆஃபீஸ் போனாலும் சரி, சினிமா, விளம்பர ஷூட்டிங் போனாலும் சரி, 100 % உழைப்பைத் தந்துடணும். அதனால எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டுச் சமாளிக்க முடியுமான்னு யோசிச்சிட்டிருந்த நேரத்துலயே நிறைய வாய்ப்புகள் மிஸ் ஆகிடுச்சு. ஆனா, விகடன், சன் டிவிங்கிற பெரிய நிறுவனங்களோட சேர்ந்து வொர்க் பண்ண வாய்ப்பு கிடைக்கறப்ப விட முடியுமா. அதனால யோசனையை இழுக்காம ஒரே நாளில்  முடிவெடுத்து ஓ.கே. சொல்லிட்டேன். தமிழ்ப் பேசுற ஒவ்வொரு வீட்டுலயும் வாரத்துல ஆறு நாள் குடும்பத்தோட டிவி முன்னாடி உட்கார்ந்திருக்கிற பிரைம் டைம்ல நாம அவங்களோட தொடர்புல இருக்கோம்கிறது எவ்வளவு பெரிய விஷயம். நான் இந்த ஆங்கிள்லதான் யோசிக்கிறேன். எனக்கு இந்த டிவி , சினிமாங்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது .

அதேபோல இன்னும் ரெண்டு விஷயம் இருக்கு. சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஷூட்டிங் கிளம்பி வந்துட்டா அங்கேயும் இன்னொரு ஃபேமிலி இருக்குற ஃபீலிங்தான். எல்லா ஸ்பாட்டுமே இப்படித்தான் இருக்குமா அல்லது `நாயகி' ஸ்பெஷலானு நினைச்சுப் பார்க்கிறேன். ஆனா எனக்கு அமைஞ்ச முதல் சீரியலோட ஷூட்டிங் ஸ்பாட் அனுபவமே செம மாஸா இருக்குறனால, அடுத்தடுத்து சீரியல்களை கமிட் பண்ணலாம்னு நினைக்கத் தூண்டுது.

``அப்பா மிலிட்டரி ஆபீஸர்ங்கிறதால சின்ன வயசுல இருந்தே தைரியமான பொண்ணாகவே என்னை வளர்த்தாங்க. ஸ்கூல் படிக்கிறப்பவே கேரளாவுல இருந்து மும்பைக்கு தனியா ட்ரெய்ன்ல போய் வந்திருக்கேன். அப்படிப்பட்ட குடும்பமே என்னோட சினிமா, மீடியா என்ட்ரிக்கு க்ரீன் சிக்னல் தர ரொம்பவே யோசிச்சது. `இதெல்லாம் எதுக்கு'ன்னாங்க. ஆனா அப்பாவே இப்ப `நாயகி'யை ஒரு நாள் விடாம பார்த்துடுறார். அவங்க ஆதரவு எனக்கு முழுசாக் கிடைச்சிடுங்க'' என்கிறார் வித்யா.

அடுத்த கட்டுரைக்கு