Published:Updated:

``என் எடையை நான் சுமக்கிறேன்...கேலி செய்றவங்க பத்தி ஐ டோன்ட் கேர்!" - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

``என் எடையை நான் சுமக்கிறேன்...கேலி செய்றவங்க பத்தி ஐ டோன்ட் கேர்!" - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
``என் எடையை நான் சுமக்கிறேன்...கேலி செய்றவங்க பத்தி ஐ டோன்ட் கேர்!" - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

``என் எடையை நான் சுமக்கிறேன்...கேலி செய்றவங்க பத்தி ஐ டோன்ட் கேர்!" - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

`தன் ராஜகுமாரனுக்காகக் காத்திருக்கிறாள் இந்த ராஜகுமாரி' - ஜீ தமிழ் `ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சீரியல் ப்ரொமோவில், குண்டுப் பெண் ஹீரோயினைப் பார்த்த பலரும் புருவம் உயர்த்தினார்கள். `இவங்கதான் ஹீரோயினா..?!' என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்கள். சிவப்பான தோற்றம், செய்துவைத்ததுபோன்ற உடல்வாகு என்றே கதைநாயகிகளைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு, அந்தக் கட்டமைப்பை உடைத்துத் தள்ளி, தமிழ் சீரியல் வரலாற்றில் போல்டு ஸ்டெப் வைத்திருக்கிறார், அஸ்வினி. தன்னுடைய உடல் குறித்து வருகிற விமர்சனங்களை தன்னம்பிக்கையுடன் கடப்பவருடன் ஓர் உரையாடல்.


``ஜிம், டயட்னு எந்தப் பழக்கங்களும் இல்லையா?" 
``உடல் ஆரோக்கியத்துக்காக தினமும் ஒரு மணி நேரம் யோகா பண்றேன். சமயங்களில், நேரம் கிடைக்கிறப்போ ஷூட்டிங்  ஸ்பாட்லகூட செய்றதுண்டு. ஆனா, ஜிம் போனதில்லை. சாப்பிடாம இருக்கிற டயட்டை என்னால நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது. சரிவிகித உணவு சாப்பிடுற டயட்தான் எனக்குத் தெரியும். ஒரு சாப்பாட்டுக் காதலியா, ருசியான, ஆரோக்கியமான உணவுகளை நல்லா சாப்பிடுவேன். நான் பருமனா இருந்தாலும் என் உடம்பில் கெட்ட கொழுப்பு எதுவும் இல்லை. ஆரோக்கியமா இருக்கேன். வருஷத்துக்கு ஒருமுறை நான் எடுக்கிற மாஸ்டர் ஹெல்த் செக்கப், `எல்லாம் நார்மல், நீ ஹெல்தியா இருக்கிற அஸ்வினி'னு என்னைத் தட்டிக்கொடுக்குது.'' 


``அஸ்வினி பர்சனல்..?"
``திருமணத்துக்கு முன்னாடியும் நான் இப்படிதான் இருந்தேன். என் கணவர், `ஐ லவ் யூ அழகி'னு சொல்லி என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இதுவரை அவர், `கொஞ்சம் வெயிட்டை குறைக்க ட்ரை பண்ணு'னு எல்லாம் ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. இந்த சீரியல் வாய்ப்பு வந்தப்போ, கேமரா என்றால் எனக்கு என்னன்னே தெரியாது. சொல்லப்போனா, இது ஒரு ரிஸ்க்கி முயற்சிதான். என் கணவரும் குடும்பமும்தான், `உன்னால முடியும்'னு என்னையவே என்னை நம்பவெச்சாங்க.'' ``உங்க எடையாலேயே இன்னைக்கு நீங்க ஹீரோயின் ஆகியிருக்கிற இந்த சந்தோஷம் எப்படியிருக்கு?"
``பருமனா இருக்கிற பெண்கள், தங்கள் உடல் பற்றி தங்களிடம் இருக்கிற தயக்கத்தை உடைச்சுப் போடணும். புறம் மட்டும்தான் அழகு என்ற எண்ணத்தைத் தூக்கிவீசணும். மனசு, திறமை, தைரியம், விடாமுயற்சினு ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வோர் அழகம்சம் இருக்கும். அதை நினைச்சு நம்மை நாம் முதல்ல அங்கீகரிக்கணும். அந்த ஆட்டிட்யூடை இன்னும் சிறப்பா வெளிப்படுத்தும்போது, இந்தச் சமூகமும் நம்மை அங்கீகரிக்க ஆரம்பிக்கும். என் சீரியலைப் பார்த்துட்டு, `குண்டா இருக்கிறதால என் மேல எனக்குப் பரிதாபமும், கோபமும் மாறி மாறி வரும். ஒரு சீரியல்ல ஹீரோயினா என்னை மாதிரியே ஒரு பொண்ணைப் பார்க்கும்போது, `அப்போ நாமளும் ராஜகுமாரிதான்'னு முதன்முறையா என்னை நான் நேசிச்சேன். கிண்டல் பண்றவங்களை எல்லாம் இனி கண்டுக்காம போய்க்கிட்டே இருக்கணும்னு முடிவெடுத்திருக்கேன்'னு பல பெண்களும், புத்தம் புதுசா அவங்ககிட்ட சேர்ந்திருக்கிற தன்னம்பிக்கையோட மெசேஜ் அனுப்புறாங்க. அவங்களைப் பார்த்து, எனக்கும் இன்னும் எனர்ஜி கூடுது.''  

``உடல் எடையைக் குறைக்க நினைக்கலையா?"
``அழகுக்காக இல்ல, ஆரோக்கியத்துக்காக அதை நான் செய்ய முயல்வேன். ஆனா, பாடி ஷேமிங் பண்றவங்களுக்கு என்னோட பதில் இதுதான்... இது என் உடம்பு, என்னோட எடையை நான் சுமந்துட்டு இருக்கேன், உங்க கேலிகளுக்கு ஐ டோன்ட் கேர்.''  

அடுத்த கட்டுரைக்கு