Election bannerElection banner
Published:Updated:

’சிரிச்சா போச்சு’ டீம்... சின்னத்திரை ஹீரோயின்ஸ்... சரவணா அண்ணாச்சியின் தீபாவளி சர்ப்ரைஸ்!

’சிரிச்சா போச்சு’ டீம்... சின்னத்திரை ஹீரோயின்ஸ்... சரவணா அண்ணாச்சியின் தீபாவளி சர்ப்ரைஸ்!
’சிரிச்சா போச்சு’ டீம்... சின்னத்திரை ஹீரோயின்ஸ்... சரவணா அண்ணாச்சியின் தீபாவளி சர்ப்ரைஸ்!

’சிரிச்சா போச்சு’ டீம்... சின்னத்திரை ஹீரோயின்ஸ்... சரவணா அண்ணாச்சியின் தீபாவளி சர்ப்ரைஸ்!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், ஹன்சிகா - தமன்னாவுடன் நடித்த விளம்பரம், ’பெஸ்ட் பெஸ்ட்’ என டான்ஸ் ஆடிய விளம்பரம், ஆறு கெட்டப்பில் ஃபாரின் அழகிகளுடன் நடித்த விளம்பரம் என அவர் நடித்த அனைத்து விளம்பரங்களும் சமூக வலைதளத்தில் செம வைரல்.

'தீபாவளி வரப்போகுது... புதுசா என்ன விளம்பரம் வரும்...’ என எதிர்பார்ப்பவர்களுக்கு, சரவணா அண்ணாச்சி செம சர்ப்ரைஸ் ஒன்று வைத்திருக்கிறார். அவர் நடிச்சாலே அந்த விளம்பரம் வைரல்தான். இதில் வைரலாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களையும் தன் கடை விளம்பரத்தில் நடிக்கவைத்திருக்கிறார்.

’சிரிச்சா போச்சு’ டீமில் இருக்கும் ராமர், வடிவேல் பாலாஜி, அசார், விஜய் டி.வி ரியோ மற்றும் சீரியல் ஹீரோயின்ஸ் என ஒரு பட்டாளமே தீபாவளி விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.  சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் ஆஸ்தான இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரிதான் இந்த விளம்பரத்தையும் இயக்கியிருக்கிறார்கள். பிருந்தா மாஸ்டர் இந்த விளம்பரத்துக்கு கோரியோகிராஃபி செய்திருக்கிறார். 

இந்த விளம்பரத்தில் நடித்த அனுபவம் பற்றி அசாரிடம் கேட்டபோது, ‘ நான் ஏற்கெனவே இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி எடுத்த சில விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். ஆனால், அது எல்லாமே சில குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் ஒளிப்பரப்பாகுற விளம்பரங்கள். ஆனால் இந்தமுறை, தமிழ்நாடு முழுக்க ஒளிப்பரப்பாகுற விளம்பரத்தில் நடிச்ச வெச்சிருக்கார்; அதுவும் ட்ரெண்டிங் ஸ்டார் சரவணா அண்ணாச்சியோடு நடிக்க வெச்சிருக்கார். அண்ணாச்சி செம டைப். சத்தமா பேச மாட்டார்; ஷூட்டிங் டைம்ல உட்காரக்கூட மாட்டார். செம எனர்ஜியா எல்லா ஷாட்டிலும் நடிச்சார். உண்மையாகவே இது மறக்க முடியாத அனுபவம்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு