Published:Updated:

``மும்தாஜ் ரசிகர்கள் எங்களைச் சிலிர்க்க வெச்சிட்டாங்க!" - `பிக்பாஸ்' ரம்யா 

``மும்தாஜ் ரசிகர்கள் எங்களைச் சிலிர்க்க வெச்சிட்டாங்க!" - `பிக்பாஸ்' ரம்யா 
``மும்தாஜ் ரசிகர்கள் எங்களைச் சிலிர்க்க வெச்சிட்டாங்க!" - `பிக்பாஸ்' ரம்யா 

``மும்தாஜ் ரசிகர்கள் எங்களைச் சிலிர்க்க வெச்சிட்டாங்க!" - `பிக்பாஸ்' ரம்யா 

பிக்பாஸ் வீட்டில் மனம் கவர்ந்த போட்டியாளர்களுள் மும்தாஜும் ஒருவர். மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் `எங்களுடைய மனம் கவர்ந்த போட்டியாளர் மும்தாஜ்' எனப் பதிவிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், நேற்று முன் தினம் திருவள்ளூரில் வைத்து `மும்தாஜ் ரசிகர் மன்றம்' சார்பாக மக்கள் மனதை வென்றதற்காக `people's Winner' என்கிற விருதைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களான ரம்யா, வைஷ்ணவி, மமதிசாரி, ஆரத்தி போன்றவர்களுடன் மும்தாஜுக்கு மிகவும் பிடித்த கலா மாஸ்டரும் கலந்துகொண்டிருக்கிறார். இதுகுறித்து தெரிந்து கொள்ள ரம்யாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

பட உதவி : Scube Studio

``அவங்களுடைய ரசிகர்கள் இந்த விருதைக் கொடுக்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்த அழகான நிகழ்ச்சியில் கலந்துக்க எங்களையும் கூப்பிட்டதுக்கு முதல்ல நன்றி. பிக்பாஸ் வீட்டுல என்னை அடிக்கடி `ஒன்றா இரண்டா ஆசைகள்' பாட்டை பாடச் சொல்லி மும்தாஜ் கேட்பாங்க. அவங்களுக்காக நான் அந்தப் பாடலைப் பாடினேன். என்கூட சேர்ந்து மும்தாஜூம் பாடினாங்க. அவங்களுடைய ரசிகர்கள் அவங்க பாடவும் அவ்வளவு உற்சாகமாகக் கைதட்டினாங்க. ரொம்ப அழகான நிகழ்வா இருந்துச்சு என்றார்.

`அவரிடம் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன அனுபவம் எப்படி இருந்தது என்றதும்?'

மறுபடியும் நானும், வைஷ்ணவியும் சேர்ந்து அந்த வீட்டுக்குள்ள போனது பயங்கர ஹாப்பி. பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்தப்போ எப்படா வெளியில போவோம்னு இருந்துச்சு. வெளியில் வந்ததும் ரொம்பவே அந்த வீட்டை மிஸ் பண்ணினேன். அந்த வீட்ல நான் உட்கார்ந்து பழைய நல்ல நினைவுகளை நினைச்சிட்டு இருந்தேன். மறுபடியும் நல்ல அனுபவத்தை அந்த வீடு கொடுத்திருக்கு என்றார்.

`நீங்க யாரு டைட்டில் வின் பண்ணணும்னு விரும்புறீங்க'ன்னு கேட்டோம்.

``எனக்கு ரித்விகா வின் பண்ணணும்னு ஆசை'' என்றார், ரம்யா.

அடுத்த கட்டுரைக்கு